Saturday, January 21, 2012

உலகப்புகழ் வாய்ந்த பாடகி ஷகீராவுடன் சிம்பு

போடா போடி திரைப்படத்திற்கு இசையால் உயிர் கொடுக்க சர்வதேச பாடகியான ஷகீராவை பாட அழைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒஸ்தி படத்தினை தொடர்ந்து போடா போடி,வேட்டை மன்னன், வட சென்னை என பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு.
உலக மக்கள் அனைவருமே பரஸ்பரம் அன்பு செலுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆல்பம் ஒன்றை தயாரித்தார். இப்பாடலை சிம்பு எழுதி இசையமைத்தார்.

அமெரிக்காவில் உள்ள எலன் மொரிசனுடன் இணைந்து இதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டார்.

ஆல்பம் பணிகளின் தொடர்புகளால் பல்வேறு வெளிநாட்டு இசை கலைஞர்களுடன் நட்பு பாராட்டி வருகிறார் சிம்பு.

இதனையடுத்து போடா போடி திரைப்படத்திற்கு பாடுவதற்காக சர்வதேச பாடகியான ஷகீராவை அழைத்து வர சிம்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


பில்லா2 Theme பாடலுக்காக அமெரிக்கா பறந்த யுவன் !

பில்லா 2 படத்தினைப் பற்றி பல்வேறு செய்திகள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. படத்தில் மூன்று பாடல்களை முடித்து கொடுத்து இருக்கிறார் யுவன்.

தற்போது யுவன் சங்கர் ராஜா அமெரிக்காவிற்கு பறந்து இருக்கிறார். அங்கு தான் பில்லா 2 இயக்குனரான சக்ரி டோலெட்டியும் இருக்கிறார். இருவருமே அங்கு பில்லா 2 படத்தின் THEME பாடலை உருவாக்க இருக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா தனது டிவிட்டர் இணையத்தில் பில்லா 2 படத்தில் மூன்று பாடல்களை முடித்து விட்டேன். THEME பாடலுக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. அது போக இன்னும் ஒரு பாடல் பாக்கி இருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறார்.

பில்லா 2 படத்தின் வெளிநாட்டு உரிமையை ஜி.கே.மீடியா என்ற நிறுவனம் 5.3 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


காதலனுடன் மோதலா? நடிகை திவ்யா விளக்கம்

‘காதலன் ரபேலுடன் எந்த மோதலும் இல்லை‘ என்றார் திவ்யா. ‘குத்து’, ‘வாரணம் ஆயிரம்’, ‘பொல்லாதவன்’ உள்பட பல படங்களில் நடித்தவர் திவ்யா.
சுவிட்சர்லாந்து தொழிலதிபர் ரபேலுடன் நெருங்கி பழகும் திவ்யா அவரை காதலிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டதாக கிசுகிசு பரவியது.

இதுபற்றி திவ்யா கூறியதாவது:
சமீபத்தில் அம்மாவுடன் சுவிட்சர்லாந்து சென்றிருந்தேன். அங்கு ரபேலை சந்தித்தேன். எங்களை நல்லபடி உபசரித்தார். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் ஏற்படவில்லை.
நாங்கள் பிரியவும் இல்லை. திரையுலகில் வீணாக வதந்தி பரப்புகிறார்கள். ரபேலுடனான உறவு நல்லமுறையில் தொடர்கிறது. த
ன் தொழில் நிறுவனத்தின் கிளைகளை இந்தியாவில் பல இடங்களில் அவர் திறக்க இருக்கிறார். அவருக்கு உறுதுணையாக இருப்பேன். தமிழில் வெற்றி மாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘வடசென்னை’ என்ற படத்தில் நடிக்கிறேன்.
இப்படத்தில் ஆண்ட்ரியாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  தேசிய விருது பெற்ற ‘ஆடுகளம்’ படத்தை வெற்றி மாறன் வழங்கி இருக்கிறார். ஏற்கனவே ‘பொல்லாதவன்’ படத்தில் தனுஷ் ஜோடியாக அவருடன் பணியாற்றி இருக்கிறேன். அவர் சிறந்த இயக்குனர்.


  

வறுமையில் தற்கொலை செய்த போராளி குடும்பம்! புலத்தில் பணம் கறக்கும் பிணாமிகள்!!


இரு உயிர்கள் ஓருயிராய்ப் பிரிந்தது. உலகமே கண்ணீர் வடிக்கிறது. பிரிவுக்கான காரணத்தைக் கேட்டால் கண்கள் இரண்டும் கண்ணீரில் மிதக்கின்றது.

