Showing posts with label Computer. Show all posts
Showing posts with label Computer. Show all posts
Friday, September 20, 2013
Monday, August 19, 2013
60 செக்கன்களில் இணைய உலகம்...நம்ப முடிகிறதா!!!
இணைய உலகம் என்றும் பரபரப்பானது. சுறுசுறுப்பாக இயங்கும் இணைய உலகத்திற்கு 24 மணித்தியாலங்கள் நிச்சயம் போதாது.
அங்கு 60 செக்கனுக்குள் பல ஆயிரக் கணக்கான செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. அதேபோல் கோடிக்கணக்கான பாவனையாளர்கள் தங்கள் நேரத்தை அதில் செலவழிக்கின்றனர்.
ஸ்கைப் அழைப்புகள்,பேஸ்புக் லைக்கள்,டுவிட்கள்,பிலிக்கர்கள் படங்கள், யு டியுப் காணொளிகள் என்பன இதில் அடங்கும்.
இதனை தெளிவாகக் காட்டும் பொருட்டு 'கிவ்மீ' என்ற நிறுவனம் 'இன்போகிராப்' ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிசி மெக், பிஸ்னஸ் இன்சைடர், போமட்,டெய்லிமெய்ல்,போன்ற பிரபல இணையத்தளங்கள் சிலவற்றில் இருந்து பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டே இதனை 'கிவ்மீ' வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் நிமிடமொன்றில்....
1. பேஸ்புக்கில் 1.8 மில்லியன் 'லைக்ஸ்' போடப்படுகின்றது.
2. 216,000 படங்கள் இன்ஸ்ரகிராமில் பரிமாற்றப்படுகின்றன.
3. கூகுளில் 2 மில்லியன் தேடல்கள் இடம்பெறுகின்றன.
4. அமேசன் இணையத்தளத்தில் 83,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான விற்பனை நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
5. 278,000 டுவிட்கள் பதிவு செய்யப்படுகின்றன.
6. யுடியூப்பில் 72 மணித்தியாலங்கள் ஓடக்கூடிய காணொளிகள்.
7. புதிய இணைய முகவரிகள் 70 பதிவு செய்யப்படுவதுடன் 571 தளங்கள் உருவாக்கப்படுகின்றன.
8. 204 மில்லியன் மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றது.
Go-Globe.com இதேபோன்ற 'இன்போகிராப்' ஒன்றை கடந்த வருடம் ஜூன் மாதம் வெளியிட்டிருந்தது.

Tuesday, July 23, 2013
HTC அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி
Sunday, July 8, 2012
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தொலைக்காட்சிகள் அன்பளிப்பு!
யாழ்.போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவுக்கு சிங்கர் நிறுவனத்தினால் தொலைக்காட்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்
சத்திர சிகிச்கைக்காக அனுமதிக்கப்படும் நோயாளர்களின் உள ஆற்றுப்படுத்தலுக்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் இந்த எல் சீடி ரக தொலைக்காட்சிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தனியார் நிறுவனங்கள் நோயாளர்களின் நலன்களுக்காக பாரிய உதவித் திட்டங்களை வழங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Saturday, July 7, 2012
9 ஜூலை 2012 இணையத்தை முடக்க போகும் வைரஸ், உங்கள் கணினியை காப்பாற்ற....
இன்றைய இணையதளங்களில் ஹாட் டாபிக் இது தான். வரும் திங்கட் கிழமை 9 July 2012 அன்று பெரும்பாலான கணினிகள் இணையத்தை பயன்படுத்த முடியாது. DNS Changer என்ற வைரஸ் இணையத்தை முடக்க போகிறது என்று. இதை பற்றி சற்று விரிவாக மற்றும் இந்த வைரஸில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதை பற்றியும் கீழே காண்போம்.
