""தலைவா' திரைப்படம் நாளை செவ்வாய்க்கிழமை 20-ஆம் திகதி தமிழகத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் நடித்த "தலைவா' திரைப்படம் கடந்த 9-ஆம் திகதி வெளியிடப்படுவதாக இருந்தது. திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து இப்படம் வெளியாவதில் சிக்கல் எழுந்தது. இப்படத்தை வெளியிட அனுமதிக்கக் கோரி நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர், உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரினர். அதற்கு சென்னை மாநகர காவல் துறை அனுமதி மறுத்து விட்டது. இந்நிலையில், தலைவா படம் நாளை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ள வேந்தர் மூவிஸின் அதிகாரப்பூர்வமான டுவிட்டர்(TWITTER) பக்கத்தில் படம் 20 ஆம் திகதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட திகதியில் வெளியிடப்படாமல் 10 நாள்களின் பின் வெளியிடப்படுவதால் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் தியேட்டர்களில் கட்அவுட் வைத்து தோரணங்கள் கட்டி வருகின்றனர்.

0 comments:
Post a Comment