Showing posts with label Popular Post. Show all posts
Showing posts with label Popular Post. Show all posts

Wednesday, August 27, 2014

பலாத்காரங்களைத் தடுக்கக் கூடிய ஜீன்ஸ் ஒன்றை தயாரித்து இந்தியப் பெண்கள் சாதனை...


இந்தியாவில் அடிக்கடி கற்பழிப்புகள் இடம்பெற்றுவவதை நாம் செய்திகள் ஊடாக அறிந்து வருகிறோம். இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு 22 நிமிடத்திற்கும் ஒரு கற்பழிப்பு நடைபெற்று வருகிறது என்று அதிரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பெண்களை கட்டாய பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முடியாத ஜீன்ஸ் ஒன்றை இந்தியப் பெண்கள், தயாரித்துள்ளார்கள்.
டீக்சா(21) மற்றும் அஞ்சலி (23) ஆகிய இரண்டு இளம் பெண்களே இந்த ஜீன்ஸை தயாரித்துள்ளார்கள். குறிப்பிட்ட ஜீன்ஸை தேவையற்ற விதத்தில் களற்ற முற்பட்டால், அதனை உடனடியாக களற்ற முடியாது. அத்தோடு அதில் உள்ள பட்டன் ஒன்றை அழுத்தினால், அது ஆபத்து சமிஞ்சைகளை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பும் வகையில் இந்த ஜீன்ஸ் அமைந்துள்ளது.

இந்த வடிவமைப்பை பலர் வரவேற்றுள்ளார்கள். பொலிசார் பாவிக்கும் வாக்கிடோக்கியின் சிக்னலை பாவித்தே இது ஆபத்து சமிஞ்சைகளை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு இது அனுப்புகிறது. இந்தவகையான ஜீன்ஸை தனியாகச் செல்லும், பெண்கள் பாவிப்பது நல்லது என்று கூறப்படுகிறது.
இரவுவேளைகளில் மற்றும் தூர இடங்களுக்கு செல்லும் பெண்கள் இந்த ஜீன்ஸை நிச்சயம் அணிவார்கள் என்று எதிர்வு கூறப்படுகிறது. சட்டம் ஒழுங்கு சீர் குலைந்தால் , எப்படி எல்லாம் பொருட்களை தயாரிக்கவேண்டி உள்ளது பார்த்தீர்களா ?

அஞ்சான் படத்தில் பிகினியில் மிரளவைத்த சமந்தா--விரட்டும் ரசிகர்கள்...

சூர்யா, சமந்தா நடிப்பில் வெளியான படம் அஞ்சான். இப்படம் பலர் தரப்பிலிருந்து படத்திற்கு எதிரான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. எல்லா விமர்சனத்திலும் சமந்தாவின் கவர்ச்சியை பற்றி தான் பேச்சு.

தமிழில் இதுவரை நடித்த படங்களில் கவர்ச்சிக்கு கடிவாளம் போட்டிருந்த சமந்தா அஞ்சான் படத்திற்கு தாராளம் காட்டியிருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன் சமந்தா பிகினி உடையில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியது. கோபமான சமந்தா, "அதை யாரும் நம்ப வேண்டாம்,
நான் ஒரு போதும் அப்படி நடிக்கமாட்டேன்" என்று ட்விட் செய்தார். ஆனால் வெளியான அஞ்சான் படத்தில் பிகினியில் வருவது போல் ஒரு காட்சி வர ரசிகர்கள் தொடர்ந்து அவரிடம் ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.








100 வயது பாட்டிக்கு 120 பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள்...

 பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கொள்ளுப் பேரப்பிள்ளைகள் என 120 பேரை கண்ட பெண்மணி ஒருவர் பற்றிய செய்தி பொலன்நறுவை பிரதேசத்தில் இருந்து கிடைத்துள்ளது.
இந்த பெண்மணி ஹிங்குரக்கொட ஹத்தமுனகொட்டுவேல பிரதேசத்தில் வசித்து வருகிறார். 100 வயதாகும் இந்தபெண்மணிக்கு 11 பிள்ளைகள்.
இவரது மூத்த மகனுக்கு 81 வயது. டி.ஏ. கருணாவதி என்ற இந்த பெண்மணியின் கணவர் 41 வருடங்களுக்கு முன்னர் காலமானார்.
100 வயதாகும் கருணாவதி சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.







Saturday, August 23, 2014

நல்லூர் கந்தனுக்கு தேர் திருவிழா. (படங்கள்-வீடியோ இணைப்பு)

நல்லூர் கந்தன் ஆலயத்தில் இன்று(23-08-2014) தேர் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்லாயிரக் கணக்கான மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் நல்லூர் கந்தனை தரிசித்து நல்லூர் கந்தனின் அருளை வேண்டுவதற்காக இங்கு வந்திருந்தனர்.

