DNS(Domain Name System) என்பது நாம் கொடுக்க கூடிய தளத்தின் முகவரியை (ex: www.google.com) கணினிக்கு புரியும் வகையில் அந்த தளத்தின் சரியான ஐபி எண்ணாக மாற்றி அந்த குறிப்பிட்ட தளங்கள் திறக்க உதவி புரிகிறது. உதாரணமாக www.facebook.com என கொடுத்தால் 204.15.20.0 என்ற ஐபி எண்ணாக மாற்றி தரும்.
இப்பொழுது ஆரம்பித்துள்ள புதிய பிரச்சினை என்னவென்றால் DNS Changer என்ற ஒரு அபாயகரமான வைரசை உருவாக்கி உள்ளனர். இந்த வைரஸ் DNS சர்வர்களில் புகுந்து நாம் கொடுக்க கூடிய இணைய முகவரியை போலியான ஐபி முகவரியை மாற்றி உங்கள் இணையத்தை செயலிழக்க வைக்கின்றனர். மற்றும் போலி தளங்களை வர வைத்து பணம் பறிக்கவும், கணினியில் மால்வேர்களை புகுத்தி சில முக்கிய ரகசியங்களையும் திருடுகின்றனர். இந்த வைரஸ் கடந்த வருடம் நவம்பர் மாதம் கண்டறியப்பட்டது. இது வரை உலகம் முழுவதும் பல லட்ச கணக்கான கணினிகள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த வருடம் வைரஸ் உருவாக்கப்பட்டும் இன்னும் பலர் தொடர்ந்து எந்த பதிப்பும் இல்லாமல் இணைய சேவையை பெற்று கொண்டிருக்க காரணம் அமெர்க்காவின் உளவு அமைப்பான FBI இந்த வைரசை கண்டறிந்து உள்ளனர். இது சம்பந்தமாக FBI இதுவரை 7 பேரை கைது செய்து உள்ளது. அதில் 6 பேர் எஸ்தானியா நாட்டை சேர்ந்தவர்கள் ஒருவர் ரஷ்யாவை சேர்ந்தவர். இந்த வைரஸிற்கு தற்காலிக தீர்வாக தற்காலிக DNS சர்வர்களை நிறுவி அதன் மூலம் DNS Changer வைரசினால் பாதிக்கப்பட்ட கணினிகளும் தொடர்ந்து இணைய சேவையை பெற்று வந்தன.
இப்பொழுது பிரச்சினை என்னெவென்றால் இந்த தற்காலிக DNS சர்வர்களின் செயல்பாடு வரும் திங்கட் கிழமை 9 ஜூலை 2012 அன்று நிறுத்த பட இருக்கிறது. ஆதலால் பாதிக்கப்பட்ட கணினிகள் தொடர்ந்து இனி இணைய சேவையை பயன்படுத்த முடியாது. ஆகவே வைரசை இன்னும் நீக்காமல் இருக்கும் கணினிகள் வரும் திங்கட் கிழமை முதல் இணையத்தை பயன்படுத்த முடியாது. அல்லது பயன்படுத்தினால் உங்கள் கணினிகள் மேலும் பாதிக்கப்படலாம். இதனால் உலகம் முழுவதும் சுமார் 277,000 கணினிகள் பாதிக்க படலாம் என கருதப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 64,000 கணினிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக FBI அறிவித்து உள்ளது.
உங்கள் கணினி பாதிக்கப்பட்டுள்ளதா என அறிய:
உங்கள் கணினி DNS Changer வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதா என அறிய இந்த தளத்திற்கு www.dns-ok.us சென்றால் போதும் உங்கள் கணினி பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை இந்த தளம் உங்களுக்கு சொல்லி விடும். கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதிக்க படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒரு வேலை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் பச்சை நிறத்திற்கு பதிலாக சிவப்பு நிறத்தில் தெரியும்.