வறுமையின் உச்சநிலை, வெறுத்து விட்ட வாழ்க்கை, இதனால் தற்கொலை செய்து கொண்டது இரண்டு உயிர்கள். ஒன்றை விட்டு ஒன்று பிரியாத இந்த உயிரிழப்பு உலகில் வாழும் அத்தனை உயிரிழனங்களின் கண்களிலும் கண்ணீரைச் சொரிய வைத்து விட்டது.
இளம் தம்பதிகளின் இந்தத் தற்கொலை வறுமையால் நேர்ந்த கதி என்னும்போதுதான் ஞாபகம் வருகின்றது, புலம்பெயர் தேசத்திலே மேற்கொள்ளப்படுகின்ற வசூலிப்புக்களும், வெற்றுக் கோஷங்களும் இலங்கையில் வாழுகின்ற மக்களின் கஞ்சியில் மண்ணைத்தூவுவதாகவே உள்ளது என்பது.

இந்த வசூலிப்புக்களும், கோஷங்களும் ஈழத்தில் வாழுகின்ற எம்மவர்களின் வறுமையைப் போக்காது. மாறாக புலம்பெயர் தேசங்களில் இருக்கின்ற, புலிகளின் பெயர் சொல்லி பணம் கறக்கின்றவர்களின் சொகுசான வாழ்க்கைக்கு அச்சாரமிடுகின்றன.

ஆயுதம் ஏந்தி தமிழ் மக்களுக்காகப் போராடிய இந்தப் பிஞ்சு உள்ளங்கள், வறுமையின் கொடுமையால் பிரிந்து விட்டதென்ற செய்தி அறிந்தாவது, ஈழத்தில் இவ்வாறு வறுமையின் கொடுமையைச் சந்தித்துச் சாவதற்குத் தயார் நிலையில் இருக்கும் எத்தனையோ குடும்பங்களைக் காப்பாற்றும் எண்ணம் உங்களுக்கு வராதா?

காலிழந்த கணவனைக் கட்டியணைத்தபடி இறுதித் தூக்கம் தூங்கும் ஈழத்துப் பெண், இதுவரை காலமும் ஈழ மண் கணாத சோகம். இதை அறிந்தும், கண்டும் காணாததுபோல் இருக்கும் புலம்பெயர் பிணாமிகளே!

உங்களால் லண்டனில் அண்மையில் உருவாக்கப்பட்ட பணம் கறக்கும் உண்டியல். இந்த உண்டியலில் பணத்தை நிரப்புவதற்காக நீங்கள் கூறுவது இரண்டு காரணம்.

அதில் ஒன்று போர்க் குற்றம் புரிந்த இலங்கை அரசுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தல், மற்றையது ஈழத்தில் வறுமைப்படும் குடும்பங்களுக்கு உதவி செய்தல்.

அந்த உண்டியலில் பொறிக்கப்பட்டிருக்கும் படம் ஈழம். ஈழத்தைச் சொல்லிச் சொல்லியே உங்களின் சுகபோக வாழ்வின் இருப்பை உறுதிப்படுத்துகின்றீர்கள்.

அத்துடன் ஈழத்தில் வறுமையில் வாடும் மக்களை வைத்துச் சேகரிக்கும் பணத்தை உங்கள் சுகபோகங்களுக்கு நீங்கள் பயன்படுத்தி விட, இங்கு ஈழத்தில் வறுமையில் குடும்பம் குடும்பமாக நஞ்சருந்தி உயிர் துறக்கின்றது தமிழினம்.

கடந்த காலங்களில் புலம்பெயர் தேசங்களில் வன்னியில் வறுமையில் வாடும் மக்களுக்கென சேகரிக்கப்பட்ட நிதிக்கு என்ன நேர்ந்தது என்பது கூடத் தெரியாதிருக்கும் போது, தற்போது உதயம் பெற்றுள்ளது உண்டியல் கலாசாரம்.

இதேநேரம் புலிகளின் பெயர்களைப் பயன்படுத்தி, மாவீரர் தின நிகழ்வுகளை பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து கொண்டாடி பிரித்தானியாவில் மட்டும் இலங்கைப் பணம் 4 கோடி ரூபாயைக்கு மேல் செலவு செய்வதை விடுத்து, ஒன்றாக சேர்ந்து அதனை ஒரு கோடி ரூபாய்க்குக் கொண்டாடி விட்டு மிகுதியை வன்னியில் வாடும் மக்களுக்கு அனுப்பியிருக்க முடியும்.

அதைவிடுத்து பெயருக்காகவும், புகழுக்காகவும், போட்டி போட்டுக் கொண்டு மாவீரர் தின நிகழ்வுகளைக் கொண்டாடுவது, உயிருடன் உள்ள தந்தைக்கு உதவாமல், இறந்த பின் துவசம் கொடுப்பதற்கு ஒப்பானதாகும்.

இதேவேளை வெளிநாடுகளில் நீங்கள் வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பை சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காகவே நீங்கள் இவர்களுக்கு வழங்குகின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இதற்குச் சான்றாகத்தான் இந்த இளம் குடும்பத்தின் தற்கொலை அமைந்துள்ளது. கடந்த காலங்களில் உங்களிடம் சேகரிக்கப்பட்ட நிதி இங்கு வந்து சேர்ந்திருந்தால் இந்த இளம் குடும்பத்தைக் காப்பாற்றியிருக்க முடியுமல்லவா?


இந்தச் செய்தி கூட ஈழத்தில் இருந்தே எழுதப்படுகின்றது. எனவே இனியாவது ஈழத்தில் வறுமையில் வாடும் மக்களுக்கு என நிதி வழங்க வேண்டுமென்றால் இவ்வாறான பிணாமிகளிடம் வழங்காதீர்கள் என்பது ஈழத்தில் இருந்து நாம் இந்தச் செய்தி ஊடாக அறிவிக்கும் அறிவிப்பாகும்.

இதேவேளை வாழ்ந்தாலும் உன்னோடுதான், இறந்தாலும் உன்னோடுதான் என இரண்டு பிஞ்சுகளும் இறந்து கிடக்கின்றது.


பணம் வசூலிப்பவர்களும் சரி, வழங்குபவர்களும் சரி ஒரு தடவைக்கு இரு தடவை இந்தத் தகவலை நன்கு படியுங்கள். அப்போதாவது உங்களின் நிலைமையை மாற்றி அமைப்பீர்கள் என நாம் நம்புகின்றோம்.

ஈழத்திலிருந்து ஒரு அவலக் குரல்.

ஜெயலலிதா - சசிகலா நெருக்கத்தில் இருந்தது செக்ஸ்


தமிழ் நாட்டின் இரும்புப் பெண் என்று ஜெயலலிதாவை சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் கண்டு பிடித்து உள்ளனர்.

துணைத் தூதரகத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு ஜெயலலிதா குறித்து அனுப்பி வைக்கப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து இத்தகவல் வெளியாகி உள்ளது.
சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுகின்றமையில் இரும்புக் கரங்களுடன் முதல்வர் ஜெயலலிதா நடந்து கொண்டார், ராஜிவ் காந்தி கொலையை தொடர்ந்து முதன் முதல் தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட இவர் தமிழ் நாட்டில் வியாபித்து வெளிப்படையாக செயல்பட்டு வந்த புலிகள் இயக்கத்தை பூண்டோடு ஒழிக்க உத்தரவிட்டு இருக்கின்றார்.
தமிழ் நாட்டில் புலிகளை முடிக்க என்னென்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்யுங்கள் - புலிகளைச் சார்ந்தவர்களை தமிழ் நாட்டில் இருந்து ஒழிக்க நீதிக்கு புறம்பான கொலைகளை மேற்கொண்டால்கூட பரவாயில்லை என்று இவர் பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவருக்கு உத்தரவிட்டு இருக்கின்றார்.
அப்பாதுகாப்பு உயரதிகாரியிடம் இருந்து இத்தகவல் துணைத் தூதரகத்துக்கு கிடைத்து உள்ளது என ஆவணத்தில் எழுதப்பட்டு உள்ளது.


புலிகளுக்கு எதிரான இவரது அதிரடி நடவடிக்கைகள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளான போதும் தமிழ் நாட்டில் இருந்து புலிகள் வெளியேறிச் செல்ல இந்நடவடிக்கைகள் காரணம் ஆயின.
குற்றச் செயல்களுக்கு எதிராக இவரால் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கைகள் புலிகளுடன் மட்டும் நின்று விடவில்லை.
2004 ஆம் ஆண்டு முதல்வராக இவர் பதவியில் இருந்தபோதுதான் சந்தன கடத்தல் வீரப்பன் தமிழ்நாட்டு பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். வீரப்பன் பல தசாப்த காலங்கள் அதிகாரிகளுக்கு தண்ணீர் காட்டி வந்தவன். பொலிஸார் மற்றும் வன அதிகாரிகள் உட்பட நூற்றுக் கணக்கானோரை கொன்றவன் என்றும் ஆவணத்தில் உள்ளது.