மூன்று பிரசவங்களில், ஏழு ஆண் குழந்தைகள்!!! - கொழும்பில் விநோத சம்பவம்...

முதல் இரண்டு பிரசவங்களின் போதும் இரட்டை சிசுக்களை பெற்ற பெண்ணொருவர் தனது மூன்றாவது பிரசவத்தில் மூன்று சிசுக்களை பிரசவித்த விநோத சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. 

கொழும்பு, மருதானையை சேர்ந்த பாத்திமா நிரோஷா என்ற 31 வயதுடைய பெண்ணே இவ்வாறு தனது முன்றாவது பிரசவத்தின் போது 3 ஆண் சிசுக்களை பெற்றுள்ளார். இப்பெண் ஏற்கனவே முதலாவது பிரசவத்தில் இரட்டை சிசுக்களை பிரசவித்துள்ளதுடன் இரண்டாவது பிரசவத்திலும் இரட்டை சிசுக்களை பெற்றார். இந்நிலையிலே மூன்றாவது பிரசவத்திலும் அவர் மூன்று சிசுக்களை பிரசவித்துள்ளார்
டி சொய்சா பிரசவ வைத்தியசாலையிலே இவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. இவரது முதல் இரண்டு பிள்ளைகளுக்கும் தற்போது 15 வயதாகிறது.
சாஹிர் அப்துல் கரீம், பாத்திமா நிரோஷா தம்பதிக்கு தற்போது மொத்தமாக 7 ஆண் பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பாத்திமா நிரோஷா உலகிலேயே மூன்று பிரசவங்களின் போதும் அதிகமான எண்ணிக்கையில் சிசுக்களை பெற்றவர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்கக்கூடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தற்போது, தாயும் சிசுக்களும் நலமாக உள்ளதாக டி சொய்சா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் எபோலா வைரஸால் பெண்ணொருவர் மரணம்...???

கண்டியைச் சேர்ந்த பெண்ணொருவர் எபோலா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.  கண்டி, ரிக்கிலகஸ் கடையைச் சேர்ந்த பெண்ணொருவர் இந்தியாவுக்குச் சென்று திரும்பிய நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், உலகை பீதியடைய வைத்துக் கொண்டிருக்கும் எபோலா வைரஸ் இவருக்கு தொற்றியிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. 
 இதன் காரணமாக அப்பெண்ணின் சடலத்திலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இவருக்கு எபோலா வைரஸ் தொற்றியிருக்கின்றதா என்பது தொடர்பில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை, 
அவருடைய சடலம் தாங்கிய சவப்பெட்டி சீல் வைக்கப்பட்ட நிலையில் சுமார் எட்டு அடி குழித் தோண்டி புதைக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும் எண்ணெய்...

தேங்காய் எண்ணெய் - 1 கப்   
மலர்ந்த மகிழம் பூ, செண்பகப் பூ - 1 கப் 

இவற்றை தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சவும். அதுவே திரவத் தைலமாக மாறியவுடன் அதை ஆற வைத்து வடிகட்டவும். பின்பு, லேசாக சுடவைத்து உள்ளங்கால், பாதம், நகங்கள், கைகள், கழுத்துப் பகுதி… என உடல் முழுவதும் நன்கு தேய்த்துக் கொள்ளவும்.
சூடு குறைவாக இருந்தால் மீண்டும் சிறிது தைலத்தை சூடு செய்து முகத்தில் மூக்கு, கண்களில் பூசி, முகமெங்கும் சிறிது பேஷியல் ஸ்ட்ரோக் கொடுத்து பரவலாக எண்ணையை தடவவும். பின்னர், மீதமுள்ள எண்ணையை தலைமுடியில் நன்கு மாலிஷ் செய்து சீவி விடும் போது, நுனிப்பிளவு இல்லாமல், முடி செழுமையாக வளரும்.
தைலம் தேய்த்து 10 நிமிடம் ஆனபின், வெது வெதுப்பான நீரில் உச்சி முதல் உள்ளங்கால் வரை பயத்தம் மாவு அல்லது மூலிகை சோப் கொண்டு குளிக்கவும். இதை தினசரி பழக்கத்தில் கொண்டு வந்தால் சருமம் உஷ்ணத்தினாலும், குளிர்ச்சியாலும் பாதிக்காமல் இருக்கும். நல்ல பளபளப்புடன் கூடிய பொலிவும் பெறலாம்.
பாதாம் ஆயில் – 1 கப்
மரிக்கொழுந்து – 1 கப்
மரிக்கொழுந்து இலைகளை மட்டும் ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். அதில் பாதாம் ஆயிலைக் கலந்து காய்ச்சி வடிகட்டவும். இந்த எண்ணையை தினமும் முதலில் தலையில் நன்கு தேய்த்து தலைமுடியை ஐந்து நிமிடம் சீவி தலைமுடியை நன்கு கட்டவும். பிறகு, முகம், கழுத்துப் பகுதிகளில் தைலத்தை பூசவும். தினமும் காலையில் இது போன்று செய்வதை பழக்கப் படுத்திக் கொள்ளவும். பின்னர், மீதமுள்ள தைலத்தை உடலெங்கும் பூசிக் குளித்து வந்தால், தலை முடி மற்றும் சருமம் நன்கு புத்துணர்ச்சியுடனும் வாசனையுடனும் விளங்கும்