இந்த வைரசை முற்றிலுமாக அழிக்க :
ஒருவேளை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் முதலில் இந்த படிவத்தைforms.fbi.gov/dnsmalware பூர்த்தி செய்யவும். உங்கள் கணினியில் இருந்து அந்த வைரசை நீக்குவது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
விண்டோஸ் XP, Vista, 7 கணினிகளுக்கு:
DNS Changer வைரசை கணினியில் இருந்து நீக்குவதற்காக பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான அவிரா ஒரு புதிய மென்பொருளை உருவாக்கி உள்ளனர். இந்த லிங்கில் Avira DNS Repair சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
டவுன்லோட் ஆகியதும் exe பைலை இரண்டு கிளிக் செய்து இன்ஸ்டால் செய்ய தொடங்கியவுடன் கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதுக்காப்பாக உள்ளது. ஆகவே இந்த மென்பொருள் உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகாது.
மேக் கணினிகளில் இருந்து இந்த வைரசை நீக்க இந்த மென்பொருளை DNS Changer Removal Toolடவுன்லோட் செய்து நீக்கி கொள்ளுங்கள்.
Source - www.fbi.gov
குறைந்த கால அவகாசமே இருப்பதால் இந்த தகவலை சமூக தளங்களில் பகிர்ந்து கூடிய விரைவில் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.

Copied Post From:-
Sunday, May 20, 2012
Saturday, April 21, 2012
YOU TUBE வீடியோக்களில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் பார்த்து ரசிப்பதற்கு...
http://www.youtube.com/embed/j345npmPah0?rel=0#t=1m7s
Thursday, April 5, 2012
ஜிமெயில் மின்னஞ்சல்களை Track செய்வதற்கு
ஜிமெயிலில் அனுப்பப்படும் மின்னஞ்சல்களை Track செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை மற்றொருவர் ஓபன் செய்த உடன் அதற்கான அறிவிப்பு உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து விடும்.
இதற்கு முதலில் கீழே உள்ள லிங்கில் சென்று இந்த நீட்சியை தரவிறக்கம் செய்து, உலாவியில் நிறுவிக் கொள்ளவும்.
இந்த நீட்சி தற்பொழுது குரோம் மற்றும் பயர்பொக்ஸ் உலாவிகளுக்கு மட்டுமே கிடைக்கும். மற்ற உலாவியை உபயோகித்தால் இந்த வசதியை பெற முடியாது.
இந்த நீட்சியை நிறுவிய உடன் ஜிமெயிலை ஓபன் செய்து Compose பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
அங்கு Send Later என்ற பட்டனுடன் Track என்ற ஒரு புதிய பட்டனும் வந்திருக்கும்.
மின்னஞ்சல் அனுப்புவதற்கு முன் அந்த Track பட்டனை டிக் செய்து அனுப்பி விட்டால் அந்த மின்னஞ்சலை ஓபன் செய்தவுடன் அந்த விவரங்கள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து விடும்.
Sunday, April 1, 2012
இணையத்தில் குழந்தைகளை பாதுகாப்பதற்கு
இன்றைய உலகில் கற்றுக் கொள்வதற்கும் அறிவுத் தேடலுக்கும் முதல் தேவை இணைய இணைப்பும், இணையத் தேடலும் தான்.
இதில் அபாயம் தரும் இன்னொரு
பக்கமும் உள்ளது. முற்றிலும் கட்டற்ற இணையம் சிறுவர்களுக்கு அபாயகரமானது.பாலியல் தளங்களும், வன்முறையை போதிக்கும் தளங்களும் இணையத்தில் நிறைந்து கிடக்கின்றன. இவற்றைப் பார்க்காதே என்று ஒரு காவலாளி போல சிறுவர்களை எந்நேரமும் கட்டுப்படுத்துவது இயலாது.
மேலும் வரையறைகளை அமைப்பது இன்றைய டிஜிட்டல் உலகில் பெற்றோர்களுக்கும் சற்று சிரமமான செயல்பாடாக உள்ளது. இயலாததும் கூட. பெற்றோர் தடை இடுகையில் அதனை மீற வேண்டும் என்ற இயல்பு சிறுவர்களுக்கு இயல்பாகவே தோன்றுவது இயற்கையே.
இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க K9 Web Protection என்னும் புரோகிராம் நமக்கு உதவுகிறது. இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் இந்த புரோகிராம், வீடுகளில் பயன்படுத்தும் கணணிகளில் இணையத்தில் பெற்றோர் கட்டுப்பாடு விதிக்க உதவுகிறது.
உங்கள் பெர்சனல் கணணிகளில் உள்ள இணையத்தை உங்கள் கட்டுப்பாட்டிலேயே நீங்கள் அருகில் இல்லாத சூழ்நிலையிலும் வைத்திருக்க உதவுகிறது. உங்கள் குழந்தைகளை இணையம் தரும் தீமைகளிலிருந்து பாதுகாக்க உதவிடும் இதன் சிறப்பம்சங்களாவன:
1. பாலியல், போதை மருந்து, தனிநபர் டேட்டிங், வன்முறையைப் போதிப்பது, வெறுப்பினை வளர்ப்பது, இனவேறு பாட்டினைத் தூண்டுவது என 70க்கும் மேற்பட்ட பல்வேறு பிரிவுகளாக இணைய தளங்களைப் பிரித்து வைத்து தடுக்கலாம்.
2. குழந்தைகளின் வயதின் அடிப்படையில் தடுப்பு நிலைகளை அமைக்கலாம்.
3. அனைத்து தேடல் சாதனங்களிலும் SafeSearch என்ற ஒன்றை இயக்கி வைக்கலாம்.
4. குறிப்பிட்ட நேரத்தில் இணையத் தொடர்பினை ஏற்படுத்த இயலாமல் செட் செய்திடலாம்.
5. எப்போதும் அனுமதி மற்றும் எப்போதும் தடை செய்திடு என இருவகைகளாக இணையதளங்களைப் பிரித்து அமைக்கலாம்.
6. பெற்றோர் அமைத்திடும் கடவுச்சொல், மற்ற கடவுச்சொற்களையும் மீறி இருக்கும் வகையில் அமைக்கலாம்.
7. கணணி தொழில்நுட்பம் சற்று அதிகம் தெரிந்து பயன்படுத்துபவர்கள் கூட மீட்டெடுக்க முடியாத தடைகளை உருவாக்கலாம்.
8. தடை செய்யப்பட்ட தளங்களைப் பார்த்தால் அது குறித்த அறிக்கை தரும்படி அமைத்திடலாம்.
8. விண்டோஸ் மட்டுமின்றி மேக் கணணிகளிலும் இயங்கும் வகையிலும் இது தரப்படுகிறது.
K9 Web Protection என்ற இந்த புரோகிராம், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் எக்ஸ்பி, மேக் ஓ.எஸ். எக்ஸ் 10.4.7 மற்றும் அதற்கும் மேற்பட்ட சிஸ்டங்களில் இயங்குகிறது.
இதனை தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்திட முயற்சிக்கையில் லைசன்ஸ் கீ தரும்படி இந்த புரோகிராம் கேட்கும். லைசன்ஸ் கீயினை இலவசமாக http://www1.k9webprotection.com/ என்ற முகவரியில் உள்ள இணையதளத்தில் பெற்றுக் கொண்டு பயன்படுத்தலாம்.
இதே இணைய பாதுகாப்பு ஐ-போன், ஐ-பாட் டச் மற்றும் ஐ-பேட் ஆகிய சாதனங்களில் பயன்படுத்தும் வகைகளிலும் கிடைக்கிறது. இவற்றிற்கான அப்ளிகேஷன் ஸ்டோர்களில் k9 என டைப் செய்து தேடிப் பார்த்து தரவிறக்கம் செய்து நிறுவச் செய்திடலாம்.
மற்ற நபர்களிடமிருந்து கணணியை பாதுகாக்க
உங்கள் கணணி நீங்கள் மட்டுமின்றி பலரும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதா? இதனால் மற்றவர்கள் ஒரு சில புரோகிராம்களை மட்டுமே பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும் என விரும்புகிறீர்களா?
