Sunday, November 27, 2011

பாமினி Font ல் டைப் செய்வது எவ்வாறு ?

பலருக்கு கணனி நண்றாக தெரிற்திருக்கும் ஆனால் கணனியில் எவ்வாறு தமிழ் டைப் செய்வது என்று தெரியாது. காரணம் அதை அவர்கள் பளகுவது கிடையாது.முதலில் கணனியில் ஏதாவது டைப்பிங் எடிட்டர் தேவை உதாரணமாக Microsoft Word இருக்குமானால் சரி. அதன் பின்னர் தமிழில் எழுதுவதற்கென பல Font கள் வருகின்றன ஆயினும் பாமினியே பிரபல்யம் மிக்கது இதனை பழகினால் போதுமானது.பாமினி எழுத்து பதிவிறக்க Click Hear.
 முதலில் கணனியில் தமிழ் எழுத தேவையான விடையங்களை பார்ப்போம்.
சரி டைப் செய்ய தேவையானவற்றை தயார் செய்து விட்டீர்கள் இனி எவ்வாறு டைப் செய்வது என பார்ப்போம். முதலில் Microsoft Word மென்பொருளை திறக்கவும். Start == > Allprograms ==> Microsoft Office ==> Ms Word.
பின்னர் கீழ் உள்ள படத்தில் உள்ளவாறு தமிழ் எழுத்துருவை தெரிவு செய்யவும்.
இனி என்ன தமிழ் எவ்வாறு டைப் செய்வது என பார்த்தால் சரிதானே. அதற்கு கீழ் உள்ள படத்தை பாருங்கள் அதில் அனைத்து ஆங்கில எழுத்துக்களுக்கும் என்ன தமிழ் எழுத்து என போடப்பட்டுள்ளது அதை பார்த்து 2 அல்லது 3 முறை பயிற்சி செய்து விட்டு பாருங்கள் பின்னர் பார்க்காமலே டைப் செய்யலாம்.

உங்களுக்கேற்ற நபரை தேடித்தரும் தொலைபேசி மென்பொருள்

ஒரே ஈடுபாடு மிக்க இன்னொருவரைத் தேடிக்கொள்ள விஞ்ஞானிகள் புதிய மென்பொருள் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.
ஓர் உணவு விடுதிக்குச் செல்லும்போது உங்களது
தொலைபேசி சிணுங்கி ஒத்த ஈடுபாட்டுடன் உள்ள ஒருவர் எங்கு இருப்பார் என்று தெரிவித்தால் எப்படியிருக்கும்! இது
கற்பனையல்ல.
உங்களுக்குப் பொருத்தமானவர்கள் எங்கு கூடுவார்கள் என்பதைத் தெரிவிக்கும் தொலைபேசிகள் விரைவில் அனைவரின் கையிலும் கிடைக்குஎன விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இது இந்து சாஸ்திரவியலின் சமஸ்கிரதச் சொல்லான ஜோதிடம் என்பதிலிருந்து உருவான ‘Jyotish’ என்று அழைக்கப்படுகின்றது.
இந்த மென்பொருள் பத்து மீற்றர்களுக்குள் உள்ள wi-fi மற்றும் Bluetooth தொடர்புகளைத் தடந்தொடர்வதினால் ஒருவரின் நகர்வுகளை வரைபடமாக்குகின்றது.
இறுதியில் இது அவர்களது அடையாளத்தையும் சமூகப் பக்கங்களின் விபரங்களையும் கொண்டு ஒருவருக்குப் பொருத்தமான நபரை அல்லது தொழில் உதவியாளரைத் தெரிவுசெய்ய உதவும் என்கின்றனர்.
இந்த மென்பொருள் போயிங் விஞ்ஞானிகளால் அவர்களது பாரிய விமானத் தொழிற்சாலைகளில் வேலைசெய்பவர்களின் நகர்வுகளைக் கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டது.
இதில் 79 பேரில் அவர்களது விருப்பத்திற்கிணங்க இப்பரிசோதனையை அன்றொயிட் தொலைபேசிகளில் செய்துபார்த்தனர்.
இது ஒருவரது Facebook நகர்வுகளைக் கண்டுபிடித்து ஏனையவர்களிடம் கூறியது. ஆனால் இதில் தனிப்பட்ட இரகசியங்கள் எதற்கும் குந்தகம் வராது என்பதை பிரபல பல்கலைக்கழக கணினி விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Sunday, November 13, 2011

யாழ். பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் விநியோகித்த பிரதான சந்தேகநபர் நேற்று கைது,

