Tuesday, April 22, 2014

Amazon நிறுவனம் தானியங்கி விமானம் மூலம் விநியோக முயற்சி...

மிகப் பெரும் வர்த்தக நிறுவனமான அமேசான்(Amazon) தனது வாடிக்கையாளர்களின் தேவையை மிக வேகமாக பூர்த்தி செய்யும் நோக்குடன் தனது online delivery சேவையை, ட்ரோன் (drone) எனப்படும் சிறிய தானியங்கி விமானங்கள் முலமாக பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கான பரீட்சாத்த முயற்ச்சியையும் மேற்க்கொண்டுள்ளது. அமெரிக்காவினால் அதிகம் உபயோகிக்கப்படும் இவ்வகையான ஆளில்லா விமானங்களே உலகில் வேவு நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்பட்டு இலக்குக்கள் மீது குண்டுகள் வீசுவதற்கும் தரவுகளை சேகரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எங்க வீட்டு பிள்ளை விஜய்...

எங்க வீட்டு பிள்ளை படத்தின் ரீமேக்கில் இளைய தளபதி விஜய் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தினை விஜய்யை வைத்து ரீமேக் செய்ய இயக்குநர் செல்வபாரதி திட்டமிட்டு உள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தற்போது கத்தி படத்தில் விஜய் நடித்து வருகிறார். விஜய்யின் நெருங்கிய நண்பரான இயக்குனர் செல்வபாரதி ஏற்கனவே. 'நினைத்தேன் வந்தாய்', 'ப்ரியமானவளே', 'வசீகரா' உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.
எம்.ஜி.ஆர் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற 'எங்க வீட்டு பிள்ளை' படத்தினை, எம்.ஜி.ஆர் நடித்த வேடத்தில் விஜய்யை நடிக்க வைத்து இயக்கத் திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் செல்வபாரதி. இது தொடர்பாக விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் விரைவில் இது தொடர்பிலான ஏனைய விபரங்கள் வெளியிடப்படவுள்ளன.

நாய்க்குப் பிறந்த பூனை...!

இந்தியாவின் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அப்பியம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தனது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். இந்த நாய் 3 குட்டிகள் ஈன்றது. இதில் 2 குட்டிகள் பூனை போன்று இருந்தன. ஒரு குட்டி நாய் போன்று காணப்பட்டது.
இவற்றில் 2 குட்டிகள் இறந்த விட்டன. பூனை போன்ற தோற்றத்தில் உள்ள ஆண் குட்டி மட்டுமே உயிருடன் இருந்தது. இதன் கால்கள் நாய் போலவும் உடம்பு மற்றும் வால் பகுதி பூனைக்குட்டி போன்றும் இருக்கிறது. இந்த பூனைக்குட்டி மியாவ், மியாவ் என்று கத்துகிறது.
நாயும் குட்டியை கௌவிச் தூக்கி சென்று பால் கொடுக்கிறது. பொதுவாக நாய்கள் பூனையை பார்த்தால் துரத்தும் தன்மை கொண்டன. ஆனால் இந்த நாய், தான் ஈன்ற குட்டியானது பூனை போல் இருந்தாலும் பாசத்துடன் பால் கொடுக்கிறது. இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
இதுகுறித்து நாய் உரிமையாளர் ஆறுமுகம் கூறுகையில், கடந்த 4 ஆண்டுகளாக நாய் வளர்த்து வருகிறேன். இப்போதுதான் குட்டி ஈன்று உள்ளது.
இதுதொடர்பாக கால்நடை வைத்தியர் செல்வராஜ் கூறுகையில், நாயும் பூனையும் சேர்வதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால், ஜெனடிக் குறைபாடு காரணமாக இது போன்று பிறக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

தென்கொரியவில் மூழ்கியவர்களை மீட்கும் பணி தொடர்கிறது.....


தென்கொரியவில் கடலில் மூழ்கிய கப்பலில் உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில், இதுவரையில் 60 சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிகரித்த நீரோட்டம் காரணமாக மீட்பு பணிகளில் சிரமங்கள் எதிர்நோக்கப்படுவதாகவும் மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச புவி நாள்...ஏப்ரல் 22: ;;

புவி நாள் (நுயசவா னுயல) என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.
1969ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுள் ஒருவர் ஜான் மெக்கானெல்.
அவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்த ஒரு மாமனிதர். மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று அவர் வலியுறுத்தினார்.
த்தோடு, ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவது பொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார். இவ்வாறு புவி நாள் என்னும் பெயரும் கருத்தும் எழுந்ததாகக் கருதப்படுகிறது.
அதே சமயத்தில், ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணரும் மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 நடாத்த அழைப்பு விடுத்தார். இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது.
அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டு தோறும் இந்நாள் 175 நாடுகளில் (பூமி) நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பூமியின் வளங்கள் பாதிக்கப்படாது பாதுகாப்போம்.காலநிலை மாற்றத்திலிருந்து பூமியை பாதுகாப்பதுடன், பூமியின் வளங்களை பாதுகாப்பதற்கு உலகிலுள்ள அனைத்து மக்களும் முன்வர வேண்டுமென ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சர்வதேச புவி தினத்தை முன்னிட்டு ஐ.நா செயலாளர் நாயகம் விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பூமியில் உள்ள வாயு, நீர் உள்ளிட்ட சகல வளங்களையும் நாம் பயன்படுத்தி வருகின்றோம். சனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப எல்லையற்ற வளங்களும் பயன்படுத்தப்பட்டுக்கொண்டே வருகின்றன.
இந்த நிலையில் காலநிலை மாற்றம் போன்ற காரணிகளால் பூமியிலுள்ள வளங்கள் மாசடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர்க்கும் வகையில் எமது செயற்பாடுகளை மாற்றியமைக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
பூமியில் காணப்படும் படிம எண்ணெய் எரிக்கப்படுவதே காலநிலை மாற்றத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இது பிராந்திய நாடுகள் அனைத்துக்கும் ஆபத்தாக அமைந்துள்ளது. இதனாலேயே உலகத் தலைவர்கள் அனைவரும் இணைந்து 2015 சட்டரீதியான காலநிலை ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவதற்குத் தீர்மானித்துள்ளனர்.
இவ்வருடம் செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி நியூயோர்க் நகரில் காலநிலை மாநாடொன்று நடைபெறவுள்ளது. இதில் 2015ஆம் ஆண்டு காலநிலை ஒப்பந்தம் தொடர்பாக ஆராய எதிர்பார்க்கப்பட்டிருப்பதால் அனைத்து நாடுகளின் தலைவர்களையும் கலந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றேன் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.