Friday, April 6, 2012

உங்கள் பகுதியில் ஏற்படும் நில நடுக்கங்களை பற்றி உடனுக்குடன் அறிய

earthquake
The U.S. Geological Survey agency என்ற அமைப்பு உலகம் முழுவதும் ஏற்படும் நிலநடுக்கங்களை கண்காணித்து கொண்டிருக்கிறது. இந்த அமைப்பு நிலநடுக்கம் ஏற்ப்பட்ட பகுதியின் பெயர் மற்றும் நிலநடுக்கத்தின் மதிப்பீடு போன்றவற்றை உடனுக்குடன் வெளியிடுகிறது. இவற்றை தெரிந்து கொள்ள நீங்கள் இந்த அமைப்பின் Twitter, RSS feeds அல்லது KML page போன்றவற்றில் அவர்களை தொடர்ந்து (subscribe) தெரிந்து கொள்ளலாம்.
மேலும், உங்கள் கணினியில் இருந்து வேலை செய்யும் ஒரு மென்பொருளையும் (desktop software) இந்த இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த மென்பொருள், உலகத்தில் ஏற்படும் நிலநடுக்கங்களை பற்றி உங்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கும்.
உங்களை சுற்றி ஏற்படும் நிலநடுக்கங்களை பற்றிய தகவலை அறிய!
டிவிட்டர் மற்றும் Rss feeds, உலகமுழுவதும் ஏற்படும் நிலநடுங்களை உங்களுக்கு அளிக்கும், ஆனால் உங்கள் பகுதியில் ஏற்படும் நிலநடுக்கங்களை மட்டும் நீங்கள் அறிய வேண்டுமென்றால், Earthquake Notification Service ஐ நீங்கள் பயன்படுத்தலாம்.
Earthquake Notification Service இணையத்திற்க்கு சென்று, உங்களுக்கான கணக்கை துவங்கி கொள்ள வேண்டும். பின்பு உங்கள் கணக்கை பயன்படுத்தி இந்த இணையத்தில் நுழைய, உலக வரைபடத்தை காணலாம் இதில் உங்களது புவியியல் பிராந்தியத்தை ( geographic region) பெரிது படுத்தி கொண்டு, பக்கவாட்டிலுள்ள custom polygon tool ஐ பயன்படுத்தி உங்கள் பிராந்தியத்தில் (தெரிந்து கொள்ள தேவையான அளவு ) ஒரு polygon வரையவேண்டும். மேலும் அதற்கு ஒரு பெயரையும் பதிவு செய்து, magnitude என்ற இடத்தில் நில அதிர்வு அளவு, உதாரணத்திற்க்கு 5க்கு மேல் இருந்தால் மட்டுமே உங்களுக்கு தகவல் தெரியும் படி அமைத்து கொள்ளலாம், இதை அப்படியே உறுதி (save) செய்யுங்கள். இனி உங்கள் பிராந்தியத்தில் நடக்கும் நிலநடுக்கங்களை உடனுக்குடன் உங்கள் இமெயிலில் கிடைக்கும் செய்தியின் அடிப்படையில் அறிந்து கொள்ளலாம்.
கீழேயுள்ள வீடியோவில் இதற்கான விளக்கபடத்தை காணலாம்.

0 comments:

Post a Comment