Saturday, September 21, 2013

வாக்குச்சாவடியில் குளவிக் கூடு...


வவுனியா பட்டானிச்சூர் முஸ்லிம் மகா வித்தியாலய வாக்குச் சாவடிக்கு அண்மையில் இருந்த குளவிக்கூடு ஒன்று இன்று அதிகாலை அகற்றப்பட்டது.

ஏற்கனவே புதுக்குளம் மகா வித்தியாலய வாக்குச் சாவடியில் குளவி தீண்டியதில் ஒரு அதிகாரி மரணமடைந்ததுடன் இருவர் காயமடைந்ததிருந்தனர்.
இதனை அடுத்து மற்றுமொரு ஆபத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் வவுனியா அரச அதிபரின் உத்தரவின் பேரில் மலேரியா ஒழிப்புப் பிரிவினர் மேற்படி குளவிக் கூட்டை அகற்றியதாக அப்பிரிவின் பொறுப்பதிகாரி கோபிநாத் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment