Showing posts with label Sports. Show all posts
Showing posts with label Sports. Show all posts

Sunday, August 17, 2014

ஒரு கையால் 50KG தூக்கி தன்னம்பிக்கையின் மறுவடிவமாக திகழும் பெண்...

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற கொடூர கார் விபத்து ஒன்றில் தனது வலது கையை இழந்த 25 வயதான Krystal Cantu தனது அபார தன்னம்பிக்கையால் இன்று உலகை தன்பக்கம் திருப்பியுள்ளார்.

 அதாவது ஒரு கையை இழந்த நிலையிலும் மறு கையினால் கடும் பயிற்சியினை மேற்கொண்டு சுமார் 15 ஸ்டோன் எடைகொண்ட பாரத்தினை தூக்கி அசத்தியுள்ளார். 



Wednesday, October 2, 2013

சாம்பியன்ஸ் லீக்- கடைசி லீக்கில் இன்று சென்னை–டிரினிடாட் அணிகள் மோதல்.

டெல்லி: சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டிரினிடாட் அணியும் மோதுகின்றன. 10 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் இன்றுடன் லீக் சுற்று நிறைவு பெறுகிறது. இன்று இரவு டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடக்கும் கடைசி லீக்கில் சென்னை சூப்பர் கிங்சும், மேற்கிந்திய தீவுகளின் டிரினிடாட் அண்ட் டொபாக்கோ அணியும் மோதுகின்றன.


Tuesday, July 30, 2013

2015 உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு...

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. 2011–ம் ஆண்டுக்கான உலக கோப்பை போட்டியை இந்தியா, இலங்கை, வங்காள தேசம் ஆகியவை இணைந்து நடத்தியது. இதில் இலங்கை அணியை வீழ்த்தி டோனி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியது.

2015–ம் ஆண்டுக்கான உலக கோப்பை போட்டியை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 23 ஆண்டுக்கு பிறகு அங்கு உலக கோப்பை போட்டி நடக்கிறது. 1992–ம் ஆண்டு நடந்த அந்த உலக கோப்பை போட்டியில் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
2015–ம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது.
பிப்ரவரி 14–ந்தேதி போட்டி தொடங்குகிறது. மார்ச் 29–ந்தேதி வரை உலக கோப்பை போட்டி நடக்கிறது. இந்தப்போட்டியில் 14 நாடுகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் (‘பி’ பிரிவு) இடம் பெற்று உள்ளன.
இரண்டு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் வருமாறு:–
‘ஏ’ பிரிவு:- இங்கிலாந்து, ஆஸ்திரேலியா (போட்டியை நடத்தும் நாடு), இலங்கை, வங்காளதேசம், நியூசிலாந்து (போட்டியை நடத்தும் நாடு), குவாலிபையர் 2, குவாலிபையர் 3.
‘பி’ பிரிவு:– தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, குவாலிபையர் 4.
தகுதி சுற்று போட்டியில் இருந்து 3 அணிகள் தகுதி பெறும்.
ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் இரண்டு பிரிவில் இருந்தும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும்.
உலக கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டம் நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட் சர்ச்சில் நடக்கிறது. இதில் இலங்கை– நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. பகல் ஆட்டமாக இந்தப் போட்டி நடக்கிறது. அதே தினத்தில் (பிப்ரவரி 14) ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து– ஆஸ்திரேலியா மோதுகின்றன. பகல்– இரவாக இந்த ஆட்டம் நடக்கிறது.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பரம்பரை எதிரியான பாகிஸ்தானை சந்திக்கிறது. இந்த ஆட்டம் பிப்ரவரி 15–ந்தேதி அடிலெய்டுவில் நடக்கிறது. அதை தொடர்ந்து 22–ந்தேதி தென்ஆப்பிரிக்க அணியை சந்திக்கிறது.
4 கால் இறுதி ஆட்டங்களில் 3 போட்டி ஆஸ்திரேலியாவிலும் (சிட்னி, மெல்போர்ன், அடிலெய்டு), ஒரு போட்டி நியூசிலாந்திலும் (வெலிங்டன்) நடக்கிறது. முதல் அரை இறுதி ஆட்டம் மார்ச் 21–ந்தேதி ஆக்லாந்திலும், 2–வது அரை இறுதி ஆட்டம் மார்ச் 26–ந்தேதி சிட்னியிலும் நடக்கிறது. இறுதிப்போட்டி மார்ச் 29–ந்தேதி மெல்போர்னில் நடக்கிறது.