சில புரோகிராம்களை அவர்கள் திறந்து இயக்கக் கூடாது எனத் திட்டமிடுகிறீர்களா? விண்டோஸ் 7 இயங்குதளம் இதற்கான வழிகளைத் தருகிறது.
இதற்கு ஒரு தீர்வாக குறிப்பிட்ட புரோகிராம்களை மட்டுமே மற்றவர்கள் கையாளும் வகையில் அமைக்கலாம். (உங்களிடம் இருப்பது விண்டோஸ் 7 ஹோம் பதிப்பு என்றால் இதனைச் செயல்படுத்த முடியாது.)
விண்டோஸ் ஸ்டார்ட் மெனு செல்லுங்கள். அங்கு gpedit.msc என டைப் செய்திடவும். பின்னர் Enter அழுத்துங்கள்.
இங்கு கிடைக்கும் User Configuration பட்டியில் Administrative Templates என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது ஒரு புதிய பட்டியல் கிடைக்கும். இதில் System என்ற கோப்பறையில் கிளிக் செய்திடவும்.
இனி வலது பக்கம் இருக்கும் பிரிவில் கீழாகச் சென்று Run only specified Windows applications என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இங்கு Enabled என்று உள்ள ரேடியோ பட்டனில் செக் செய்திடவும். அடுத்து ஆப்ஷன் தலைப்பில் உள்ள Show என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
இப்போது Show டயலாக் பாக்ஸ் கிடைக்கும். மற்ற பயனாளர்களுக்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க ஒவ்வொரு வரியிலும் அப்ளிகேஷன் பெயர்களை அமைத்து பின்னர் OK பட்டனைக் கிளிக் செய்திடவும்.
எடுத்துக்காட்டாக ஒருவருக்கு பயர்பொக்ஸ் பிரவுசர் இயக்கும் அனுமதி வழங்க, ஒரு வரியில் FireFox.exe என எழுதவும். பிற பயனாளர்கள் இது போல அனுமதி வழங்கப்படாத புரோகிராம்களை இயக்க முற்படுகையில் இந்த புரோகிராம் இயங்க தடை அமைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி கிடைக்கும்.
Saturday, March 31, 2012
பேஸ்புக்கில் படங்களை முழுத்திரையில் பார்ப்பதற்கு
நண்பர்கள் வட்டத்தை பெருக்குவதில் முன்னணி வகிக்கும் சமூகத்தளமான பேஸ்புக்கில் பகிரப்படும் படங்களை முழு அளவிலான திரையில் பார்ப்தற்கான வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக Google+ photo viewer இனை மேம்படுத்திய பதிப்பான Revamped Photo Veiwer எனும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் படங்களை சாதாரண அளவில் இருந்து நான்கு மடங்கு பெரிதானதாக பார்வையிட முடியும். எனினும் இது பயன்படுத்தப்படும் கணணியின் திரையை பொறுத்து வேறுபடலாம்.
இதனை இரு முறைகளில் செயற்படுத்தலாம்.
முறை 1: பேஸ்புக் பக்கத்தில் உள்ள படம் ஒன்றை கிளிக் செய்யவும், பின் அதன் மேல் சுட்டியை(mouse) அழுத்தியவாறு வலது, இடது அம்புக்குறி விசைகளை(keys) அழுத்துக.
அப்போது படத்தின் வலதுபக்க மேல் மூலையில் இரண்டு தலைகளைக் கொண்ட அம்புக்குறி வடிவம் தோன்றும். அதன் மேல் அழுத்தியதும் குறித்த படம் முழுத்திரை அளவிற்கு பெரிதாகும்.
முறை 2: பெரிதாக்க வேண்டிய படத்தின் மேல் கிளிக் செய்து பின் அப்படத்தின் கீழ் காணப்படும் option பொத்தானை அழுத்தி அதில் காணப்படும் Enter Fullscreen என்பதை தெரிவு செய்வதன் மூலம் குறித்த படத்தை பெரிதாக்க முடியும்.