Thursday, August 16, 2012

கல்கிஸ்ஸை விபச்சார விடுதி முற்றுகை: 6 பெண்கள் உட்பட எழுவர் கைது!



காலி வீதி கல்கிஸ்ஸையில் ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் செயற்படுத்தப்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

இந்த விபச்சார விடுதியை இயக்கியவரும் அதில் விபச்சாரிகளாக தொழில் புரிந்த 6 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸை குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் பெற்றுக் கொண்ட உத்தரவு ஒன்றிற்கு அமைய நேற்று (11) மாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டது.

கைது செய்யப்பட்ட ஏழு பேரும் கல்கிஸ்ஸை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகளின் பின் இன்று (12) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

0 comments:

Post a Comment