Saturday, January 21, 2012

காதலனுடன் மோதலா? நடிகை திவ்யா விளக்கம்

‘காதலன் ரபேலுடன் எந்த மோதலும் இல்லை‘ என்றார் திவ்யா. ‘குத்து’, ‘வாரணம் ஆயிரம்’, ‘பொல்லாதவன்’ உள்பட பல படங்களில் நடித்தவர் திவ்யா.
சுவிட்சர்லாந்து தொழிலதிபர் ரபேலுடன் நெருங்கி பழகும் திவ்யா அவரை காதலிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டதாக கிசுகிசு பரவியது.

இதுபற்றி திவ்யா கூறியதாவது:
சமீபத்தில் அம்மாவுடன் சுவிட்சர்லாந்து சென்றிருந்தேன். அங்கு ரபேலை சந்தித்தேன். எங்களை நல்லபடி உபசரித்தார். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் ஏற்படவில்லை.
நாங்கள் பிரியவும் இல்லை. திரையுலகில் வீணாக வதந்தி பரப்புகிறார்கள். ரபேலுடனான உறவு நல்லமுறையில் தொடர்கிறது. த
ன் தொழில் நிறுவனத்தின் கிளைகளை இந்தியாவில் பல இடங்களில் அவர் திறக்க இருக்கிறார். அவருக்கு உறுதுணையாக இருப்பேன். தமிழில் வெற்றி மாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘வடசென்னை’ என்ற படத்தில் நடிக்கிறேன்.
இப்படத்தில் ஆண்ட்ரியாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  தேசிய விருது பெற்ற ‘ஆடுகளம்’ படத்தை வெற்றி மாறன் வழங்கி இருக்கிறார். ஏற்கனவே ‘பொல்லாதவன்’ படத்தில் தனுஷ் ஜோடியாக அவருடன் பணியாற்றி இருக்கிறேன். அவர் சிறந்த இயக்குனர்.


  

0 comments:

Post a Comment