Showing posts with label Tamil Nadu. Show all posts
Showing posts with label Tamil Nadu. Show all posts

Wednesday, September 4, 2013

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் கைது!


ராயனூர் இலங்கைத் தமிழர் முகாமில், சிறுமியொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் பாடசாலை மாணவனொருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

ராயனூர் இலங்கைத் தமிழர் முகாமில் இடம்பெற்றுள்ள இரண்டாம் சம்பவம் இது என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் ராயனூர் இலங்கை தமிழர் முகாமைச்சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், அதே முகாமை சேர்ந்த 7 வயது சிறுமியை தனியாக அழைத்துச்சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி, தனக்கு நேர்ந்ததை பாட்டியிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, சிறுமியின் உறவினர், கரூர் மகளிர் பொலிஸில் புகார் அளித்தார். அதன்படி, 2012 ஆம் ஆண்டு குழந்தை பாதுகாப்பு மற்றும் பாலியல் கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட மாணவனை பொலிஸார், நேற்று கைது செய்தனர்.

கடந்த 27 ஆம் திகதி அதே இலங்கைத் தமிழர் முகாமில், 14 வயது சிறுமியை வன்புணர்ந்ததாக இரண்டு சிறுவர்களை பொலிஸார் கைது செய்தனர். இந்நிலையில், அதே முகாமில் பாலியல் தொல்லை தொடர்பாக மாணவனொருவன் கைது செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Tuesday, July 30, 2013

40,000 ரூபாயில் ஹெலிகாப்டர்....இந்திய மெக்கானிக் சாதனை !!!


ஒரிசாவை சேர்ந்த அபுமன்யூ சமால் (Abhmanyu Samal) என்னும் இவர் தனியாளாக ஒரு ஹெலிகாப்டரை உருவாக்கியுள்ளார்...இவருக்கு வயது 40. இவர் ஒரு மெக்கானி.. இரண்டு வருட கடின உழைப்பில் இதனை உருவாக்கியுள்ளார்...இதற்காக இவர் செய்த செலவு வெறும்40,000 மட்டுமே..இருசக்கர வாகனத்திற்கு பயன்படும் இஞ்சினை இதில் பயன்படுத்தியுள்ளார்...இதன் எரிபொருள் கொள்ளளவு 5 லிட்டர்...இதன் வேகம் 120கி/மஇவரை போன்ற திறமைசாளிகளை வெளிகொண்டுவந்துஊக்குவித்தால்....கோடி கோடியாய் ஊழல் செய்து வெளிநாட்டிலிருந்து ஹெலிகாப்டர் வாங்க தேவையில்லை....நாமே செய்துவிடலாம்... அவனைவிட தரமாக...திறமைசாளிகளுக்கு பாரதத்தில் என்றுமே பஞ்சமில்லை...அதற்கு ஓர் சிறந்த உதாரணம் இந்த விஞ்ஞானி...

Thursday, July 19, 2012

இதுவரை பார்க்காத நித்தியானந்தா ரஞ்சிதா காமலீலைகள்.! (முழு வீடியோ)




சன் தொலைக்காட்சி மற்றும் நக்கீரன் பத்திரிகைக்கு கிடைத்து நித்தியாநந்தா ரஞ்சிதா காம லீலைகள் ஏனைய ஊடகங்களில் வெறும் 5 நிமிடங்களே வெளியிடப்பட்டது. இருப்பினும் அதன் முழுமையான காட்சிகளை பலர் பார்த்திருக்க மாட்டீர்கள்.
தற்போது நித்தி ரஞ்சி நடத்திய காம நாடகம் அமெரிக்க தடயவியல் மையத்தினால் உண்மையானதுதான் என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நீங்கள் இதுவரை பார்த்திராத நித்தியானந்தா மற்றும் ரஞ்சிதாவில் காம லீலைகளை இந்த வீடியோவில் காணலாம்...
இது போலிச்சாமியார்களை நம்பி ஏமாறும் மடச்சாம்பிராணிகளுக்காவே தவிர வேறு எந்த நோக்கங்களுக்காகவும் அல்ல....


Thursday, June 28, 2012

திரையுலகில் கதாநாயகர்களுக்கே முக்கியத்துவம்: அசின் !


http://www.winjaffna.com/ அசின் நடித்த கஜினி, ரெடி, ஹவுஸ்புல் ஆகிய இந்திப்படங்கள் ரூ.100 கோடி வசூல் ஈட்டியுள்ளன. இதனால் ஹிட் படங்கள் நாயகி பட்டியலில் இடம் பிடித்துள்ளார். விரைவில் ரிலீசாக உள்ள போல்பச்சன் படத்துக்கும் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார் அசின். அவர் அளித்த பேட்டி வருமாறு:-
http://www.winjaffna.com/எனது படங்கள் ஹிட்டாவதற்கு அதிர்ஷ்டம்தான் காரணம். வெற்றிக்கு நான் மட்டும் காரணம் அல்ல. படத்தில் பணியாற்றிய அனைவருக்குமே அதில் பங்கு உண்டு. என்னால்தான் படங்கள் ரூ.100 கோடி வசூல் ஈட்டின என்று சொல்ல முடியாது. அது மாதிரி கர்வப்படவும் மாட்டேன்.
http://www.winjaffna.com/சினிமாவில் கதாநாயகர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. அவர்களை முன்னிலை படுத்திதான் கதைகளையும் உருவாக்குகிறார்கள். இது வருத்தம் அளிக்கிறது. கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் வர வேண்டும். கஹானி போல் நாயகிகளுக்கு 
முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் நிறைய வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். ஏற்கனவே நடித்த ஒரே மாதிரியான கேரக்டர் உள்ள கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க மறுத்துவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்
Enhanced by Zemanta

விஜய்யின் துப்பாக்கி படத்தை வெளியிட இடைக்கால தடை!



