Monday, December 23, 2013

பிரபஞ்ச அழிவு ஆரம்பமாகி விட்டதாம்...-


இந்த பூமி உட்பட சூரியன், சந்திரன் என்று எல்லா கிரகங்களையும் உள்ளடக்கிய பிரபஞ்சத்தின் அழிவு, ஏதோ ஒரு கிரகத்தில் ஆரம்பமாகி விட்டது. இந்த அழிவின் இறுதியில் பிரபஞ்சம், இப்போதுள்ள அளவை விட, சிறியதாக, ஆனால், பொசுக்கும் தீப்பந்தாக உருமாறி விடும் என தெற்கு டென்மார்க் பல்கலைக்கழக இயற்பியல் விஞ்ஞானிகள் ஒரு புது பீதியை கிளப்பியுள்ளனர்.

 
அச்சப்படுத்தும் அந்த ஆய்வு பல முடிவுகளை தந்துள்ளது. 
 
உலகம் உட்பட இந்த பிரபஞ்சம் அழியப்போகிறது என்று முன்னதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், நாங்கள் கண்டுபிடித்த ஆய்வு முடிவுகளின் படி, பிரபஞ்சம் எப்படி அழியப்போகிறது, அதன் பின் அதன் நிலை என்ன என்று தெரியவந்துள்ளது. 
 
பல கிரகங்களும் ஒன்றோடு ஒன்று மோதி நொருங்கி, உருத்தெரியாமல் ஆகி விடும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் என்று கிரகங்களும், நட்சத்திர கூட்டங்களும் கூட  எல்லாம் ஒன்று சேர்ந்து விடும். அதுபோல், இந்த பூமியில் மண், கற்கள் என்று கனிமங்கள் முதல் எல்லாம் உருத்தெரியாமல் ஆகிவிடும். பூமியே வேறு உருவத்துக்கு போய்விடும். மொத்தத்தில் எல்லா சக்திகளும், தன்மைகளும் மாறி ஒரு முழு தீப்பந்து போல ஒரே கிரகமாக மாறி விடும் இந்த பிரபஞ்சம்.
 
இப்படி உருமாறுவதால் அதன் வெப்பசக்தி பல கோடி மடங்கு அதிகரிக்கும். அப்படி ஆகும் போது, இந்த பிரபஞ்சமே ஒரு ராட்சத தீப்பந்து போலாகி விடும். மிகவும் கோரமான இந்த உருமாற்றங்கள் தான் பிரபஞ்சத்தின் அடுத்த கட்டம் என்று மதிப்பிடப்படுகிறது. அது எப்படியிருக்கும். பூமி போலவே வேறு கிரகம் இயங்கும். அங்கு மனிதர்கள் போல உயிரினங்கள் உருவாகும். இந்த பிரபஞ்சம் சிறு துகள் பல கோடி அணுத்துகளாக வெடித்து சிதறி அணுவை பிளந்து அணு உருவானது போல உருவானது தான். இப்படி சொன்ன  ஹிக்ஸ் ஆய்வு போல, துகள்கள் எல்லாம் வெளிப்பட ஆரம்பிக்கும். 
 
பிரபஞ்சம் அழிவது எங்கே? அது பூமியாகவும் இருக்கலாம், வேறு கிரகமாகவும் இருக்கலாம், அங்கு அழிவு ஆரம்பமாகி விட்டது. ஒரு நீர்க்குமிழி போல ஆரம்பமாகி விட்டது என்பதே உண்மை என ஆய்வில் தெரியவந்துள்ளது.  
 
எப்போது பிரபஞ்சம் முழுமையாக அழிந்து தீப்பந்தாகும் என்று தெரியுமா? 100 கோடி ஆண்டுகளுக்கு பின்னர்தான் அப்படி இடம்பெறும் சாத்தியமிருக்கிறதாம்.

42 பில்லியன் பங்குகளை விற்றார் பேஸ்புக் உரிமையாளர் !. பங்கு சந்தையில் சரிவு-


How to Create a Facebook Business Page Step by Stepஇத்தளம் உருவாகி 10 வருடம் கூட ஆகாத நிலையில் இந்நிறுவனம் உலக நாடுகளின் முன்னணி நிறுவனங்களுக்கு போட்டியாக தீகழ்கிறது. மேலும் கடந்த வருடத்தின் பிப்ரவரி மாதம் தான் இந்நிறுவனம் பங்கு சந்தையில் குதித்தது. இந்நிலையில் முதல் சுற்றிலேயே சுமார் 16 பில்லியன் டாலர்களை திரட்டியது.

