Sunday, August 25, 2013

குழந்தையைக் கொல்லப்போவதாக மிரட்டி சுமார் 10 பவுண் தங்க நகைகள் கொள்ளை,,,


கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வறணி வடக்குப் பகுதியில் நேற்று முந்தினம் நள்ளிரவு வீடு ஒன்றினுள் உட்புகுந்த திருடர்கள் குழந்தையைக் கொல்லப்போவதாக மிரட்டி சுமார் 10 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
கொடிகாமம் வரணி வடக்கு பகுதியில் வீடு ஒன்றினுள் நள்ளிரவு வேளையில் புகுந்த கொள்ளையர்கள் குழந்தையின் கழுத்தில் கூரிய கத்தியை வைத்து குழந்தையைக் கொல்லப்போவதாக மிரட்டியுள்ளனர். குழந்தையை விடவேண்டுமாயின் சகல நகைகளையும் தருமாறு அச்சுறுத்தியுள்ளனர்.

குழந்தையின் உயிரைக் காப்பாற்றும் நோக்குடன் இவ் வீட்டில் வசித்தவர்கள் சுமார் 10 பவுண் தங்க நகைகளை கொள்ளையர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment