Saturday, June 2, 2012

என் வாழ்க்கை சுபீட்சமடைய கணவரை விடுதலை செய்யுங்கள் - ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய வவுனியா பெண்...

புதிய மகசின் சிறைச்சாலையில் இருக்கும் தனது கணவனை பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும் என வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இளங்கேஸ்வரன் சுதர்சினி என்ற இப்பெண், 13 வருடங்களாக தண்டனை பெற்று வரும் சக்திவேல் இளங்கேஸ்வரன் என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.


தமது இல்லற வாழ்க்கை சபீட்சமடைய, தனது கணவனை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


இளங்கேஸ்வரன் சுதர்சினி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் பின்வருமாறு அமைந்துள்ளது.

கருணை உள்ளமும் நல்லாட்சி நடாத்தும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு ஐயா நான் வவுனியா மாவட்டத்தில் வசித்து வருகின்றேன். எனது தந்தை சிங்களவர் தாயார் தமிழர். ஐயா நான் கடந்த 05.04.2012 அன்று புதிய மகசின் சிறைச்சாலையில் இருக்கும் சக்திவேல் இளங்கேஸ்வரன் என்பவரை புதிய மகசின் சிறைச்சாலையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டோம்.
ஐயா எனது கணவர் வற்புறுத்தலாலும், தனது குடும்பத்தை காப்பாற்றும் நோக்கத்தோடும் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தார். அவர் தனக்கும் நாட்டிற்கும் இப்படியான ஒரு விபரீதம் ஏற்படும் என்று அறிந்திருக்கவில்லை. இவ்வாறு ஒருநிலை ஏற்படும் என்று தெரிந்திருந்தால் அவர் ஒருபோதும் இவர்களின் மிரட்டலுக்கு அடிமையாகி இருக்கமாட்டார்.
அவர் இனியொருபோதும் எந்தக் குற்றச் செயலிலும் ஈடுபடாமல் நாட்டில் நல்ல பிரஜையாக வாழ உதவி புரியவேண்டும். ஐயா எங்கள் இல்லற வாழ்க்கை சுபீட்சமடைய உங்களது அரசியல் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் அவரை மன்னித்து அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என உங்கள் இருபாதம் தொட்டு கேட்கின்றேன். உதவிபுரியவும் ஐயா!

0 comments:

Post a Comment