Sunday, August 25, 2013

குழந்தையைக் கொல்லப்போவதாக மிரட்டி சுமார் 10 பவுண் தங்க நகைகள் கொள்ளை,,,


கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வறணி வடக்குப் பகுதியில் நேற்று முந்தினம் நள்ளிரவு வீடு ஒன்றினுள் உட்புகுந்த திருடர்கள் குழந்தையைக் கொல்லப்போவதாக மிரட்டி சுமார் 10 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
கொடிகாமம் வரணி வடக்கு பகுதியில் வீடு ஒன்றினுள் நள்ளிரவு வேளையில் புகுந்த கொள்ளையர்கள் குழந்தையின் கழுத்தில் கூரிய கத்தியை வைத்து குழந்தையைக் கொல்லப்போவதாக மிரட்டியுள்ளனர். குழந்தையை விடவேண்டுமாயின் சகல நகைகளையும் தருமாறு அச்சுறுத்தியுள்ளனர்.

குழந்தையின் உயிரைக் காப்பாற்றும் நோக்குடன் இவ் வீட்டில் வசித்தவர்கள் சுமார் 10 பவுண் தங்க நகைகளை கொள்ளையர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

Monday, August 19, 2013

தலைவா திரைப்படம் நாளை திரையில்...


""தலைவா' திரைப்படம் நாளை செவ்வாய்க்கிழமை 20-ஆம் திகதி தமிழகத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் நடித்த "தலைவா' திரைப்படம் கடந்த 9-ஆம் திகதி வெளியிடப்படுவதாக இருந்தது. திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து இப்படம் வெளியாவதில் சிக்கல் எழுந்தது. இப்படத்தை வெளியிட அனுமதிக்கக் கோரி நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர், உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரினர். அதற்கு சென்னை மாநகர காவல் துறை அனுமதி மறுத்து விட்டது. இந்நிலையில், தலைவா படம் நாளை செவ்வாய்க்கிழமை  (ஆகஸ்ட் 20) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இப்படத்தின் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ள வேந்தர் மூவிஸின் அதிகாரப்பூர்வமான டுவிட்டர்(TWITTER) பக்கத்தில் படம் 20 ஆம் திகதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட   திகதியில் வெளியிடப்படாமல் 10 நாள்களின் பின் வெளியிடப்படுவதால் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் தியேட்டர்களில் கட்அவுட் வைத்து தோரணங்கள் கட்டி வருகின்றனர்.








பேஸ்புக்கில் அதிக பெண் நண்பிகளை கொண்டவரா நீங்கள்???அவதானம்???


சமூகவலையமைப்புகளில் அதிக பெண் நண்பிகளை கொண்டிருந்த ஆண் ஒருவரை திருமணம் செய்யமுடியாது என பெண்ணொருவர் நிராகரித்த சம்பவமொன்று சவுதியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவது,

சவுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஆண் தொடர்பில் தேடிப்பார்த்துள்ளார்.  இதன்படி அப்பெண் குறித்த நபரது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகளை இருவாரங்களுக்கு தேடியுள்ளார்.


இதன்போது அந்நபரின் பேஸ்புக் கணக்கில் எத்தனை நண்பிகள் உள்ளனர், அவரின் பேஸ்புக் படங்கள், கொமண்ட்கள், இன்ஸ்ரகிராம் கணக்கு, டுவிட்டர் கணக்கில் போடப்பட்ட டுவிட்கள் ஆகியவற்றையும் அப்பெண் ஆராய்ந்துள்ளார்.

இதன்விளைவாக அந்நபருக்கு  அதிகமான பெண் தோழிகள்  இருப்பதை   அப்பெண்  கண்டறிந்துள்ளார்.

இதனையடுத்து அப்பெண் உனடியாக அந்நபரை திருமணம் செய்துகொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவமானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இம்முடிவை எடுத்தமைக்காக பலர் அப்பெண்ணுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

3 கன்றுக் குட்டிகளை ஒரேநேரத்தில் ஈன்ற பசு!!!


வட­மேற்கு இங்­கி­லாந்­தி­லுள்ள பண்­ணை­யொன்றைச் சேர்ந்த பசு­வொன்று ஒரேசம­யத்தில் 3 கன்­றுக்­குட்­டி­களை ஈன்­றுள்­ளது.

இவ்­வாறு பசு­வொன்று ஒரே சம­யத்தில் 3 கன்­றுக்­குட்­டி­களை ஈனு­வது 700000 க்கு ஒன்று என்ற விகிதத்தில் இடம்­பெறும் அபூர்வ நிகழ்­வாகும்.

விர்ரல் எனும் இடத்­தி­லுள்ள கிறீன் ஹவுஸ் பண்­ணையைச் சேர்ந்த 901 ஆம் இலக்க பசுவே இயற்­கை­யான முறையில் கருத்­த­ரித்து இவ்­வாறு 3 (காளை) கன்­று­களை அபூர்­வ­மான முறையில் ஈன்­றுள்­ளது.

இந்த 3 கன்­றுக்­குட்­டி­களும் வெவ்­வேறு மூலவுருக்கலங்களிலிருந்து விருத்தியாகியுள்ளன.தமை குறிப்பிடத்தக்கது.






60 செக்கன்களில் இணைய உலகம்...நம்ப முடிகிறதா!!!


இணைய உலகம் என்றும் பரபரப்பானது. சுறுசுறுப்பாக இயங்கும் இணைய உலகத்திற்கு 24 மணித்தியாலங்கள் நிச்சயம் போதாது.

அங்கு 60 செக்கனுக்குள் பல ஆயிரக் கணக்கான செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. அதேபோல் கோடிக்கணக்கான பாவனையாளர்கள் தங்கள் நேரத்தை அதில் செலவழிக்கின்றனர்.

ஸ்கைப் அழைப்புகள்,பேஸ்புக் லைக்கள்,டுவிட்கள்,பிலிக்கர்கள் படங்கள், யு டியுப்  காணொளிகள் என்பன இதில் அடங்கும்.

இதனை தெளிவாகக் காட்டும் பொருட்டு 'கிவ்மீ' என்ற நிறுவனம் 'இன்போகிராப்' ஒன்றை வெளியிட்டுள்ளது.


பிசி மெக், பிஸ்னஸ் இன்சைடர், போமட்,டெய்லிமெய்ல்,போன்ற பிரபல இணையத்தளங்கள் சிலவற்றில் இருந்து பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டே இதனை 'கிவ்மீ' வெளியிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நிமிடமொன்றில்....

1. பேஸ்புக்கில் 1.8 மில்லியன் 'லைக்ஸ்' போடப்படுகின்றது.

2. 216,000 படங்கள் இன்ஸ்ரகிராமில் பரிமாற்றப்படுகின்றன.

3. கூகுளில் 2 மில்லியன் தேடல்கள் இடம்பெறுகின்றன.

4. அமேசன் இணையத்தளத்தில் 83,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான விற்பனை நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

5. 278,000  டுவிட்கள் பதிவு செய்யப்படுகின்றன.

6. யுடியூப்பில் 72 மணித்தியாலங்கள் ஓடக்கூடிய காணொளிகள்.

7. புதிய இணைய முகவரிகள் 70 பதிவு செய்யப்படுவதுடன் 571 தளங்கள் உருவாக்கப்படுகின்றன.

8.  204 மில்லியன் மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றது.


Go-Globe.com  இதேபோன்ற 'இன்போகிராப்' ஒன்றை கடந்த வருடம் ஜூன் மாதம் வெளியிட்டிருந்தது.