இதனால் பங்கு சந்தையில் இந்நிறுவனம் முடி சூடா மன்னனாக உள்ளது. இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 55.57 அமெரிக்க டாலராகும். மேலும் இந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் 100 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்து வருவது குறிப்பிடதக்கது.

இந்நிறுவனத்தின் சிஇஒ மார்க் ஜுக்கர்பெர்க் நேற்று 41.4 மில்லியன் பங்குகளை விற்றார் இதன் மதிப்பு சுமார் 2.3 பில்லியன் டாலர் ஆகும். பேஸ்புக் நிறுவனம் இந்த வருட துவக்கத்திலேயே 70 மில்லயன் முதல் நிலைப் பங்குகளை விற்க திட்டமிட்டு இருந்தது.

இதன் ஒரு பகுதிய இந்த பங்கு விற்பனை. இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு விலை 4 சதவீதம் சரிந்தது. பின் சில மணி நேரங்களில் இந்த பங்குகளின் விலை நிலையான நிலையை அடைந்தது.

Wednesday, October 2, 2013

ஆண்மை குறைவால் அதிகரிக்கும் விவாகரத்துகள்..



டெல்லியில் உள்ள பாலியல் ஆய்வு மையமான செக்சாலஜி சங்கம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் ஆண்மை குறைவு காரணமாக விவாகரத்துகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பத்திய உறவில் சுகம் கிடைக்காமல் விவாகரத்து நடப்பது 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்த சங்கத்தினர் திருமணமாகி விவகாரத்து பெற்ற 2500 பேரை, தங்களது ஆய்வுக்குப்படுத்தினர். இதில் 5-ல் ஒருவர் ஆண்மைக் குறைவு காரணமாக மண முறிவுக்கு ஆளானது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆரோக்கியமான திருமண உறவென்பது நீடிக்க வேண்டுமென்றால் வாரம் ஒரு முறையாவது செக்ஸ் வைத்துக் கொள்வது அவசியம் என்று பிற ஆய்வுகளும் கூறிவருகின்றன. ஆண்டுக்கு 58 முறை உடலுறவு அவசியம் என்று மற்ற ஆய்வொன்று தெரிவிக்கிறது.

இன்றைய உலகில் சிறு வயதிலேயே பெரிய வேலை ஏகப்பட்ட பணம் போன்றவற்றினால் குடி, கூத்து என்று இளைஞர்கள் செல்வதால் உண்மையான செக்ஸ் என்று வரும்போது நாட்டமில்லாமல் போய் விடுகிறது.

மேலும் குடியால் 40 வயதிற்குள்ளாகவே சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய் ஆகியவை ஏற்படும் வாலிப வயதினரை நாம் தினமும் கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.

இவையெல்லாம் அவர்களது செக்ஸ் நாட்டமின்மையை அதிகரித்து விடுகிறது. நாட்டமிருந்தாலும் வியாதி பயம் செயலிழக்கச் செய்து விடுகிறது.

40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களில் 50 சதவீதம் பேருக்கு இந்த பிரச்சினை உள்ளது. 40 வயதுக்கு உட்பட்டவர்களில் 10 சதவீதம் பேருக்கு இந்த குறை உள்ளது. 

இந்த சங்கத்தினர் நடத்திய ஆய்வில் 40 வயதை கடந்த ஆண்களில் 48 சதவீதம் பேருக்கு சர்க்கரை வியாதி உள்ளது. அதே போல் ரத்த அழுத்தம் 40 வயதை கடந்தவர்களில் 45 பேருக்கு உள்ளது.

புகைபிடிக்கும் பழக்கமும் செக்ஸ் உறவில் நாட்டத்தை குறைக்கிறது. கடுமையாக ஊதிக் கொண்டேயிருப்பவர்களின் மன நிலை கவனக்குவிப்பு தேவைப்படும் பாலுறவின்பால் ஈடுபட முடியாமல் செய்து விடுகிறது.

உயர் பணிகளில் இருக்கும் கணவன் மனைவிக்கோ இது பற்றியெல்லாம் யோசிக்கவே நேரம் இருப்பதில்லை இதனால் திருமண முறிவு ஏற்படுகிறது.

ஆண்மைக்குறைவை நேரடியாக, நேர்மையாக ஒப்புக் கொண்டு மருத்துவர்களை ஆண்கள் அணுகவேண்டும், மாறாக ஆணாதிக்கத் திமிரில், கோளாறையும் மறைத்து குற்றவுணர்வில் பெண்களை வதைப்பதை நிறுத்தினால் பாதி விவாகரத்தை குறைக்கலாம்.

