கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை மணந்த குட்டி ராதிகா மீண்டும் நடிக்க வந்தார்.
இயற்கை, வர்ணஜாலம், மீசை மாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் குட்டி ராதிகா.
இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இதையடுத்து நடிப்புக்கு முழுக்கு போட்டார்.
சமீபத்தில் லக்கி என்ற படம் மூலம் தயாரிப்பாளராக திரையுலகிற்குள் நுழைந்தார்.
இதில் யாஷ், திவ்யா நடித்தனர்.இதையடுத்து சுவீட்டி நானா ஜோடி என்ற படத்தை தயாரிப்பதுடன் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, ராதிகா நடித்த பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன.மீண்டும் நடிக்க வந்தது பற்றி ராதிகா கூறுகையில், படங்களில் கிளாமராக நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் ஆபாசமான உடை அணிய மாட்டேன். இந்த கட்டுப்பாடுகளுடன் படங்களில் நடிக்கிறேன்.இப்படத்தில் ஆதித்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே அவருடன் நான் நடித்திருக்கிறேன். தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது என்றார்.

இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இதையடுத்து நடிப்புக்கு முழுக்கு போட்டார்.
சமீபத்தில் லக்கி என்ற படம் மூலம் தயாரிப்பாளராக திரையுலகிற்குள் நுழைந்தார்.

0 comments:
Post a Comment