Friday, August 22, 2014

ANJAAN OFFICIAL TRAILER | Soorya | Samantha | Anjaan Tamil Movie Trailer

Movie - Anjaan 
Starring - Suriya, Samantha, Vidyut Jamwal
Director - N. Lingusamy
Music - Yuvanshankar Raja
Producer - N.Subash Chandrabose & Siddharth Roy Kapur 
Studio - Thirrupathi Brothers & UTV Motion Pictures
Music Label - Sony Music Entertainment India Pvt Ltd.




Kaadhal Kilukiluppu HD Movie - Full length Tamil Cinema


Tamil film Kaadhal Kilukiluppu is a Romantic love story, couple of young lovers have been met with an accident and separated in different locations, they undergo difficult situations without loosing their hope to meet their lover.

Thursday, August 21, 2014

Mathapoo Tamil Movie-HD

Mathapoo is a Tamil Movie, A colourful love subject with family entertainment.
Karthik (Jeyan) is a fun-loving youngster from Tiruchy. He comes to Chennai to stay in her aunt's (Sithara) house. He meets Pooja (Gayathri). He falls for her instantly. She is quiet and dull. She happens to work under Sithara. Pooja's parents (Kitty and Geetha) pray that she becomes normal. A flashback reveals the reason why Pooja has become a dull girl from being a bubbly and a chirpy one. The onus is on Karthik to set things right and win her heart.

Cast : Gayathri, Jayan, Ilavarasu, Geetha, Sithara, Renuga
Music : K Velayutham, Background Score Sabesh Murali
Direction : Dhinanthorum Nagaraj
Banner : Vinayaka Productions






அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா? இதோ 10 வழிகள்....

இன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும் பாடுகளை சொல்லி மாளாது. இந்த குறையை தீர்க்க ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் இதோ சில குறிப்புகளை கொடுக்கிறோம்.பயன் பெறுங்கள்.


சரியாக சாப்பிடுதல்

சரியான முறையில் சாப்பிட்டால் 80% கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு முறையை பின்பற்றும் போது இதை நாம் சாதிக்க முடியும். தேவையான அளவு நுண் மற்றும் பெரும ஊட்டச் சத்துக்களை சாப்பிட்டால் கொழுப்பை குறைக்க முடியும். இடை உணவுகள், துரித உணவுகள் ஆகிய கடைகளில் வாங்கும் உணவுகளை அறவே தவிர்த்தால் தடியான வயிறை தட்டையான வயிறாக மாற்ற முடியும். இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள், வேக வைத்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.
தண்ணீர்

தாகம், அயர்ச்சி, பசி ஆகியவற்றைப் பற்றி தெளிவாக உணராத சிலர் பசிக்கும் போது நிறைய சர்க்கரை கொண்ட உணவை உண்டு எடையை தங்களை அறியாமலேயே அதிகப்படுத்திக் கொள்கின்றனர் ,அல்லது கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவை பசியில் விரைந்து உண்கின்றனர். இது தவறு. எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். குறைந்தது 6 முதல் 8 டம்ப்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். ஆனால் இது உங்கள் எடை மற்றும் வாழ்க்கை முறையை சார்ந்த விஷயமாக அமைகின்றது. இதை கண்டறிந்து உங்களுக்கு தேவையான தண்ணீரின் அளவை கண்டறிந்து அதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
உடற்பயிற்சி

பல மணி நேரம் உழைப்பு மற்றும் வெகு தூர ஓட்டப் பயிற்சி ஆகிய இரண்டும் தரும் பலன்களை விட சிறிது நேரம் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கொழுப்பு அதிகமாக குறையும். உதாரணமாக நீங்கள் திரெட் மில்லில் பயிற்சி மேற்கொள்ளும் போது அவ்வப்போது உங்கள் வேகத்தை கூட்டி சில வினாடிகள் அதை தொடர்ந்து பயிற்சி செய்த பின் மீண்டும் நமது பழைய வேகத்திற்கு திரும்பி வரும் போது சிறந்த அளவில் தொப்பை குறையும்.
சர்க்கரை வேண்டாம்
பொதுவாக நமக்கு கடைகளில் கிடைக்கும் சர்க்கரையை தவிர்ப்பதும் அல்லது குறைப்பதும் நல்லது. இதை தினமும் நமது உணவில் தவிர்த்தால் சிறந்தது. நாம் தினமும் உண்ணும் உணவில் சர்க்கரை நிறைய அளவு ஒளிந்திருக்கும். இதை உணர்ந்து, நாம் உண்ணும் உணவில் சர்க்கரையை  குறைப்பது நல்லது. இதற்கு பதிலாக தேன், பனங்கற்கண்டு மற்றும் அதிமதுர சாறு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.