Saturday, July 21, 2012

தென் ஆப்ரிக்காவுக்கெதிரான டெஸ்ட்டில் சதம் கடந்தார் அலியஸ்டர் குக்...




தென் ஆப்ரிக்காவுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆண்ட்ரு ஸ்ட்ராஸ் ஓட்டங்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அலியஸ்டர் குக் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் 115 ஓட்டங்களும், அடுத்து களமிறங்கிய ஜொனதன் ட்ராட் 71 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய கெவின் பீட்டர்சன் 42 ஓட்டங்களும், இயன் பெல் 13 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்பு களமிறங்கிய பிரெஸ்னன் 8 ஓட்டங்களும், ஸ்டுவர்ட் பிராட் 16 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து அணி இரண்டாம் நாளான இன்று 8 விக்கெட் இழப்பிற்கு 377 ஓட்டங்கள் எடுத்து துடுப்பெடுத்தாடி வருகிறது. மேட் பிரியர் 58 ஓட்டங்களும், கிரேம் ஸ்வான் 11 ஓட்டங்களும் எடுத்துள்ளனர்.








Tuesday, July 17, 2012

ஸ்ரீலங்கா பிறீமியர் லீக் போட்டிகளுக்கு நெருக்கடி கொடுத்துள்ள ஜெயவர்த்தன!


இந்தியாவின் நடைபெற்ற இந்தியன் பிறீமியர் லீக்கை போன்று இலங்கையில் முதன் முறையாக ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் (எஸ்.எல்.பி.எல்.) போட்டிகள் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த எஸ்.எல்.பி.எல் போட்டிகள் தொடர்பாக கொழும்பில் நேற்று செய்தியாளர் மாநாடு நடைபெற்றது.
இதில் பேசிய இலங்கை அணியின் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன புதிய கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் கூறியதாவது, இலங்கை வீரர்களுடனான வருடாந்திர ஒப்பந்தத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியம் கையெழுத்திட்டால் மட்டுமே, ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் (எஸ்.எல்.பி.எல்.) போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் வாரியம் 2012ம் ஆண்டுக்கான வீரர்களுடன் இன்னும் ஒப்பந்தம் செய்யவில்லை. அவ்வீரர்களுக்கு இவ்வருடத்தின் முதல் காலாண்டுக்கான சம்பளம் வழங்கப்படவுமல்லை.
கடனில் மூழ்கியுள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம், கடந்த வருடம் உலகக்கிண்ணப் போட்டிகளுக்காக மூன்று அரங்குகளை கட்டியதிலிருந்து பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இந்த அரங்குகளுக்காக சுமார் 700 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
எஸ்.எல்.பிஎல் போட்டிகள் எதிர்வரும் ஓகஸ்ட் 10ம் திகதியிலிருந்து ஓகஸ்ட் 31ம் திகதிவரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Saturday, July 7, 2012

31வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் டோனி!

 டி20 மற்றும் ஒருநாள் போட்டி உலக‌‌க் கிண்ண வெற்றி நாயகனும், இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவருமாகிய மஹேந்திர சிங் டோனி, இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சிறந்த மற்றும் நிலையான விக்கெட் கீப்பர் இன்றி தவித்த இந்திய கிரிக்கெட் அணிக்கு, திறமையான வி்க்‌கெட் கீப்பிங் மட்டுமல்லாமல், சிறந்த துடுப்பாட்டக்காரராகவும் விளங்கிய டோனி, அணித்தலைவரானார்.
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். இவரது திறமைக்கு பரிசாக கவுரவ “லெப்டினன்ட் கர்னல்” பதவி வழங்கப்பட்டது.
கூலான அணித்தலைவர் என்று பெயரெடுத்துள்ள டோனிக்கு கிரிக்கெட் ரசிகர்களிடையே வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.


   

Sunday, June 24, 2012

இலங்கை அணி 209 ஓட்டங்களால் அபார வெற்றி !