தேவை ஆண்கள் தங்கள் குறைபாட்டை வெளிப்படையாக ஒப்ப்புக் கொள்வது. பிறகுக் சிகிச்சை எடுத்துக் கொள்வதேயாகும்.


இசையை ரசிக்க ரஹ்மான் ஸ்பெஷல் மொபைல்..

இந்திய மொபைல் நிறுவனங்களில் மைக்கிரோமேக்ஸ், கார்பானை அடுத்து மைக்கிரோமேகஸ் மொபைல் நிறுவனுமும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிறுவனத்தின் சிக்நேச்சர் மாடல் மொபைல்கள் மக்களிடத்தில் மிகவும் பிரபலமாக உள்ளன.

இப்பொழுது இந்நிறுவனம் இசை விரும்பிகளுக்காக ஒரு மொபைலை வெளியிட்டுள்ளது. செல்கான் ரஹ்மான் இஷ்க் AR 45 என்ற இந்த மொபைலின் வெளியீட்டு விழா கொல்கத்தாவில் நடந்தது. இசையை விரும்பிகளுக்காக இந்த மொபைல் இதற்க்கு ஏஆர் ரஹ்மான் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

இதன் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு இந்த மொபைலை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் தான் வெளியிட்டார். இசை விரும்பிகளுக்கும் இந்த செய்தி ஒரு இனிப்பு செய்தியாகவே இருக்கும். இந்த மொபைலின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

 4.5இன்ஞ் ஸ்கிரீன் 

1.2GHZ டியுல் கோர் கார்டெக்ஸ் 

ஏ7 பிராசஸர் 

512எம்பி ராம் 

4ஜிபி மெமரி 

ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ் 

5மெகாபிக்சல் கேமரா 

விஜிஏ பிரண்ட் கேமரா 

wi-fi

3ஜி 

2000mAh பேட்டரி 

இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999 ஆகும். 
செல்கான் நிறுவனம் ரஹ்மான் இஷ்க் மாடலில் நிறைய மொபைல்களை வெளியிடும் என தெரிவித்துள்ளது. 

ரஹ்மான் இஷ்க் AR 45 வெளியீட்டு விழாவின் சில படங்களை கீழே பார்ப்போம்.







இருபது வயதிலேயே முடி கொட்டுவதற்கான 10 காரணங்கள்...

ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கு சரி தலை முடி என்பது கூடுதல் அழகை சேர்க்கும் ஒரு விஷயமாகும். அதனால் அதை அலங்கரிக்கவும், விதவிதமான ஸ்டைல்களை புகுத்தவும், பலரும் முற்படுவர். இப்படி செய்தால் முடியில் பிரச்சனை இல்லாமல் இருக்குமா என்ன? அதிலும் முடி கொட்டுவது என்பது இல்லாமல் இருக்குமா? ஆம், அதுவும் இன்றைய சூழ்நலையில், இந்த பிரச்சனை இல்லாதவர்களே இருக்க முடியாது. இன்றைய தலைமுறைக்கு அளவிற்கு அதிகமாகவே முடி கொட்டும் பிரச்சனை நிலவுகிறது. முப்பது வயதை தாண்டுவதற்கு முன்பாகவே பலருக்கு தலை வழுக்கையாகி விடுகிறது. இது ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவினருக்கும் பொருந்தும். பொதுவாக ஒரு நாளைக்கு 75-100 முடி கொட்டுவது இயல்பே. அதையும் மீறி கொட்டினால் தான் அதற்கான காரணத்தை நாம் கண்டறிய வேண்டும்.

இப்போது இருபது வயதிலேயே முடி கொட்டுவதற்கான 10 காரணங்களைப் பார்ப்போம்.

வாழ்க்கை முறை-



இக்காலத்தில் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறையே, முடி கொட்டுவதற்கான முக்கிய காரணமாக திகழ்கிறது. இரவு நேரம் கண் விழித்து பார்ட்டி கொண்டாடுவது பல தீமைகளை ஏற்படுத்தும். அதிலும் மதுபானம் உட்கொள்வது, புகைப்பிடிப்பது மற்றும் அங்கே வீசும் காற்று என இவை அனைத்தும் முடிக்கு எந்த நன்மையையும் செய்துவிடாது. தொடர்ந்து மதுபானம் பருகினால், உணவில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய வைட்டமின்கள் தடைபட்டு போகும். வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால், ஊட்டச்சத்து குறைந்து, முடிகள் பாதிக்கப்படும்.