சோடியம் உட்கொள்ளுதலை குறைத்தல்


உப்பை கண்டிப்பாக உணவில் சேர்த்து பயன்படுத்தும் இந்த காலத்தில் சோடியம் உப்பை தவிர, பொட்டாசியம் உப்பு, எலுமிச்சை உப்பு மற்றும் கடல் உப்பு ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். மிளகு மற்றும் இதர மூலிகைகளை பயன்படுத்துவதன் மூலம் உப்பு உட்கொள்ளுவதை தவிர்க்க முடியும்.

வைட்டமின் சி உணவுகள்

உடலில் உள்ள கொழுப்புகளை சக்தியாக மாற்றும் கார்னிடைன் என்ற பொருளை சுரப்பதற்கு உதவும் வைட்டமின் சி மிகவும் அவசியமானதாக உள்ளது. அது மட்டுமல்லாமல் மன அழுத்தத்தால் சுரக்கப்படும் கார்டிசாலையும் வைட்டமின் சி கட்டுப்படுத்துகிறது. இந்த கார்டிசால் தான் வயிற்று கொழுப்பு அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணமாகும்.
கொழுப்பை குறைக்கும் உணவுகள்

கொழுப்பை குறைப்பதற்கு இயற்கையான வழிகள் பலவும் உள்ளன. பூண்டு, வெங்காயம், இஞ்சி, சிவப்பு மிளகு, கோஸ், தக்காளி, மற்றும் இலவங்கப்பட்டை, கடுகு, கிராம்பு ஆகியவையும் கொழுப்பை கரைக்க உதவுகின்றன. சிறிது கிராம்பு, பச்சை பூண்டு மற்றும் ஒரு அங்குல அளவிற்கு இஞ்சி ஆகியவற்றை கலந்து தினமும் காலை சாப்பிட்டு வந்தால் கொழுப்பை நிச்சயம் கரைக்க முடியும். வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து, காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதும் மிகப் பிரபலமான உடல் எடையை குறைக்கும் வழியாக பின்பற்றப்படுகின்றது. இது போன்று பல வழிகள் உண்டு.
தேவையான ஆரோக்கியமூட்டும் கொழுப்புச் சத்தை சேர்த்துக் கொள்ளுதல் கெட்ட அல்லது தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கும் முயற்சியில் நாம் நல்ல கொழுப்பு வகைகளை சேர்க்க முயல வேண்டும். வெண்ணைய் பழம், ஆலிவ், தேங்காய் ஆகிய பருப்பு வகைகள் நல்ல கொழுப்புகளை கொண்டவையாகும்.
காலை உணவை கண்டிப்பாக சாப்பிடவும்
காலை உணவை தவிர்ப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்று நிறைய மக்கள் தவறாக நினைப்பதுண்டு. இது உடல் எடையை குறைக்காமல், உடல் வீக்கமடைய காரணமாகிவிடுகிறது. இதனால் வயிறு உப்புசமடைவது அதிகரித்து, பசி அதிகமாவதால் வயிற்றுக் கொழுப்பு மிகவும் அதிகமாகிறது. ஆகவே அவ்வப்போது நாம் சிறிது சிறிதாக உண்ணும் போது நமது உடல் செரிமானத்தை கட்டுப்படுத்தி உடல் எடையை மேம்படுத்த முடிகிறது. ஆகையால் உணவின் அளவை குறைத்து உண்ணும் நேரங்களை அதிகப்படுத்தி ஆரோக்கியமாக உடலை உருவாக்கிக் கொள்ளுங்கள். உலர்ந்த பழங்கள், பழ வகைகள் மற்றும் பச்சை அல்லது வேக வைக்காத காய்கறிகள் ஆகியவற்றை உண்ணலாம்.
தூக்கம்

உடல் எடையை மேம்படுத்த தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். அனைவருக்கும் 6 முதல் 8 மணி நேர உறக்கம் தேவைப்படுகிறது. உறங்காமல் இருப்பதும் உடல் எடையை கூட்டுவதாக உள்ளது. இத்தகைய எளிய வழிகளை பின்பற்றினால் வயிற்றுக் கொழுப்பை மட்டுமல்ல, முழு உடல் எடையையும் குறைத்து ஆரோக்கிய வாழ்வை வாழ முடியும். இதை முயற்சி செய்து வித்தியாசத்தை உணருங்கள்.