Thursday, July 21, 2011

நியூசிலாந்தில் 134 நாட்கள் உணவின்றி உயிர் வாழ்ந்த தங்கமீன்கள்...


வெல்லிங்டன்: நியூசிலாந்தில் 2 தங்க நிற மீன்கள் உணவின்றி 134 நாட்கள் உயிருடன் இருந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.நியூசிலாந்து கிரைஸ்ட்சர்ச்சில் உள்ளது குவாண்டம் சார்டர்ட் அக்கௌண்டன்ட்ஸ் அலுவலகம். அதன் வரவேற்பு அறையில் 100 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் ஒரு மீன் தொட்டியில் ஷாகி, டாப்னி என்று பெயரிடப்பட்ட 2 தங்க நிற மீன்கள் உள்ளன. அன்மையில் நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு 181 பேர் பலியாகினர். அந்த நிலநடுக்கத்திற்கு பிறகு இந்த மாதம் தான் குவாண்டம் சார்டர்ட் அக்கௌண்டன்ட்ஸ் ஊழியர்கள் பணிக்குத் திரும்பினர். அலுவலகத்திற்குள் நுழைந்தவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிட்டனர். காரணம் கடந்த 134 நாட்களாக யாருமே அலுவலகம் வராத நிலையில் உணவின்றி அந்த 2 தங்க நிற மீன்கள் உயிருடன் உள்ளன.இது குறித்து கலிபோர்னியாவின் மாண்டரே பே அக்வாரியத்தின் மேற்பார்வையாளர் பால் கிளார்க்சன் கூறுகையில், "அந்த மீன் தொட்டியில் இருந்த பாக்டீரியா தண்ணீரை சுத்தமாக வைத்திருந்திருக்கக்கூடும். மீன்கள் அந்த தொட்டியில் வளர்ந்த நீர்ப்பாசியை உண்டு உயிர் வாழ்ந்திருக்கும். ஆனால் அதே தொட்டியில் இருந்த மேலும் 3 தங்க நிற மீன்கள் இருந்த அறிகுறியே இல்லை," என்றார்.



0 comments:

Post a Comment