Tuesday, July 30, 2013

ஆமையை பிரசவித்த அதிசய பெண் – அதிர்ச்சி படம்...


உலகில் எத்தனையோ விதமான நம்பமுடியாத அதிசயமான உண்மைகள் இடம்பெறுகின்றன.இருந்தபோதிலும் சில சம்பவங்களை நாம் இணையங்களின் மூலம் அறிகின்ற போது அவற்றின் உண்மைத்தன்மைய 100 வீதம் உறுதிப்படுத்த முடிவதில்லை என்பது ஒருபுறம் இருக்க நம்பமுடியாத பல விசித்திரங்கள் உலகில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதும் நாம் நம்பியாகவேண்டிய உண்மை. இன்று புதியஉலகம் இணையத்தில் நீங்கள் பார்க்க இருக்கும் ஒரு விசித்திர தகவல் உண்மையில் நம்ப மறுக்கும் இயற்கைக்கு புறம்பான ஒரு தகவலே.
பல ஆங்கில இணையத்தளங்களில் வெளிவந்து சர்ச்சையை கிளப்பிய ஒரு செய்தியே இது. இதன் உண்மைத்தன்மை பற்றி புதியஉலகம் குழுமம் உறுதிப்படுத்த முடியவில்லை எனினும் அத்தளங்களில் வெளிவந்த செய்தியினை உங்களுக்கு அப்படியே தருகிறோம். அந்த ஆச்சரியமூட்டும் செய்தி என்ன என்பதை தலைப்பை பார்த்து புரிந்துகொண்டிருப்பீர்கள். ஆம் ஒரு பெண் சாதாரணமா குழந்தையை பிரசவிப்பாள் ஆனால் இங்கு ஒரு ஆமையை பிரசவித்திருக்கிறாள் என்பதே அந்த அதிர்ச்சி செய்தி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சில ஆங்கில இணையங்களில் வெளிவந்த அச்செய்தி மேலும் குறிப்பிடுகையில்:-
20 வயதான ரசீதா ரைமி எனப்படும் குறித்த பெண் 10 மாதங்கள் கர்ப்பமுற்றிருந்த நிலையில் ஒரு குழந்தையை பிரசவித்திருக்கிறாரள். இதோடு சேர்ந்து ஒரு ஆமை ஒன்றையும் பிரசவித்திருக்கிறாள். லாகோஸ் புறநகர்பகுதியில் வசிக்கும் குறித்த பெண் ஆமையுடன் சேர்த்து ஒரு குழந்தையினையும் தேவாலய பூஜை ஒன்றுக்கு சென்று அங்கு பிரார்த்தனையில் இருக்கும் போதே அதிக வலி ஏற்பட்டு இவ் அதிசய நிகழ்வு இடம் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்தபெண் பிரசவத்திற்கு முன்னர் பலமுறை டாக்டர்களிடம் மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தபோது மருத்துவர்கள் குழந்தைபற்றிய தகவல்களை மட்மே வழங்கியதாகவும் வயிற்றில் வித்தியாசமான வேறு எந்த விடயங்களோ காணப்படுவதாக குறிப்பிடவில்லை எனவும் குறிப்பிட்டார். எனினும் தான் பின்னர் தேவாலயத்தில் பிரார்த்தனையில் இருக்கும் போது வலி ஏற்பட தான் வயிற்றில் விசித்திரமான ஒரு அசைவை உணர்ந்ததாகவும் தான் அது ஒரு பல்லியாக உணர்ந்ததாகவும் சம்பவம் தொடர்பாக குறித்த பெண் விபரித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வலி அதிகரித்து தொப்புள் கொடியினை அறுத்துக்கொண்டு முதலில் ஆமைதான் வெளியில் வந்து விழுந்ததாகவும் பின்னரோ குழந்தை பிறந்ததாகவும் தொடரும் அச்செய்தி இயற்கைக்கு மாறாக நடைபெறும் எத்தனையோ சம்பவங்களை விஞ்ஞானமோ தொழில்நுட்பமோ இன்னும் கண்டுபிடிக்கமுடியாமல் உள்ளது. எனவே விஞ்ஙானத்தினையும் மீறிய சில அதிசயங்கள் இடம்பெறுவதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும் என்கிறது அச்செய்தி.
(copied from puthiyaulakam.com)
WOMAN-DELIVERS-A-TORTOISE

0 comments:

Post a Comment