தேங்காய் எண்ணெய் - 1 கப் மலர்ந்த மகிழம் பூ, செண்பகப் பூ - 1 கப்
இவற்றை தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சவும். அதுவே திரவத் தைலமாக மாறியவுடன் அதை ஆற வைத்து வடிகட்டவும். பின்பு, லேசாக சுடவைத்து உள்ளங்கால், பாதம், நகங்கள், கைகள், கழுத்துப் பகுதி… என உடல் முழுவதும் நன்கு தேய்த்துக் கொள்ளவும்.
சூடு குறைவாக இருந்தால் மீண்டும் சிறிது தைலத்தை சூடு செய்து முகத்தில் மூக்கு, கண்களில் பூசி, முகமெங்கும் சிறிது பேஷியல் ஸ்ட்ரோக் கொடுத்து பரவலாக எண்ணையை தடவவும். பின்னர், மீதமுள்ள எண்ணையை தலைமுடியில் நன்கு மாலிஷ் செய்து சீவி விடும் போது, நுனிப்பிளவு இல்லாமல், முடி செழுமையாக வளரும்.
தைலம் தேய்த்து 10 நிமிடம் ஆனபின், வெது வெதுப்பான நீரில் உச்சி முதல் உள்ளங்கால் வரை பயத்தம் மாவு அல்லது மூலிகை சோப் கொண்டு குளிக்கவும். இதை தினசரி பழக்கத்தில் கொண்டு வந்தால் சருமம் உஷ்ணத்தினாலும், குளிர்ச்சியாலும் பாதிக்காமல் இருக்கும். நல்ல பளபளப்புடன் கூடிய பொலிவும் பெறலாம்.
மரிக்கொழுந்து இலைகளை மட்டும் ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். அதில் பாதாம் ஆயிலைக் கலந்து காய்ச்சி வடிகட்டவும். இந்த எண்ணையை தினமும் முதலில் தலையில் நன்கு தேய்த்து தலைமுடியை ஐந்து நிமிடம் சீவி தலைமுடியை நன்கு கட்டவும். பிறகு, முகம், கழுத்துப் பகுதிகளில் தைலத்தை பூசவும். தினமும் காலையில் இது போன்று செய்வதை பழக்கப் படுத்திக் கொள்ளவும். பின்னர், மீதமுள்ள தைலத்தை உடலெங்கும் பூசிக் குளித்து வந்தால், தலை முடி மற்றும் சருமம் நன்கு புத்துணர்ச்சியுடனும் வாசனையுடனும் விளங்கும்












0 comments:
Post a Comment