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 209 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட இருபது-20 தொடர், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
இருபது-20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. ஒருநாள் தொடரை இலங்கை அணி 3-1 என்ற கணக்கில் வென்றது.
இதனையடுத்து முதல் டெஸ்ட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் கடந்த 22 ஆம் திகதி தொடங்கியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
தொடக்க வீரரான திலகரட்ண டில்சான் சதம் கடந்து 101 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் அடுத்து களமிறங்கிய குமாரா சங்கக்காரா 111 ஓட்டங்களும், அணித்தலைவர் மஹேல ஜயவர்த்தன 55 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்.
இலங்கை அணி 90 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 300 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இதனையடுத்து நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இலங்கை அணியின் ஜயவர்த்தன 62 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சயித் அஜ்மல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பின்பு களமிறங்கிய பிரசன்ன ஜயவர்த்தன மட்டுமே 48 ஓட்டங்கள் எடுத்தார். மற்ற வீரர்களான சமரவீரா 6 ஓட்டங்களும், சுராஜ் ரந்திவ் 8 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்பு களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ், நுவான் குலசேகரா, ரங்கன ஹேரத், நுவான் பிரதீப் என்று அனைவரும் பாகிஸ்தான் வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஓட்டங்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தனர்.
முதல் இன்னிங்சின் முடிவில் இலங்கை அணி 153.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 472 ஓட்டங்கள் எடுத்தது.
ஆனால் சங்கக்கார தொடர்ந்து நிலைத்து நின்று விளையாடி ஆட்டமிழக்காமல் 199 ஓட்டங்கள் எடுத்து இரட்டை சதத்தை ஓரு ஓட்டத்தில் தவறவிட்டார்.
பாகிஸ்தான் சார்பில் சயித் அஜ்மல் 5 விக்கெட்டும், மொகமது ஹபிஸ் 3 விக்கெட்டும், அப்துர் ரஹ்மான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான மொகமது ஹபிஸ் 20 ஓட்டங்களும், தவ்பீக் உமர் 9 ஓட்டங்களும் எடுத்து இருவரும் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய அசார் அலி, சயித் அஜ்மல், ஆசாத் ஷாபிக் என்று மூவரும் ஓட்டங்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தனர். நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 48 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாட தொடங்கியது. யூனிஸ் கான் 29 ஓட்டங்களும், மொகமது அயுப் 25 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் அணி 54.3 ஓவர்களில் 100 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை சார்பில் சுராஜ் ரந்திவ் 4 விக்கெட்டுகளையும், ரங்கன ஹேரத் 3 விக்கெட்டுகளையும், நுவான் குலசேகரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து பாலோ ஆன் கொடுக்காமல், 372 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி தனது 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டு பாகிஸ்தான் அணிக்கு 510 ஓட்டங்களை வெற்றி இலக்கை நிர்ணயித்தது.
முதல் இன்னிங்சில் சதமடித்த டில்ஷன் இரண்டாவது இன்னிங்சில் அரை சதமடித்தார்.
இதனால் பாகிஸ்தான் அணிக்கு 510 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 3வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 36 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது.
பாகிஸ்தான் அணி இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.
இன்றைய ஆட்டத்தை தொடங்கிய சில ஓவர்களிலேயே சயித் அஜ்மல் 12 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் பாகிஸ்தான் அணியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய யூனிஸ் கான் 87 ஓட்டங்களுடனும், ஆசாத் ஷாபிக் 80 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 300 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இலங்கை அணி 209 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

Friday, June 22, 2012

ஐ.பி.எல் சூதாட்டத்திற்காக பாட்டியை கொலை செய்த பேரன்கள்...

ஐ.பி.எல் போட்டியில் பந்தயம் கட்டுவதற்காக, பாட்டியை அவரது பேரன்களே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலமான கோவாவில் உள்ள வெலம் பகுதியை சேர்ந்த லிண்டா கஜேதன் அந்ரதே என்ற பெண், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, அவரது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இவ்வழக்கில் ஐந்து பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இதில், இருவர், கொலை செய்யப்பட்ட லிண்டாவின் பேரன்கள்.
இது குறித்து கோவா எஸ்.பி அரவிந்த் கவாஸ் ஊடகத்தினரிடம் கூறுகையில், கடந்த மாதம் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதில், எந்த அணிகள் வெல்லும் என்று கைதான நபர்கள் பந்தயம் கட்டியிருந்தனர். அவர்களுக்கு பணம் தேவைப்பட்டது. இதற்காக அவர்கள், லிண்டாவை கொலை செய்ய திட்டமிட்டனர்.
இதற்காக பேரன்களில் ஒருவர், லவ் பேர்ட்ஸ்களை தான் வாங்கியிருப்பதாகவும், அவற்றை பார்க்க வேண்டும் என்று, நவிலிம் பகுதியில் உள்ள தன் வீட்டிற்கு தாத்தாவை அழைத்துச் சென்றுள்ளான்.
அவர் வீட்டில் இல்லாத போது லிண்டாவை கொலை செய்து வீட்டிலிருந்த நான்கு லட்சம் ரூபாயை இவர்கள் கொள்ளையடித்து செலவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக, மூன்று சிறுவர்களும், கொலையை நடத்த திட்டம் தீட்டிய தட்டாராஜ் சடோஸ்கர்(21) மற்றும் அல்சின் மஸ்கர்னாஸ்(19), ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
கிரிக்கெட் சூதாட்டத்துக்காக பாட்டியை பேரன்களே கொலை செய்த சம்பவம் கிரக்கெட் ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sunday, June 17, 2012

ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய 4வது இலங்கை வீரர் பெரரா...