மன அழுத்தம்-



முடி கழிதலுக்கு மன அழுத்தமும் ஒரு காரணமாகும். பரீட்சையை சந்திக்க பயம், நிராகரிப்பை ஏற்க பயம், கல்லூரியில் அனுமதி பெற வேண்டுமென பயம் என இப்படி பல காரணங்களால் இளைய தலைமுறை மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.


மாசு-



 மாசு மற்றும் சுற்றுப்புற சுகாதார கேடு போன்றவைகளும் கூட முக்கியமான ஒரு காரணம். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு தொழிற்சாலை பக்கமாக குடியிருக்கிறீர்கள் என்றால், அங்கே நிலவும் மாசு படிந்த சுற்றுச்சூழலும், ரசாயனம் கலந்த நச்சு காற்றும், தலை முடியை வெகுவாக பாதிக்கும். இதனால் தலை முடி தன் பொலிவை இழந்து களையிழந்து காணப்படும்.


பூஞ்சைத் தொற்று-



செபோர்ஹோயிக் தோல் அழற்சி போன்ற பூஞ்சைத் தொற்று ஏற்படுவதால், தலை சருமம் அரிப்பு எடுத்து, முடி கழிதல் ஏற்படும். இவ்வகை தொற்று பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் விடலை பசங்களைத் தான் அதிகம் தாக்கும்


புதிய ஹேர் ஸ்டைல்-



சடையை இறுக்கமாக பின்னுவது அல்லது குதிரை வால் ஸ்டைல் என ஏதாவது புதிய ஹேர் ஸ்டைலை தேர்ந்தெடுக்கும் போது, முடியை இழுத்து பிடித்து கட்டும் போது, அவை வேரிலிருந்து பிடுங்கி கொண்டு வரலாம். இதனால் இது ஆங்காங்கே முடி இல்லாமல் ஆக்கிவிடும்.


சிகை அலங்கார பொருட்கள்-



ஹேர் ஸ்ப்ரே, ஜெல் போன்ற சிகை அலங்காரப் பொருட்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அது முடியின் தரத்தை குறைத்துவிடும். நாளடைவில் முடி கழிதலும் ஏற்படும். அதனால் முடிக்கு ஏற்ற ஷாம்பு மற்றும் கண்டிஷனரை தேர்ந்தெடுத்து, அதை மட்டும் பயன்படுத்துங்கள். சந்தையில் உள்ள கண்ட பொருட்களையெல்லாம் பயன்படுத்தாதீர்கள்.

பரம்பரை பிரச்சனை-




 பரம்பரை பிரச்சனையும் கூட முடியின் தரத்திற்கும், அடர்த்திக்கும் ஒரு காரணமாக அமையும். பரம்பரை பரம்பரையாக ஒரு குடும்பத்து ஆண்களுக்கு தலையில் வழுக்கை விழுந்தால், அந்த குடும்பத்தை சேர்ந்த ஆணுக்கு 30 வயதுக்கு முன்பே சொட்டை தலை உண்டாகலாம். அதை தடுக்க முடியாவிட்டாலும் கூட, வழுக்கை விழும் வயதை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கலாம்.


மன நோய்-



பைத்தியம், புத்தி பேதளிப்பது மற்றும் மன அழுத்தம் போன்றவைகள் ஒரு நபரை அவர்களின் முடியை பிடுங்கச் செய்யும். இப்படி செய்வதை ட்ரைகோட்டில்மேனியா என்று அழைக்கின்றனர். இப்படி பிடுங்குவதனால் தலையில் ஆங்காங்கே வழுக்கை போன்ற தோற்றம் உண்டாகும். இந்த மன நோயை சரிசெய்தால் தான், இந்த பழக்கத்தை நிறுத்தலாம்.

போதுமான தூக்கமின்மை-




 போதுமான நேரம் தூங்கினால் தான் முடி அணுக்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சி பெறும். இரவில் வீட்டில் அதிக நேரம் விழித்திருந்தால் கூட, அது முடியை பாதித்துவிடும்

நல்ல உணவு-



அதிக அளவில் காய்கறி மற்றும் பழங்களுடன் தினமும் நல்ல உணவை உட்கொண்டால், தலை முடி ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் முடியை பாதுகாக்க தேவையான வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் புரதச்சத்து, உடலில் இருப்பது அவசியமானது. இது முடியை ஆரோக்கியமாக வைத்து முடி கழிதலை குறைக்கும்.

விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடக்கும் 1.69 லட்சம் கோடி ரூபாய்...

ரஷ்ய விமான நிலையத்தில் கேட்பாரற்று கடந்த 6 ஆண்டுகளாகக் கிடக்கும் சுமார் 1.69 லட்சம் கோடி ரூபாய் சதாம் உசேனுக்கு சொந்தமானதா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. 

2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி பிராங்பர்ட் என்னும் இடத்திலிருந்து மாஸ்கோவிற்கு அனுப்பப்பட்ட சுமார் 1.69 லட்சம் கோடி ரூபாய் ரஷ்ய விமான நிலையத்தில் கேட்பாரற்று கடந்த 6 ஆண்டுகளாக இருக்கின்றது.

கோப்புகளில் இந்த பணத்தின் உரிமையாளர் ஈரானை சேர்ந்த 45 வயது நபர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், இந்த பணம் சதாம் உசேனுக்கு சொந்தமானதா? என்ற சந்தேகத்தை இங்கிலாந்து பத்திரிகை ஒன்று கிளப்பியுள்ளது.



பல இன்னல்களுக்கு பிறகு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்...

இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு ஒரே கருமுட்டையில் உருவான 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. 

இங்கிலாந்தின் பான்டிபூல் பகுதியை சேர்ந்த பெண் கில்பெர்ட். 3 வயது பெண் குழந்தைக்கு தாயான இவர் அண்மையில் மீண்டும் கர்ப்பமானார். 

இவர் மருத்துவரிடம் பரிசோதனைக்கு சென்றப்போது, இவருக்கு ஒரே கருமுட்டையில் 3 குழந்தைகள் உருவாகி இருந்தது தெரியவந்தது. இது போன்று ஒரே கருமுட்டையில் 3 குழந்தைகள் உருவாகுவது ஆபூர்வமாகும். 20 கோடி பெண்களில் ஒருவருக்குதான் இது நடைபெறும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சாம்பியன்ஸ் லீக்- கடைசி லீக்கில் இன்று சென்னை–டிரினிடாட் அணிகள் மோதல்.

டெல்லி: சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டிரினிடாட் அணியும் மோதுகின்றன. 10 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் இன்றுடன் லீக் சுற்று நிறைவு பெறுகிறது. இன்று இரவு டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடக்கும் கடைசி லீக்கில் சென்னை சூப்பர் கிங்சும், மேற்கிந்திய தீவுகளின் டிரினிடாட் அண்ட் டொபாக்கோ அணியும் மோதுகின்றன.


Saturday, September 21, 2013

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் கூட்டமைப்பு வெற்றி ...4 ஆசனங்களை கைப்பற்றியது...


முல்லைத்தீவு மாவட்டத்துக்கான முழுமையான வாக்களிப்பு முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றின்படி 

தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்ற வாக்குகள்- -28266
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்ற வாக்குகள்-1099

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்ற வாக்குகள்-199
ஐக்கிய தேசிய கட்சி-197

பதிவுசெய்யப்பட்ட  மொத்த வாக்குகள் -53683
வாக்களிக்கப்பட்டவை -38802
நிராகரிக்கப்பட்டவை -2820
ஏற்றுக்கொள்ளப்பட்டவை -35982

தமிழ் கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட ஆசனங்கள் -4
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்ற ஆசனங்கள் -1

மன்னார் மாவட்டத்துக்கான தேர்தல் முடிவுகள்...


மன்னார் மாவட்டத்துக்கான தேர்தல் முடிவுகள்.
இலங்கை தமிழரசு கட்சி -1300
ஐக்கிய  மக்கள் சுதந்திர முன்னணி-408
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-135
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள்-1917
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்-1869
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்-17
ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குகள்-1852

யாழ்மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்...



யாழ்மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்.


தமிழ் தேசிய கூட்டமைப்பு -7625
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -1099
பதிவுசெய்யப்பட்ட  வாக்குகள் -9301
வாக்களிக்கப்பட்டவை -8941
நிராகரிக்கப்பட்டவை -114
ஏற்றுக்கொள்ளப்பட்டவை -8335

வவுனியா மாவட்டத்துக்கான தேர்தல் முடிவுகள்


வடமாகாணம் வவுனியா மாவட்டத்துக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.

இதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட வாக்குகள்-901,
இலங்கை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகள்-323,
ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகள்-25,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக்கொண்ட வாக்குகள்-24

கிளிநொச்சி மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னணியில்...



கிளிநொச்சி மாவட்ட தபால் மூல வாக்களிப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட வாக்குகள்- 756, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகள்-160, ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகள்-1. செலுத்தப்பட்ட மொத்த வாக்குகள்- 929. செல்லுபடியான வாக்குகள் -919. நிராகரிக்கப்பட்டவை -10. முல்லைத்தீவு மாவட்ட தபால் மூல வாக்களிப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னணியில்  இருப்பது குறிப்பிடத்தக்கது.



