Tuesday, April 22, 2014

சர்வதேச புவி நாள்...ஏப்ரல் 22: ;;

புவி நாள் (நுயசவா னுயல) என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.
1969ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுள் ஒருவர் ஜான் மெக்கானெல்.
அவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்த ஒரு மாமனிதர். மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று அவர் வலியுறுத்தினார்.
த்தோடு, ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவது பொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார். இவ்வாறு புவி நாள் என்னும் பெயரும் கருத்தும் எழுந்ததாகக் கருதப்படுகிறது.
அதே சமயத்தில், ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணரும் மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 நடாத்த அழைப்பு விடுத்தார். இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது.
அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டு தோறும் இந்நாள் 175 நாடுகளில் (பூமி) நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பூமியின் வளங்கள் பாதிக்கப்படாது பாதுகாப்போம்.காலநிலை மாற்றத்திலிருந்து பூமியை பாதுகாப்பதுடன், பூமியின் வளங்களை பாதுகாப்பதற்கு உலகிலுள்ள அனைத்து மக்களும் முன்வர வேண்டுமென ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சர்வதேச புவி தினத்தை முன்னிட்டு ஐ.நா செயலாளர் நாயகம் விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பூமியில் உள்ள வாயு, நீர் உள்ளிட்ட சகல வளங்களையும் நாம் பயன்படுத்தி வருகின்றோம். சனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப எல்லையற்ற வளங்களும் பயன்படுத்தப்பட்டுக்கொண்டே வருகின்றன.
இந்த நிலையில் காலநிலை மாற்றம் போன்ற காரணிகளால் பூமியிலுள்ள வளங்கள் மாசடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர்க்கும் வகையில் எமது செயற்பாடுகளை மாற்றியமைக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
பூமியில் காணப்படும் படிம எண்ணெய் எரிக்கப்படுவதே காலநிலை மாற்றத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இது பிராந்திய நாடுகள் அனைத்துக்கும் ஆபத்தாக அமைந்துள்ளது. இதனாலேயே உலகத் தலைவர்கள் அனைவரும் இணைந்து 2015 சட்டரீதியான காலநிலை ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவதற்குத் தீர்மானித்துள்ளனர்.
இவ்வருடம் செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி நியூயோர்க் நகரில் காலநிலை மாநாடொன்று நடைபெறவுள்ளது. இதில் 2015ஆம் ஆண்டு காலநிலை ஒப்பந்தம் தொடர்பாக ஆராய எதிர்பார்க்கப்பட்டிருப்பதால் அனைத்து நாடுகளின் தலைவர்களையும் கலந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றேன் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment