Saturday, February 23, 2013

மீண்டும் திரையுலகை கலக்க போகும் நிலா....


எஸ்.ஜே.சூர்யாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நிலா. சிம்ரனுக்கு போட்டியாக வருவார் என்று கருதப்பட்ட நிலா, அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்தார். பின்னர் காணாமல் போனார். படப்பிடிப்பு தளங்களில் ஆர்ப்பாட்டமாக நடந்து கொள்வது, நட்சத்திர ஓட்டல் வசதி, குளிக்க மினரல் வாட்டர் வசதி என பல பிரச்னைகளில் சிக்கியவருக்கு பலரும் வாய்ப்புத் தர தயங்கினார்கள். அதோடு நிலா நடிப்பு கிலோ என்ன விலை என்று வேறு கேட்டார். இவர் நடித்து வெளிவராமல் இருந்த கில்லாடி படத்தை இப்போது வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் மீண்டும் நுழைந்து விடலாம் என்று கருதிய நிலா இப்போது மீடியாக்கள் முன் வந்து நிற்கிறார்.
வாய்ப்பு கிடைக்காமல் போனது ஏன் என்பதற்கு அவர் அளித்துள்ள விளக்கம் இது..., ' நான் சினிமாவை மட்டும் நம்பியிருக்கவில்லை, எங்க அப்பா ஓட்டல் பிசினஸ் பண்ணுகிறார். அதில் நானும் பார்ட்னராக இருக்கிறேன். உலகம் முழுவதும் எங்களுக்கு ஓட்டல் இருக்கிறது. அதை கவனிக்க வேண்டாமா? அதுமட்டுமில்லை நான் பேஷன் டிசைனிங் படிச்சிருக்கேன். நிறைய பேஷன் ஷோக்கள் நடத்துறேன். இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன். இந்தியில் 2 படத்தில் நடிச்சிட்டிருக்கேன், தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் நடிக்கிறேன் தெரியுமா? தமிழில்தான் நான் குளிக்க மினரல் வாட்டர் கேட்டேன். அவரை காதலிக்கிறேன். இவரை காதலிக்கிறேன்னு என் மேல சர்ச்சையை கிளப்பி அனுப்பிட்டாங்க. 'கில்லாடி'க்கு பிறகு நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவேன்' என்கிறார்.

0 comments:

Post a Comment