நடிகர் விஜய்யின் துப்பாக்கி படத்தை வெளியிட சென்னை சிட்டி சிவில் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை 2வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் நார்த் ஈஸ்ட் பிலிம் ஒர்க் நிறுவனம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கள்ளத்துப்பாக்கி என்ற பெயரில் தமிழில் சினிமா படம் தயாரிக்க முடிவு செய்தோம். இதற்காக கள்ளத் துப்பாக்கி என்ற தலைப்பை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்தோம். கள்ளத்துப்பாக்கி படத்தை 2009ம் ஆண்டு முதல் தயாரித்து வருகிறேன். படத்தை இயக்குனர் லோகிதாஸ் என்பவர் இயக்கி வருகிறார். இந்த நிலையில் துப்பாக்கி என்ற பெயரில் கலைப்புலி தாணு படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தில், நடிகர் விஜய் நடித்துள்ளார். முருகதாஸ் இயக்குகிறார். இதுசம்பந்தமான விளம்பரம் பத்திரிகைகளில் வெளியானதை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
 தயாரிப்பாளர் கலைப்புலி தாணு விதிமுறைகளை மீறி, நான் பதிவு செய்த கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பின் பின் பகுதியில் படத்தை தயாரித்து வருகிறார். எனவே துப்பாக்கி என்ற பெயரில் படத்தை வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குனர் முருகதாஸ் ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி திருமகள், மனுதாரர் கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பில் படம் தயாரித்து விரைவில் வெளியிட உள்ளதாகவும், இந்த தலைப்பை 2009ம் ஆண்டு பதிவு செய்து, ஒவ்வொரு ஆண்டும் தலைப்பை புதுப்பித்து வருவதாகவும் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். இப்போது துப்பாக்கி என்ற பெயரில் எதிர் மனுதாரர் தயாரிக்கும் படம் வெளியானால், தனக்கு இழப்பு ஏற்படும் என்றும், மனுதாரர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளதால், துப்பாக்கி என்ற தலைப்பில் படத்தை வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குனர் முருகதாஸ் ஆகியோருக்கு ஜூலை 16ம்தேதி வரை இடைக்கால தடை விதிக்கப்படுகிறது, என்று உத்தரவிட்டார்.

Enhanced by Zemanta

ராதாவின் இளைய மகள் மணிரத்தினத்தின் 'கடல்' படத்தின் நாயகி !

பழைய நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவரது இரண்டாவது மகளான துளசியும் சினிமாவுக்கு வருகிறார்.
மணிரத்னம் இயக்கும் 'கடல்' படத்தில் துளசி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதில் நாயகனாக நடிகர் கார்த்திக் மகன் கவுதம் அறிமுகமாகிறார். ஏற்கனவே இப்படத்தில் சமந்தாவை நாயகியாக ஒப்பந்தம் செய்து இருந்தனர். ஆனால் கவுதமை விட மூத்தவராக இருந்ததால் ஜோடி பொருத்தம் இல்லை என்று அவரை மாற்றி விட்டு துளசியை தேர்வு செய்துள்ளனர்.
தனது தங்கை நடிகையானது குறித்து கார்த்திகா கூறியதாவது:-
துளசி பத்தாவது வகுப்பு படிக்கிறார். மணிரத்னம், ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில் உருவாகும் படம் என்பதால் 'கடல்' படத்தில் நடிக்கிறார். இதுபோன்ற வாய்ப்பை யாரும் நழுவ விட மாட்டார்கள். துளசி தற்போது சென்னையில் இருக்கிறார்.
மணிரத்னமும் சுகாசினியும் தங்கள் குழந்தைபோல் பாவித்து துளசிக்கு நடிப்பு பயிற்சி அளிக்கின்றனர். நடிப்பு மட்டுமின்றி நடனம், வசன உச்சரிப்பு போன்றவற்றிலும் பயிற்சி பெறுகிறார். என் தாய் ராதா நடிகையாக இருந்தபோதும் அவர் எனக்கு நடிப்பு கற்றுக் கொடுக்கவில்லை. எனது பாணியில் இயற்கையாக நடிக்கவேண்டும் என்று கருதினார். அதுபோல்தான் துளசி விஷயத்திலும் எங்கள் தலையீடு இல்லை.



Enhanced by Zemanta

மேம்பாலத்தில் இருந்து தலைகுப்புறக் கவிழ்ந்த பேருந்து - சென்னையை கலங்க வைத்த விபத்து !

Posted Imageசென்னை நகரில் அரசு பயணிகள் பேருந்து பாலத்திலிருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 40-ம் மேற்பட்டோர் காயமடைந்தனர். இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சென்னையின் மையப்பகுதியான பாரிமுனையிலிருந்து வடபழனி நோக்கி 17-பி நம்பர் நகரப்பேருந்து சென்று கொண்டிருந்தது.

இன்று மதியம் 2 மணியளவில் சென்னை அண்ணாமேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது அப்போது பாலத்தில் இருந்து இறங்கி வளைந்து அருகில் இருக்கும் சர்வீஸ் ரோட்டில் செல்ல முயன்ற போது நிலை தடுமாறி கவிழ்ந்து கீழே சாலையில் விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பாலத்திலிருந்த கீழே விழுந்ததில் அதில் பயணித்தவர்கள் அலறினர்.

Posted Image

Enhanced by Zemanta