Wednesday, September 4, 2013

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் கைது!


ராயனூர் இலங்கைத் தமிழர் முகாமில், சிறுமியொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் பாடசாலை மாணவனொருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

ராயனூர் இலங்கைத் தமிழர் முகாமில் இடம்பெற்றுள்ள இரண்டாம் சம்பவம் இது என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் ராயனூர் இலங்கை தமிழர் முகாமைச்சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், அதே முகாமை சேர்ந்த 7 வயது சிறுமியை தனியாக அழைத்துச்சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி, தனக்கு நேர்ந்ததை பாட்டியிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, சிறுமியின் உறவினர், கரூர் மகளிர் பொலிஸில் புகார் அளித்தார். அதன்படி, 2012 ஆம் ஆண்டு குழந்தை பாதுகாப்பு மற்றும் பாலியல் கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட மாணவனை பொலிஸார், நேற்று கைது செய்தனர்.

கடந்த 27 ஆம் திகதி அதே இலங்கைத் தமிழர் முகாமில், 14 வயது சிறுமியை வன்புணர்ந்ததாக இரண்டு சிறுவர்களை பொலிஸார் கைது செய்தனர். இந்நிலையில், அதே முகாமில் பாலியல் தொல்லை தொடர்பாக மாணவனொருவன் கைது செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



0 comments:

Post a Comment