Wednesday, October 2, 2013

ஆண்மை குறைவால் அதிகரிக்கும் விவாகரத்துகள்..



டெல்லியில் உள்ள பாலியல் ஆய்வு மையமான செக்சாலஜி சங்கம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் ஆண்மை குறைவு காரணமாக விவாகரத்துகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பத்திய உறவில் சுகம் கிடைக்காமல் விவாகரத்து நடப்பது 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்த சங்கத்தினர் திருமணமாகி விவகாரத்து பெற்ற 2500 பேரை, தங்களது ஆய்வுக்குப்படுத்தினர். இதில் 5-ல் ஒருவர் ஆண்மைக் குறைவு காரணமாக மண முறிவுக்கு ஆளானது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆரோக்கியமான திருமண உறவென்பது நீடிக்க வேண்டுமென்றால் வாரம் ஒரு முறையாவது செக்ஸ் வைத்துக் கொள்வது அவசியம் என்று பிற ஆய்வுகளும் கூறிவருகின்றன. ஆண்டுக்கு 58 முறை உடலுறவு அவசியம் என்று மற்ற ஆய்வொன்று தெரிவிக்கிறது.

இன்றைய உலகில் சிறு வயதிலேயே பெரிய வேலை ஏகப்பட்ட பணம் போன்றவற்றினால் குடி, கூத்து என்று இளைஞர்கள் செல்வதால் உண்மையான செக்ஸ் என்று வரும்போது நாட்டமில்லாமல் போய் விடுகிறது.

மேலும் குடியால் 40 வயதிற்குள்ளாகவே சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய் ஆகியவை ஏற்படும் வாலிப வயதினரை நாம் தினமும் கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.

இவையெல்லாம் அவர்களது செக்ஸ் நாட்டமின்மையை அதிகரித்து விடுகிறது. நாட்டமிருந்தாலும் வியாதி பயம் செயலிழக்கச் செய்து விடுகிறது.

40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களில் 50 சதவீதம் பேருக்கு இந்த பிரச்சினை உள்ளது. 40 வயதுக்கு உட்பட்டவர்களில் 10 சதவீதம் பேருக்கு இந்த குறை உள்ளது. 

இந்த சங்கத்தினர் நடத்திய ஆய்வில் 40 வயதை கடந்த ஆண்களில் 48 சதவீதம் பேருக்கு சர்க்கரை வியாதி உள்ளது. அதே போல் ரத்த அழுத்தம் 40 வயதை கடந்தவர்களில் 45 பேருக்கு உள்ளது.

புகைபிடிக்கும் பழக்கமும் செக்ஸ் உறவில் நாட்டத்தை குறைக்கிறது. கடுமையாக ஊதிக் கொண்டேயிருப்பவர்களின் மன நிலை கவனக்குவிப்பு தேவைப்படும் பாலுறவின்பால் ஈடுபட முடியாமல் செய்து விடுகிறது.

உயர் பணிகளில் இருக்கும் கணவன் மனைவிக்கோ இது பற்றியெல்லாம் யோசிக்கவே நேரம் இருப்பதில்லை இதனால் திருமண முறிவு ஏற்படுகிறது.

ஆண்மைக்குறைவை நேரடியாக, நேர்மையாக ஒப்புக் கொண்டு மருத்துவர்களை ஆண்கள் அணுகவேண்டும், மாறாக ஆணாதிக்கத் திமிரில், கோளாறையும் மறைத்து குற்றவுணர்வில் பெண்களை வதைப்பதை நிறுத்தினால் பாதி விவாகரத்தை குறைக்கலாம்.

தேவை ஆண்கள் தங்கள் குறைபாட்டை வெளிப்படையாக ஒப்ப்புக் கொள்வது. பிறகுக் சிகிச்சை எடுத்துக் கொள்வதேயாகும்.


இசையை ரசிக்க ரஹ்மான் ஸ்பெஷல் மொபைல்..

இந்திய மொபைல் நிறுவனங்களில் மைக்கிரோமேக்ஸ், கார்பானை அடுத்து மைக்கிரோமேகஸ் மொபைல் நிறுவனுமும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிறுவனத்தின் சிக்நேச்சர் மாடல் மொபைல்கள் மக்களிடத்தில் மிகவும் பிரபலமாக உள்ளன.

இப்பொழுது இந்நிறுவனம் இசை விரும்பிகளுக்காக ஒரு மொபைலை வெளியிட்டுள்ளது. செல்கான் ரஹ்மான் இஷ்க் AR 45 என்ற இந்த மொபைலின் வெளியீட்டு விழா கொல்கத்தாவில் நடந்தது. இசையை விரும்பிகளுக்காக இந்த மொபைல் இதற்க்கு ஏஆர் ரஹ்மான் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

இதன் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு இந்த மொபைலை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் தான் வெளியிட்டார். இசை விரும்பிகளுக்கும் இந்த செய்தி ஒரு இனிப்பு செய்தியாகவே இருக்கும். இந்த மொபைலின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

 4.5இன்ஞ் ஸ்கிரீன் 

1.2GHZ டியுல் கோர் கார்டெக்ஸ் 

ஏ7 பிராசஸர் 

512எம்பி ராம் 

4ஜிபி மெமரி 

ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ் 

5மெகாபிக்சல் கேமரா 

விஜிஏ பிரண்ட் கேமரா 

wi-fi

3ஜி 

2000mAh பேட்டரி 

இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999 ஆகும். 
செல்கான் நிறுவனம் ரஹ்மான் இஷ்க் மாடலில் நிறைய மொபைல்களை வெளியிடும் என தெரிவித்துள்ளது. 

ரஹ்மான் இஷ்க் AR 45 வெளியீட்டு விழாவின் சில படங்களை கீழே பார்ப்போம்.







இருபது வயதிலேயே முடி கொட்டுவதற்கான 10 காரணங்கள்...

ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கு சரி தலை முடி என்பது கூடுதல் அழகை சேர்க்கும் ஒரு விஷயமாகும். அதனால் அதை அலங்கரிக்கவும், விதவிதமான ஸ்டைல்களை புகுத்தவும், பலரும் முற்படுவர். இப்படி செய்தால் முடியில் பிரச்சனை இல்லாமல் இருக்குமா என்ன? அதிலும் முடி கொட்டுவது என்பது இல்லாமல் இருக்குமா? ஆம், அதுவும் இன்றைய சூழ்நலையில், இந்த பிரச்சனை இல்லாதவர்களே இருக்க முடியாது. இன்றைய தலைமுறைக்கு அளவிற்கு அதிகமாகவே முடி கொட்டும் பிரச்சனை நிலவுகிறது. முப்பது வயதை தாண்டுவதற்கு முன்பாகவே பலருக்கு தலை வழுக்கையாகி விடுகிறது. இது ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவினருக்கும் பொருந்தும். பொதுவாக ஒரு நாளைக்கு 75-100 முடி கொட்டுவது இயல்பே. அதையும் மீறி கொட்டினால் தான் அதற்கான காரணத்தை நாம் கண்டறிய வேண்டும்.

இப்போது இருபது வயதிலேயே முடி கொட்டுவதற்கான 10 காரணங்களைப் பார்ப்போம்.

வாழ்க்கை முறை-



இக்காலத்தில் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறையே, முடி கொட்டுவதற்கான முக்கிய காரணமாக திகழ்கிறது. இரவு நேரம் கண் விழித்து பார்ட்டி கொண்டாடுவது பல தீமைகளை ஏற்படுத்தும். அதிலும் மதுபானம் உட்கொள்வது, புகைப்பிடிப்பது மற்றும் அங்கே வீசும் காற்று என இவை அனைத்தும் முடிக்கு எந்த நன்மையையும் செய்துவிடாது. தொடர்ந்து மதுபானம் பருகினால், உணவில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய வைட்டமின்கள் தடைபட்டு போகும். வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால், ஊட்டச்சத்து குறைந்து, முடிகள் பாதிக்கப்படும்.


மன அழுத்தம்-



முடி கழிதலுக்கு மன அழுத்தமும் ஒரு காரணமாகும். பரீட்சையை சந்திக்க பயம், நிராகரிப்பை ஏற்க பயம், கல்லூரியில் அனுமதி பெற வேண்டுமென பயம் என இப்படி பல காரணங்களால் இளைய தலைமுறை மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.


மாசு-



 மாசு மற்றும் சுற்றுப்புற சுகாதார கேடு போன்றவைகளும் கூட முக்கியமான ஒரு காரணம். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு தொழிற்சாலை பக்கமாக குடியிருக்கிறீர்கள் என்றால், அங்கே நிலவும் மாசு படிந்த சுற்றுச்சூழலும், ரசாயனம் கலந்த நச்சு காற்றும், தலை முடியை வெகுவாக பாதிக்கும். இதனால் தலை முடி தன் பொலிவை இழந்து களையிழந்து காணப்படும்.


பூஞ்சைத் தொற்று-



செபோர்ஹோயிக் தோல் அழற்சி போன்ற பூஞ்சைத் தொற்று ஏற்படுவதால், தலை சருமம் அரிப்பு எடுத்து, முடி கழிதல் ஏற்படும். இவ்வகை தொற்று பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் விடலை பசங்களைத் தான் அதிகம் தாக்கும்


புதிய ஹேர் ஸ்டைல்-



சடையை இறுக்கமாக பின்னுவது அல்லது குதிரை வால் ஸ்டைல் என ஏதாவது புதிய ஹேர் ஸ்டைலை தேர்ந்தெடுக்கும் போது, முடியை இழுத்து பிடித்து கட்டும் போது, அவை வேரிலிருந்து பிடுங்கி கொண்டு வரலாம். இதனால் இது ஆங்காங்கே முடி இல்லாமல் ஆக்கிவிடும்.