ஜெயலலிதா பற்றிய குறிப்பில் இவர் இரும்புப் பெண் என்பதற்கு அப்பால்  மேல் நாட்டு ஸ்டைலிலான குட்டைப் பாவாடையை அணிந்து தமிழ் திரைப்படத்தில் முதன்முதல் தோன்றி இருந்த நடிகை. எம்.ஜி.ஆருக்கு பொருத்தமான ஜோடியாக மாத்திரம் அன்றி எம்.ஜி.ஆரின் வைப்பாட்டியாகவும் அறியப்படுபவர் என்றும் ஆவணத்தில் உள்ளது.


ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையிலான நெருங்கிய உறவில் செக்ஸ் சம்பந்தப்பட்டு இருக்கின்றது. ஆனால் இருவராலும் பகிரங்கமாக ஒருபோதும் வெளியுலகத்துக்கு ஒப்புக் கொள்ளப்படவோ, வெளிப்படுத்தப்படவோ இல்லை என்றும் ஆவணத்தில் உள்ளது.


இந்திய அமைச்சரவையில் ஒரே ஒரு பெண் என்று இந்திரா காந்தி வர்ணிக்கப்பட்டார். அதே போல அ.தி.மு.கவில் ஒரே ஒரு ஆண் என்று ஜெயலலிதா வர்ணிக்கப்படுகின்றார் என்றும் ஆவணத்தில் உள்ளது.


இவரை அரசியலுக்கு கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர் என்கிற ஆணாக இருந்தாலும் அரசியலில் உச்சாணிக் கொப்பைத் தொட்டு ஒரு பெண்ணாக கம்பீரத்துடன் நின்று நிலைத்து வருகின்றார் என்றும் ஆவணத்தில் உள்ளது.

Friday, January 20, 2012

கர்மாவில் நடிக்க ரெடியா...? கமான்யா!

க்ரியேடிவ் கிரிமினல் என்னும் புதிய பட நிறுவனம் கர்மா என்ற பெயரில் ஒரு புதிய தமிழ் படத்தை தயாரிக்கிறது. இப்படத்தை தயாரிப்பதுடன்,
இயக்கவும் செய்கிறார் அர்விந்த் ராமலிங்கம். இவர் பல விருதுகள் பெற்ற விளம்பர படங்களை இயக்கிய விளம்பர பட உலக வல்லுநர் ஆவார்!

இவர் கர்மா படத்தின் கதையை சில முன்னணி நடிகர்கள் மற்றும் கதைக்கு ஏற்ற சில நடிகர்களிடமும் விவரித்தபோது, இப்படத்தின் கதைக்களமும், நாயகனின் பாத்திரமும் அவர்களை வெகுவாக கவர்ந்த போதிலும், அந்த பாத்திரத்தில் உள்ள நெகடிவ் தன்மை அவர்களை நடிக்க தயங்க வைத்துள்ளது. அதன் விளைவு இயக்குநர்-தயாரிப்பாளர் அர்விந்த் ராமலிங்கத்தை புதுமுகங்களை தேர்வு செய்ய தூண்டி விட்டிருக்கிறது.

அதன்படி புதுமுக தேர்வை சாதாரணமாக சம்பிரதாயமாக செய்யாமல் www.karma-movie.com என்னும் தனது படப்பெயரிலான இணையதளத்தில் அதற்கான வழிமுறைகளை பட்டியலிட்டு உள்ளார். கர்மா படத்தில் நடிக்க தைரியமுள்ள புதுமுக நடிகர்-நடிகைகள் தங்களின் புகைப்படத்தையும், வீடியோ சாம்பிள்களையும் karmamoviecasting@gmail.com என்னும் கர்மா பட இணையதள முகவரிக்கு வரும் ஜனவரி 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.

முதல்சுற்றில் தேர்வு பெறும் நட்சத்திரங்களை பேஸ்புக் இணையதளத்தில் அறிவிக்க உள்ளதுடன், அந்த பக்கத்திற்கு யார் வேண்டுமானாலும் சென்று தங்களது வாக்கை எந்த ஒரு நடிகர், நடிகைக்கும் அளிக்கும் வகையில் அந்த பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளதாம்! அதிக வாக்குள் பெற்ற நடிகர், நடிகைகள் நேரடியாக ஆடிடேஷனுக்கு அழைக்கப்படுவார்கள்.
அவர்களில் சிறந்த நடிகர், நடிகையை இயக்குநரே நேரடியாக தேர்வு செய்கிறார். அந்த புதுமுகங்களுடன் கர்மா படத்தின் படப்பிடிப்பை பிப்ரவரியில் தொடங்கி மே மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார் இப்படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான அர்விந்த ராமலிங்கம்!