Tuesday, July 30, 2013
40,000 ரூபாயில் ஹெலிகாப்டர்....இந்திய மெக்கானிக் சாதனை !!!

ஒரிசாவை சேர்ந்த அபுமன்யூ சமால் (Abhmanyu Samal) என்னும் இவர் தனியாளாக ஒரு ஹெலிகாப்டரை உருவாக்கியுள்ளார்...இவருக்கு வயது 40. இவர் ஒரு மெக்கானி.. இரண்டு வருட கடின உழைப்பில் இதனை உருவாக்கியுள்ளார்...இதற்காக இவர் செய்த செலவு வெறும்40,000 மட்டுமே..இருசக்கர வாகனத்திற்கு பயன்படும் இஞ்சினை இதில் பயன்படுத்தியுள்ளார்...இதன் எரிபொருள் கொள்ளளவு 5 லிட்டர்...இதன் வேகம் 120கி/மஇவரை போன்ற திறமைசாளிகளை வெளிகொண்டுவந்துஊக்குவித்தால்....கோடி கோடியாய் ஊழல் செய்து வெளிநாட்டிலிருந்து ஹெலிகாப்டர் வாங்க தேவையில்லை....நாமே செய்துவிடலாம்... அவனைவிட தரமாக...திறமைசாளிகளுக்கு பாரதத்தில் என்றுமே பஞ்சமில்லை...அதற்கு ஓர் சிறந்த உதாரணம் இந்த விஞ்ஞானி...
2015 உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு...
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. 2011–ம் ஆண்டுக்கான உலக கோப்பை போட்டியை இந்தியா, இலங்கை, வங்காள தேசம் ஆகியவை இணைந்து நடத்தியது. இதில் இலங்கை அணியை வீழ்த்தி டோனி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியது.
2015–ம் ஆண்டுக்கான உலக கோப்பை போட்டியை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 23 ஆண்டுக்கு பிறகு அங்கு உலக கோப்பை போட்டி நடக்கிறது. 1992–ம் ஆண்டு நடந்த அந்த உலக கோப்பை போட்டியில் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
2015–ம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது.
பிப்ரவரி 14–ந்தேதி போட்டி தொடங்குகிறது. மார்ச் 29–ந்தேதி வரை உலக கோப்பை போட்டி நடக்கிறது. இந்தப்போட்டியில் 14 நாடுகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் (‘பி’ பிரிவு) இடம் பெற்று உள்ளன.
இரண்டு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் வருமாறு:–
‘பி’ பிரிவு:– தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, குவாலிபையர் 4.
தகுதி சுற்று போட்டியில் இருந்து 3 அணிகள் தகுதி பெறும்.
ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் இரண்டு பிரிவில் இருந்தும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும்.
உலக கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டம் நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட் சர்ச்சில் நடக்கிறது. இதில் இலங்கை– நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. பகல் ஆட்டமாக இந்தப் போட்டி நடக்கிறது. அதே தினத்தில் (பிப்ரவரி 14) ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து– ஆஸ்திரேலியா மோதுகின்றன. பகல்– இரவாக இந்த ஆட்டம் நடக்கிறது.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பரம்பரை எதிரியான பாகிஸ்தானை சந்திக்கிறது. இந்த ஆட்டம் பிப்ரவரி 15–ந்தேதி அடிலெய்டுவில் நடக்கிறது. அதை தொடர்ந்து 22–ந்தேதி தென்ஆப்பிரிக்க அணியை சந்திக்கிறது.
4 கால் இறுதி ஆட்டங்களில் 3 போட்டி ஆஸ்திரேலியாவிலும் (சிட்னி, மெல்போர்ன், அடிலெய்டு), ஒரு போட்டி நியூசிலாந்திலும் (வெலிங்டன்) நடக்கிறது. முதல் அரை இறுதி ஆட்டம் மார்ச் 21–ந்தேதி ஆக்லாந்திலும், 2–வது அரை இறுதி ஆட்டம் மார்ச் 26–ந்தேதி சிட்னியிலும் நடக்கிறது. இறுதிப்போட்டி மார்ச் 29–ந்தேதி மெல்போர்னில் நடக்கிறது.














