இத்தளம் உருவாகி 10 வருடம் கூட ஆகாத நிலையில் இந்நிறுவனம் உலக நாடுகளின் முன்னணி நிறுவனங்களுக்கு போட்டியாக தீகழ்கிறது. மேலும் கடந்த வருடத்தின் பிப்ரவரி மாதம் தான் இந்நிறுவனம் பங்கு சந்தையில் குதித்தது. இந்நிலையில் முதல் சுற்றிலேயே சுமார் 16 பில்லியன் டாலர்களை திரட்டியது.
இதனால் பங்கு சந்தையில் இந்நிறுவனம் முடி சூடா மன்னனாக உள்ளது. இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 55.57 அமெரிக்க டாலராகும். மேலும் இந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் 100 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்து வருவது குறிப்பிடதக்கது.
இந்நிறுவனத்தின் சிஇஒ மார்க் ஜுக்கர்பெர்க் நேற்று 41.4 மில்லியன் பங்குகளை விற்றார் இதன் மதிப்பு சுமார் 2.3 பில்லியன் டாலர் ஆகும். பேஸ்புக் நிறுவனம் இந்த வருட துவக்கத்திலேயே 70 மில்லயன் முதல் நிலைப் பங்குகளை விற்க திட்டமிட்டு இருந்தது.
இதன் ஒரு பகுதிய இந்த பங்கு விற்பனை. இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு விலை 4 சதவீதம் சரிந்தது. பின் சில மணி நேரங்களில் இந்த பங்குகளின் விலை நிலையான நிலையை அடைந்தது.
0 comments:
Post a Comment