பாகிஸ்தானுக்கெதிரான 4வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை வெற்றியடைய செய்த பெரேரா, ஹாட்ரிக் சாதனை ஒன்றையும் நிகழ்த்தினார்.
பாகிஸ்தானுக்கெதிரான 4வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.
இந்தப்போட்டியில் இலங்கை வேகப்பந்து வீரர் திஸாரா பெரேரா ஹாட்ரிக் சாதனை படைத்தார். 41வது ஓவரின் 2வது பந்தில் யூனிஸ்கானையும், 3வது பந்தில் சாகித் அப்ரிடியையும், 4வது பந்தில் சர்பிராஸ் அகமதுவையும் அவர் ஆட்டமிழக்க செய்தார்.
ஒருநாள் போட்டியில் நிகழ்த்தப்பட்ட 32வது ஹாட்ரிக் சாதனை இதுவாகும். ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் சாதனை படைத்த 4வது இலங்கை வீரர் என்ற பெருமையை பெரேரா பெற்றார்.
இதற்கு முன்பு இலங்கை வீரர்களில் லசித் மலிங்கா, சமிந்தா வாஸ், மெகரூப் ஆகியோர் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளனர்.

லசித் மலிங்கா 3 முறை (2007ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கெதிராக, 2011ம் ஆண்டு கென்யாவுக்கெதிராக, 2011ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கெதிராக) ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
சமிந்தாவாஸ் 2 முறை (2001ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கெதிராக, 2003ம் ஆண்டு வங்கதேசத்துக்கெதிராக) ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
மெகரூப் 2010ம் ஆண்டு இந்தியாவுக்கெதிராக ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார்.

Saturday, June 16, 2012

யூரோ கால்பந்து: பரபரப்பான ஆட்டத்தில் சுவீடனை வீழ்த்தி இங்கிலாந்து த்ரில் வெற்றி...

யூரோ கிண்ண போட்டியில் இன்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல்கணக்கில் சுவீடன் அணியை தோற்கடித்தது.

பாலின சர்ச்சையில் சிக்கிய பிங்கிக்கு 14 நாள் காவல்...

ஆணா.. பெண்ணா என்ற பாலின சர்ச்சையில் இந்திய தடகள வீராங்கனை பிங்கி பிராமனிக்கை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒருநாள் தொடர்: 244 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடுகிறது பாகிஸ்தான்...

இலங்கை அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 244 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடுகிறது.

Tuesday, June 12, 2012

தவறாக நடந்து கொண்டதற்காக விவியன் ரிச்சர்ட்ஸிடம் மன்னிப்பு கேட்டார் ராம்தின்...

மேற்கிந்திய தீவுகளின் விக்கெட் கீப்பர் ராம்தின் ஆட்டம் சரியில்லை என்று முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் விமர்சனம் செய்தார்.

ஐ.சி.சியின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: தொடர்ந்து அவுஸ்திரேலியா முதலிடம்...

ஐ.சி.சிசர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐ.சி.சி), தற்போது அணிகளுக்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தர வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

Friday, June 8, 2012

பாகிஸ்தான் பிரிமியர் லீக் போட்டிகளில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு அழைப்பு...

பாகிஸ்தானில் பாகிஸ்தான் பிறீமியர் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இலங்கை டி20 உலகக் கிண்ண போட்டிக்கு தூதுவரான மலிங்கா...

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின்(ஐ.சி.சி) டி20 உலகக் கிண்ண போட்டி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கையில் நடைபெற உள்ளது.

Monday, June 4, 2012

சதநாயகன் சச்சின் எம்.பி யாக பதவியேற்றார்- (வீடியோ இணைப்பு)...








Sunday, June 3, 2012

ஆனந்துக்கு பாராட்டு விழா கோலகலமாக நடைபெற்றது...

ஐந்தாவது முறையாகவும் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் இந்தியா திரும்பியுள்ளார்.