தலைமுடி உதிர்கின்றதா ஐடியா இதோ...


தலைமுடியைப் பற்றி மிகவும் இளக்காரமாக நினைப் பவர்கள் நாம். 'வந்தால் மலை, போனால் மயிர்' என்கிற மாதிரி பல பழமொழிகள் நம்மிடையே வழக்கத்தில் உண்டு. ஆனால், உண்மை நிலவரம் என்ன? முப்பது வயதில் தலைமுடி வெளுக்க ஆரம்பித்தாலே நம்மவர்களின் உற்சாகம் குறைய ஆரம்பித்து விடுகிறது.


முடி கொட்ட ஆரம்பித்துவிட்டால், கத்த ஆரம்பித்து விடுகிறார்கள். தலைமுடி ஏன் உதிருகிறது? முடி விடயத்தில் என்னென்ன நோய்கள் ஏற்படும்? அதைத் தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பது பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

நம் உடம்பில் ஐந்து மில்லியன் முடிகள் உள்ளன. தலையில் மட்டும் எண்பதாயிரம் முதல் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் முடிகள் உள்ளன. புரோட்டின் சத்தில் உள்ள கேரட்டின் என்கிற மூலப்பொருள்தான் முடிகள் வளர்வதற்குக் காரணமாக இருக்கிறது. புரோட்டின் சத்து குறைந்தால், முடி அதிகமாக உதிரும் என்பதைச் சொல்லவே தேவையில்லை.

யூமெலானின் (eumelanin) என்கிற பொருள்தான் நம் தலைமுடி கறுப்பாக இருப்பதற்குக் காரணம். பொமேலானின் (Pheomelanin) என்கிற பொருள் அதிகமாக இருந்தால், தலைமுடி செம்பட்டையாக இருக்கும். நம் உடம்பில் எத்தனை முடி இருக்கிறதோ, அவற்றுக்கான அடித்தண்டு (follicies), தாயின் வயிற்றில் இருக்கிற போதே தோன்றி விடுகிறது. பிறப்பிற்குப்பின் புதிய முடி வளர்வதற்கான அடித்தண்டு எதுவும் தோன்றுவதில்லை.

ஒவ்வொரு அடித்தண்டிலும் இருபது முதல் முப்பது முறை முடி வளரும். ஒருமுறை முடி வளர்ந்தால், மூன்றிலிருந்து ஐந்து வருடம் வரை இருக்கும். தலையில் வளரும் முடி ஒரு மாதத்துக்கு அரை இன்ச் என்கிற ரீதியில் வளரும். வெயில் காலத்தில் வேகமாக வளரும். தலைமுடியின் வளர்ச்சி பதினைந்திலிருந்து முப்பது வயதுக்குள் அதிவேகமாக இருக்கும்.

ஒரு மாத காலத்துக்குள் ஐம்பதிலிருந்து நூறு முடி உதிர்ந்தால், அது சாதாரண விடயம்தான். அதனால் ஒன்றும் கவலைப்பட வேண்டியதில்லை. இதேபோல தலைவாரிக் கொள்கிற நேரத்தில் 15, 20 முடிகள் உதிரலாம். பெண்கள் குளிக்கும் போது முப்பது முடிவரை உதிரலாம். தலைவாரிக் கொள்ளும்போது 40 முதல் 60 முடிகள் உதிரலாம்.

தலைமுடி உதிருவதில் மூன்று முக்கியமான நிலைகள் உண்டு. முதலாவது, அனெகன். இந்த நேரத்தில் முடியின் அடித்தண்டு நம் உடம்பில் நன்றாகக் காலூன்றி வளரும். இரண்டாவது நிலை, கேடகன் நன்கு வளர்ந்த முடி அதற்கு மேலும் வளராமலும், விழவும் முடியாத நிலையில் இருக்கும். மூன்றாவது, டெலகன். நன்கு வளர்ந்த முடி கீழே விழுந்த பருவம்தான் இந்த நிலை.

தலைமுடி இழப்பில் இருபதுக்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. எனினும், மூன்று முக்கியமான வகைகளை மட்டும் விளக்கமாகச் சொல்கிறேன்.

1. ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை.

2. பெண்களுக்கு ஏற்படும் வழுக்கை.

3. அலோபேசியா ஏரியாட்டா.






ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை:

ஆன்ட்ரியோஜெனிக் அலோபேசியா என்று இதற்குப் பெயர். முப்பதிலிருந்து ஐம்பது சதவிகித ஆண்களுக்கு முப்பது முதல் ஐம்பது வயது வரை உள்ளவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்குப் பல காரணங்கள் உண்டு. வழுக்கை பரம்பரையாக ஏற்படுவது என்பது தவறான கருத்து. இதற்கு ஐம்பது சதவிகித வாய்ப்புகளே உண்டு. தலையில் ஏற்படும் பொடுகினாலும் தலைமுடி பலமிழந்து போகலாம்.

மனஉளைச்சல் காரணமாகவும் தலைமுடி சரமாரியாக விழலாம். மஞ்சள் காமாலை, மலேரியா, டைபாயிட் போன்ற நோய்கள் வந்தாலும் தலைமுடி உதிரும். சிகரெட் பிடிப்பதும், தலைமுடி உதிர்வதற்கு ஒரு முக்கியமான காரணம். கைகால் வலிப்பு நோய்க்கான மருந்துகளைச் சாப்பிடும்போது, உயர் ரத்த அழுத்தம் தொடர்பான மாத்திரைகளைச் சாப்பிடும்போது, சில வகையான நோய் எதிர்ப்புச் சக்தி தரும் மாத்திரைகளை சாப்பிடும்போதும் தலைமுடி கொட்ட ஆரம்பிக்கும்.

சுடவைத்த தண்ணீரில் குளிப்பதாலும், தலையில் கண்டபடி டை அடிப்பதாலும்கூட முடிகள் உதிரலாம்.

நம் ரத்தத்தில் டிஹெச்டி என்று ஒரு பொருள் இருக்கிறது. இது ரத்தத்தில் அதிகமானால், முடி கொட்ட ஆரம்பிக்கும் என்று எல்லா மருத்துவர்களும் ஒப்புக் கொள்கிறார்கள்.







பெண்களுக்கு ஏற்படும் வழுக்கை:

பெண்களின் உடம்பில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால்தான் தலைமுடி நிறைய கொட்டும் வாய்ப்பு உண்டு. பெண்கள் பூப்படைந்தவுடன், அதாவது 12 முதல் 14 வயதுக்குள் நிறைய தலைமுடி இழக்கலாம்.

பிரசவம் முடிந்த சில மாதங்களுக்குள் நிறைய தலைமுடி கொட்டலாம். நாற்பத்தைந்து வயதில் மாதவிடாய் நிற்கிறபோதும் தலைமுடி உதிரலாம் சில பெண்களுக்கு தைராய்டு சம்பந்தமான பிரச்னை உருவாகும்போதும் முடி உதிரலாம். இன்னும் சில பெண்களுக்கு 'ஓவரி'யைச் சுற்றி ஏற்படும் நோய்களாலும், அதனால் ஏற்படும் ஹார்மோன் அதிகமாகவோ, குறைவாகவோ சுரப்பதாலும் முடி உதிரலாம்.

ஊட்டச்சத்து குறைவாக இருக்கும்போது, முடி உதிர்கிறது. உதாரணமாக, நம் ரத்தத்தில் இரும்புச் சத்து குறைந்தால், முடி அதிக அளவில் உதிரும். பெண்களுக்கு ஹேமோகுளோபின் எண்ணிக்கை பன்னிரண்டோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்க வேண்டும்.

கர்ப்பத் தடை மாத்திரைகளைச் சாப்பிடுகிற போதும், பெண்களுக்கு அதிக அளவில் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்படலாம். நகர்ப்புறங்களில் குறிப்பிட்ட சில உணவு வகைகளையே மீண்டும் மீண்டும் சாப்பிடுவதனால், சில வகை சத்துகள் குறைந்துவிடுகின்றன. இதனாலும் முடி உதிர்கிறது.

அலோபேசியா ஏரியாட்டா:


வழுக்கைகளிலேயே மிக ஆச்சரியமான விடயங்களை உள்ளடக்கியது அலோ பேசியா ஏரியாட்டா என்கிற வழுக்கைதான். இளம் பருவம் முதல் எண்பது வயதுக்குள் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். தலையில் மட்டுமல்ல, உடம்பின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். தலையில் உள்ள முடி அதிவேகத்தில் உதிர ஆரம்பிக்கும். பதினைந்தே நாட்களுக்குள் தலை சொட்டை ஆகிவிடும்.

