Friday, September 20, 2013

அனந்தி அரசாங்கத்துடன் இணைந்ததாக போலியான உதயன்பத்திரிகை அச்சிட்டு வினியோகம்- அனந்தியின் குரல் இணைப்பு.

அரசபடைகளதும் புலனாய்வளரகளதும் போக்கிலித் தனமும் தேர்தல் முறைகேடுகளும் -
அனந்தி அரசாங்கத்துடன் இணைந்ததாக போலியான உதயன்பத்திரிகை அச்சிட்டு வினியோகம்- அனந்தியின் குரல் இணைப்பு
இன்று காலை  அரசாங்கத்தினாலும் அவர்களின் படையினராலும் அச்சிடப்பட்ட போலியான உதயன் பத்திரிகையில் விடுதலைப் புலிகளின் முன்னாள் திருமலை மாவட்ட அரசியற் துறைப் பொறுப்பாளரின் மனைவிஅனந்தி எழிலன் அரசாங்கத்துடன் இணைந்ததாக செய்தி வெளியிடப்பட்டு அனைவரது வீட்டு வாசலிலும் பத்திரிகை விநியோகிக்கப்பட்டு உள்ளது. 
பொய்யான பத்திரிகையை படையினர் விநியோகித்து சென்றவுடன் உண்மையான பத்திரிகை வெளிவந்த நிலையில் குடாநாட்டு மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதனால் தான் அரசாங்கத்துடன் இணைந்துள்ளதாக படைப்புலனாய்வாளர்களால் திட்டமிட்டு பரப்பப்பட்ட செய்தி யை அனந்தி மறுத்ததுடன் உதயன் பத்திரிகை நிறுவனமும் தாம் இந்த பத்திரிகையை விநியோகிக்கவில்லை என மறுத்துள்ளது.

0 comments:

Post a Comment