Wednesday, October 24, 2012

கர்ப்பிணிகள் அதிகமாக இளநீர் பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்!

இளநீரில் எலக்ரோலைட் அதாவது மின்பகுபொருள் அதிகமாக உள்ளது. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்றுநோய் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர், இளநீரில் மிதமாகவே சர்க்கரை, உப்பு மற்றும் புரத சத்து உள்ளது.
மேலும் இதில் குளோரைடு,பொட்டசியம் மற்றும் மக்னிசியம் அதிகமாக உள்ளது. இளநீரில் உள்ள பொட்டாசியம் இரத்த கொதிப்பையும்,இதயத்தின் செயல்களையும் சீராக செய்ய உதவுகிறது. இளநீரில் நார் சத்து, மாங்கனீஸ்,கால்சியம், ரிபோஃப்ளோவின் , மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் சிறந்த மருந்துப் பொருளாகவும் திகழ்கிறது. இளநீரில் அதிகமாக லாரிக் அசிட் உள்ளது. லாரிக் அசிட், ஃபேட்டி அமிலம் சுரக்க காரணமாக உள்ளது.
லாரிக் அசிட் , ஆன்டி பங்கல், ஆன்டி பாக்டீரியல் தன்மை இதில் அதிகமாக உள்ளதால் இது கர்பகாலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தி, நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது. இளநீரில் மின்பகுபொருள்(ஏலேக்ட்ரோல்ய்டே) அதிகமாக உள்ளதால் இது உங்கள் நாவறட்சியில் இருந்தும் உடம்பில் உப்பு தன்மை குறைந்தால் இயற்கை முறையில் உங்களின் உடம்பில் உள்ள உப்பின் அளவை சரி செய்யவும் உதவுகிறது. வயிற்று போக்கு அதிகமாக இருக்கும் பொழுது உடம்பின் நீரின் அளவை சமன் படுத்த இளநீர் அருந்துவது மிகவும் அவசியம். இது இயற்கை குளுகோஸ் ஆக செயல்படுகிறது. இளநீரில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை என்றும் இது உடலின் நல்ல கொலஸ்ட்ராலை அதிக படுத்த உதவுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இளநீர் குடிப்பதால், கர்ப காலத்திற்கே உரித்தான, மலச் சிக்கல், வயிறு உப்பிசம், நெஞ்சு எரிச்சல் குறிப்பிட்ட அளவு சரியாக வாய்ப்புள்ளது. எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் கடையில் விற்கும் சோடாக்களை வாங்கி குடிப்பதையும், கோலா வகைகளையும் கர்ப காலத்தில் குடிப்பதை தவிக்கவும். அதிலும் காபின் உள்ளது. எனவே இயற்கை அளித்த இளநீர் பருகுவதே சிறந்தது என்றும் இது இயற்கையிலே சுத்திகரிக்க பட்டுள்ளதால் தூய்மைகேடு மற்றும் நோய் தாக்குதல் பற்றி கவலை படமால் அருந்தலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இளநீரின் உள்ள இந்த இயற்கை மருத்துவ குணங்களினாலேயே கர்பவதிகளுக்கு மிகவும் பரிந்துரைக்க படுகிறது. எனவே கர்ப்பிணிகளே இளநீர் குடிங்க நோயில்லாத குழந்தைகள் பிறக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

Tuesday, October 23, 2012

முதல் மனிதன் குரங்கு இல்லையாம்..அணில்: சொல்கிறது புதிய ஆய்வு!

நமது மூதாதையர்கள் அதாவது முதல் மனிதன் குரங்கு போல இல்லாமல், அணில் போன்று இருந்ததாக புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கை இராணுவத்திற்கு பாதுகாப்பு வழங்கும் முன்னாள் போராளிகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் என்ற போர்வையில் சமுகப் பாதுகாப்பிற்கென நியமிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை படையினர் தமது முகாம்களுக்கு பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம், கைவேலி, போன்ற கிராமங்களிலிருந்து 250 முன்னாள் பெண் போராளிகளும் , 100 முன்னாள் ஆண் போராளிகளும் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் ஆக நியமிக்கப்பட்டனர்.

7 மாணவர்களிடம் தவறான உறவு வைத்துக் கொண்ட கணித ஆசிரியை கைது!

கணித ஆசிரியையாக பணிபுரியும் 24 வயது பெண், தன்னிடம் படித்த 7 மாணவர்களிடம் முறைகேடான உறவில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

Sunday, October 21, 2012

மீண்டும் நடிக்க வந்தார் குட்டி ராதிகா !

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை மணந்த குட்டி ராதிகா மீண்டும் நடிக்க வந்தார்.
இதில் யாஷ், திவ்யா நடித்தனர்.இதையடுத்து சுவீட்டி நானா ஜோடி என்ற படத்தை தயாரிப்பதுடன் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, ராதிகா நடித்த பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன.மீண்டும் நடிக்க வந்தது பற்றி ராதிகா கூறுகையில், படங்களில் கிளாமராக நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் ஆபாசமான உடை அணிய மாட்டேன். இந்த கட்டுப்பாடுகளுடன் படங்களில் நடிக்கிறேன்.இப்படத்தில் ஆதித்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே அவருடன் நான் நடித்திருக்கிறேன். தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது என்றார்.

பற்களின் ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகள்!


பற்களை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமானது. அதிலும் பற்கள் நன்கு சுத்தமாக இருக்க, ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பிரஷ் பண்ண வேண்டும்.
இதனால் வாயில் ஏற்படும் துர்நாற்றம், பற்களுக்கிடையே உணவுப் பொருட்கள் மாட்டிக் கொள்ளுதல், சொத்தை பற்கள் ஏற்படுதல் போன்றவை ஏற்படாமல் இருப்பதோடு, பற்களும் வெள்ளையாக பளிச்சென்று இருக்கும்.
பொதுவாக பற்களில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு உண்ணும் உணவுகளே காரணங்களாகின்றன. அதிலும் அவற்றை உண்பதால் பற்கள் மஞ்சள் நிறத்தில் மாறுவதோடு, பற்களுக்கிடையே உணவுப் பொருட்கள் சிக்கிக் கொண்டு பற்களை சொத்தையாகவும், துர்நாற்றம் உள்ளதாகவும் மாற்றுகிறது.
ஆகவே அத்தகைய உணவுகளை உண்ட பின், பற்களில் மாட்டிக் கொள்ளும் உணவுப் பொருட்களை நீக்க டூத் பிக் அல்லது டென்டல் ப்ளாஸ் பயன்படுத்துவது நல்லது.
சீஸ்
உணவுகளில் வித்தியாசமான சுவைக்காக சேர்க்கும் பால் பொருட்களில் ஒன்று தான் சீஸ். இதனை சேர்ப்பதால் அந்த உணவை சாப்பிடும் ஆர்வம் அதிகரிக்கும்.
அவ்வாறு சேர்க்கும் சீஸை சாப்பிடும் போது அவை பற்களில் சிக்கிக் கொண்டு, பற்களை சொத்தை ஆக்குவதோடு, வாய் துர்நாற்றத்தையும் உண்டாக்குகிறது.
சொக்லேட்
அனைவருக்குமே சொக்லேட் மிகவும் பிடிக்கும். சொக்லேட் சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் அதில் உள்ள இனிப்பு பற்களில் கிருமிகள் மற்றும் பக்டீரியாக்களை தங்க வைக்கும்.
ஆகவே அதனை தொடர்ந்து அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் அதை சாப்பிட்டப் பின் பற்களை மறக்காமல் பிரஷ் செய்துவிட வேண்டும்.
பாப்கார்ன்
பாப்கார்ன் பற்களுக்கிடையே மாட்டிக் கொள்ளும். அதனை நீக்குவது என்பது கடினமானது. ஆகவே அதனை நீக்க டென்டல் ப்ளாஸ் (dental floss) தான் பயன்படுத்த வேண்டும்.
பிரட்
அதிகமான அளவு நார்ச்சத்து நிறைந்துள்ள பிரட் கூட பற்களில் மாட்டும் உணவுப் பொருட்களில் ஒன்று. இது வறட்சியுடன் இருப்பதால், ஈறுகளில் மாட்டிக் கொண்டு, வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் பற்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
நூடுல்ஸ்
நூடுல்ஸ் என்றாலே பிடிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். இதனை எந்த நேரத்தில் கொடுத்தாலும் சாப்பிடுவோம். அத்தகைய நூடுல்ஸ் கூட பற்களில் மாட்டிக் கொண்டு, நீண்ட நேரம் இருந்தால் பக்டீரியாவை அதிகரிக்கும்.
இறைச்சி
அசைவ உணவு சாப்பிடுபவர்கள் இறைச்சியை நன்கு கடித்து இழுக்கும் போது, அதில் உள்ள சிறிய பகுதி கண்டிப்பாக பற்களில் மாட்டிக் கொள்ளும்.
அவ்வாறு மாட்டிக் கொள்வதை நீக்க முடியாமல் இருக்கும். மேலும் அவை பற்களில் இருப்பதால், அதிக எரிச்சலை ஏற்படுத்தும்.
ஆகவே எப்போது அதனை சாப்பிட்டாலும், டென்டல் ப்ளாஸை பயன்படுத்துவது நல்லது.