சிகை அலங்கார பொருட்கள்-



ஹேர் ஸ்ப்ரே, ஜெல் போன்ற சிகை அலங்காரப் பொருட்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அது முடியின் தரத்தை குறைத்துவிடும். நாளடைவில் முடி கழிதலும் ஏற்படும். அதனால் முடிக்கு ஏற்ற ஷாம்பு மற்றும் கண்டிஷனரை தேர்ந்தெடுத்து, அதை மட்டும் பயன்படுத்துங்கள். சந்தையில் உள்ள கண்ட பொருட்களையெல்லாம் பயன்படுத்தாதீர்கள்.

பரம்பரை பிரச்சனை-




 பரம்பரை பிரச்சனையும் கூட முடியின் தரத்திற்கும், அடர்த்திக்கும் ஒரு காரணமாக அமையும். பரம்பரை பரம்பரையாக ஒரு குடும்பத்து ஆண்களுக்கு தலையில் வழுக்கை விழுந்தால், அந்த குடும்பத்தை சேர்ந்த ஆணுக்கு 30 வயதுக்கு முன்பே சொட்டை தலை உண்டாகலாம். அதை தடுக்க முடியாவிட்டாலும் கூட, வழுக்கை விழும் வயதை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கலாம்.


மன நோய்-



பைத்தியம், புத்தி பேதளிப்பது மற்றும் மன அழுத்தம் போன்றவைகள் ஒரு நபரை அவர்களின் முடியை பிடுங்கச் செய்யும். இப்படி செய்வதை ட்ரைகோட்டில்மேனியா என்று அழைக்கின்றனர். இப்படி பிடுங்குவதனால் தலையில் ஆங்காங்கே வழுக்கை போன்ற தோற்றம் உண்டாகும். இந்த மன நோயை சரிசெய்தால் தான், இந்த பழக்கத்தை நிறுத்தலாம்.

போதுமான தூக்கமின்மை-




 போதுமான நேரம் தூங்கினால் தான் முடி அணுக்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சி பெறும். இரவில் வீட்டில் அதிக நேரம் விழித்திருந்தால் கூட, அது முடியை பாதித்துவிடும்

நல்ல உணவு-



அதிக அளவில் காய்கறி மற்றும் பழங்களுடன் தினமும் நல்ல உணவை உட்கொண்டால், தலை முடி ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் முடியை பாதுகாக்க தேவையான வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் புரதச்சத்து, உடலில் இருப்பது அவசியமானது. இது முடியை ஆரோக்கியமாக வைத்து முடி கழிதலை குறைக்கும்.

விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடக்கும் 1.69 லட்சம் கோடி ரூபாய்...

ரஷ்ய விமான நிலையத்தில் கேட்பாரற்று கடந்த 6 ஆண்டுகளாகக் கிடக்கும் சுமார் 1.69 லட்சம் கோடி ரூபாய் சதாம் உசேனுக்கு சொந்தமானதா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. 

2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி பிராங்பர்ட் என்னும் இடத்திலிருந்து மாஸ்கோவிற்கு அனுப்பப்பட்ட சுமார் 1.69 லட்சம் கோடி ரூபாய் ரஷ்ய விமான நிலையத்தில் கேட்பாரற்று கடந்த 6 ஆண்டுகளாக இருக்கின்றது.

கோப்புகளில் இந்த பணத்தின் உரிமையாளர் ஈரானை சேர்ந்த 45 வயது நபர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், இந்த பணம் சதாம் உசேனுக்கு சொந்தமானதா? என்ற சந்தேகத்தை இங்கிலாந்து பத்திரிகை ஒன்று கிளப்பியுள்ளது.



பல இன்னல்களுக்கு பிறகு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்...

இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு ஒரே கருமுட்டையில் உருவான 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. 

இங்கிலாந்தின் பான்டிபூல் பகுதியை சேர்ந்த பெண் கில்பெர்ட். 3 வயது பெண் குழந்தைக்கு தாயான இவர் அண்மையில் மீண்டும் கர்ப்பமானார். 

இவர் மருத்துவரிடம் பரிசோதனைக்கு சென்றப்போது, இவருக்கு ஒரே கருமுட்டையில் 3 குழந்தைகள் உருவாகி இருந்தது தெரியவந்தது. இது போன்று ஒரே கருமுட்டையில் 3 குழந்தைகள் உருவாகுவது ஆபூர்வமாகும். 20 கோடி பெண்களில் ஒருவருக்குதான் இது நடைபெறும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சாம்பியன்ஸ் லீக்- கடைசி லீக்கில் இன்று சென்னை–டிரினிடாட் அணிகள் மோதல்.

டெல்லி: சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டிரினிடாட் அணியும் மோதுகின்றன. 10 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் இன்றுடன் லீக் சுற்று நிறைவு பெறுகிறது. இன்று இரவு டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடக்கும் கடைசி லீக்கில் சென்னை சூப்பர் கிங்சும், மேற்கிந்திய தீவுகளின் டிரினிடாட் அண்ட் டொபாக்கோ அணியும் மோதுகின்றன.