யாழ்.பாடசாலை மாணவர்களுக்கு ஹரோயின் போதைப் பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் பிரதான முகவர் ஒருவரை நேற்று யாழ்.நகர் கொட்டடி
 பகுதியில் வைத்து யாழ். பொலிஸார் கைது செய்ததாக யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிகேர தெரிவித்துள்ளார்
கைது செய்யப்பட்டவரிடம் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நாளை திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்.பாடசாலை மாணவர்கள் ஹெரோயின் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது குறித்த தகவலின் அடிப்படையில் யாழ். நகரில் உள்ள வீடொன்றில் வைத்து 8 மாணவர்களை யாழ். பொலிஸார் கைது செய்தனர். அதன் பின்னர் மேலும் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இம் மாணவர்கள் 10 பேரும் ஆரம்ப விசாரணைகளின்பின் யாழ்.மாவட்ட நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போது ஐந்து மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் ஏனைய 5 மாணவர்களும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விசாரணைகளின் அடிப்படையில் பாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின் போதைப்பொருட்களை விநியோகித்த பிரதான முகவரை நேற்று கொட்டடியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Sunday, November 6, 2011

கிளிநொச்சியில் வீடு புகுந்து குடும்பஸ்த்தர் வெட்டிக் கொலை: பெண் ஒருவர் படுகாயம்!

வட்டக்கச்சியில் வீடு ஒன்றுக்குள் நேற்று அதிகாலை புகுந்த ஆயுததாரிகள் குடும்பஸ்தர் ஒருவரை வெட்டிக் கொலை செய்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவீட்டில் இருந்த பெண்ணையும் ஆயுததாரிகள் கழுத்தில் குத்திக் காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சியின் மாயவனூர் சிவன் கோயிலை
அண்மித்துள்ள பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொலை நடந்த இடத்திலிருந்து சிறிது தூரத்திலேயே இராணுவக் காவலரண் ஒன்று இருக்கின்றபோதும் கொலையாளிகளால் எதுவித இடையூறும் இன்றித் தப்பிச் செல்ல முடிந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
50 வயதுடைய தம்பிராசா சௌந்தர்ராஜன் என்பவரே சம்பவத்தில் கொல்லப்பட்டார். இவர் திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்தவர். தொழில் நிமித்தம் வட்டக்கச்சியில் தங்கியிருந்தார்.
இவரது உறவினரான மாயவனூர் தியாகராசா சாந்தி (வயது 39) கத்தியால் குத்தப்பட்டதில் கழுத்தில் படுகாயமடைந்தார். கிளிநொச்சி வைத்தியசாலøயில் சேர்க்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காகப் பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இவரும் இவரது இளவயது மகளும் அண்மையிலேயே அந்தப் பகுதியில் மீளக்குடியமர்ந்திருந்தனர். இவர்களது வீடு பாதுகாப்பானதாக இருக்கவில்லை.
வீட்டுக்குக் கதவு, ஜன்னல்கள் இல்லை. மகளின் பாதுகாப்புக்காக இரவில் எப்போதும் தூக்கமின்றியே இருக்க வேண்டியிருக்கிறது என்றார் சாந்தி.
இவர்களது உறவினரான சௌந்தர்ராஜன் கடந்த 3 மாதங்களாக இவர்களது வீட்டில் தங்கியிருக்கிறார். தொழில் நிமித்தம் அவர் அங்கு தங்கியிருந்துள்ளார்.
அதிகாலை 3 மணியளவில் நானும் மகளும் படுத்திருந்த அறைக்குள் டோச் அடித்தபடி ஒருவர் வருவதைக் கண்டு பயந்துபோய் யாரது? என்று சத்தமிட்டேன். உடனே எனது கழுத்தில் கூரான ஏதோ ஒன்றால் குத்திவிட்டு அந்த நபர் தப்பிச் சென்றுவிட்டார் என்றார் சாந்தி.
அதன் பின்னர் சத்தமிட்டு அயலவர்களைக் கூட்டி அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றிருக்கிறார் அவரது மகள்.அம்மாவை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல முயன்றபோதே சொந்தர்ராஜன் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டோம்'' என்கிறார் சாந்தியின் மகள்.
உடனடியாக கிளிநொச்சிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. சௌந்தர்ராஜனின் சடலத்தின் அருகே டோச் லைற் ஒன்று கண்டெடுக்கப்பட்டது என்று பொலிஸார் கூறினர்.
கிளிநொச்சி நீதிவான் பெ.சிவகுமார் நேற்றுக் காலை சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அவரது உத்தரவுக்கமைய கொலையுண்டவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் அது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.சௌந்தர்ராஜனின் மனைவி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இன்னும் சில தினங்களில் அவர் நாடு திரும்ப இருந்தார் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.