இப்படி திடீரென முடி உதிர்வதற்கான காரணம் வேடிக்கையானது. நம் உடம்பிற்குத் தேவையில்லாத, கெடுதல் தரக்கூடிய பாக்டீரியாக்கள் நம் உடம்பிற்குள் நுழைந்து விட்டால், அதை அழித்துவிடுவது நம் உடலின் இயற்கையான அமைப்பு. உதாரணமாக, நோய்களை உருவாக்கும் பாக்டீரியாக்கள் நமக்குள் புகுந்தால், அதைக் கொல்வது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் வேலை. ஆனால், சில சமயங்களில் நம் உடலில் உள்ள முடிகள் தேவையில்லாதவை, அவற்றை இல்லாமல் ஆக்கிவிட வேண்டும் என்று நம் உடல் தவறாக நினைப்பதால், நம் உடலில் உள்ள முடிகள் எல்லாம் உதிர்ந்துவிடுகின்றன.

தலைமுடி மீண்டும் வளர...


வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும். முடி கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும். தலை முடி கருமை மினுமினுப்பு பெற அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும். முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும். காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.


வெளியாகியது ஐபோன் 5S, 5C...



அப்பிள் நிறுவனமானது தனது ஐபோன்  வரிசையின் அடுத்த ஸ்மார்ட் போனை நேற்று அறிமுகப்படுத்தியது.இறுதியாக வெளியாகியிருந்த ஐபோன்5 வின் தொடர்ச்சியாக ஐபோன் 5எஸ் நேற்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்து வைக்கப்பட்டது.எனினும் ஐபோன் 5எஸ் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் மேற்படி நிகழ்வில் அனைவரது கவனத்தினையும் வேறொன்று ஈர்த்திருந்தது.ஆம், நீண்ட நாட்களாக வெளியாகும் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டு வந்த குறைந்த விலை ஐபோன் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
முற்றிலும் பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்டுள்ள இது 3 ஆம் தர பாவனையாளர்களை இலக்குவைத்து வெளியாகியுள்ளது.




ஐபோன் 5எஸ்

அப்பிளின் கடைசி வெளியீடான ஐபோன்5 இன் அடுத்த வெளீயீடாக வெளியாகியுள்ளது.
தங்க நிறம் மற்றும் சில்வர் மற்றும் ஸ்லேட் நிறத்தில் கிடைக்கின்றது.
வேகமாக இயங்கக்கூடிய A7 சிப்பினை கொண்டுள்ளதுடன் இது ஐபோன்5 வினை விட இரு மடங்கு வேகமானதென அப்பிள் தெரிவிக்கின்றது.
4 அங்குல ரெட்டினா திரையையும், 8 MP, 3264x2448 pixels கெமரா, 1080p HD வீடியோ ரெக்கோர்டிங், ஐபோன்5எஸ் கொண்டுள்ளது.
அப்பிளின் புதிய இயங்குதளமான ஐ.ஓ.எஸ். 7 மூலம் இது இயங்குகின்றது.
இதில் முக்கியமாக குறிப்பிடத்தக்க விடயமென்னவெனில் விரல் ரேகையை வைத்து போனிற்குள் நுழையக்கூடிய பிங்கர்பிரிண்ட் ஸ்கேனரைக் கொண்டுள்ளது. இது போனுக்கு சிறப்பான பாதுகாப்பை அளிப்பதாக அப்பிள் தெரிவிக்கின்றது.
இதன் விலை £549 -16GB , £709 - 64GB ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.





ஐபோன் 5சி

நீண்ட நாட்களாக எதிர்ப்பார்க்கப்பட்டு வந்த மாதிரியாக இதனைக் கருதமுடியும். பல காலமாக வதந்தியாகவே கருதப்பட்டு வந்த இது நேற்று ஊர்ஜிதமாகியது.
பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்டுள்ள இது பிங்க், பச்சை, வெள்ளை, நீலம், மற்றும் மஞ்சள் நிறங்களில் இது கிடைக்கப்பெறுகின்றது.
இதுவும் 4 அங்குல ரெட்டினா திரையைக் கொண்டுள்ளது. A6 புரசசர் , 8 மெகா பிக்ஸல் கெமரா, புதிய பேஸ்டைம் எச்.டி. கெமரா போன்ற வசதிகளை இது கொண்டுள்ளது.
'இதன் விலை £469 - 16GB , £549 -32GB ஆகும்.




முல்லைத்தீவு மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பில் தமிழ் கூட்டமைப்பு முன்னணியில்...


தபால் மூல வாக்களிப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு- 646 வாக்குகளையும்,

ஐக்கிய சுதந்திர மக்கள் முன்னணி- 146 வாக்குகளையும்
ஐக்கிய தேசிய கட்சி- 2 வாக்குகளையும் பெற்றுள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் அறிவுத்துள்ளது.