இந்தியா, பெங்களூர் விமானத்தில் பயணிக்கவிருந்த ஒருவர் 1201 கிராம் நிறையுடைய 9 தங்க பிஸ்கட்டுக்களுடன் நேற்று திங்கட்கிழமை மாலை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார். சந்தேகத்தின் அடிப்படையில் மேற்படி நபரை சோதனையிட்டபோது, அவர் தனது உள்ளாடைக்குள் மறைத்துவைத்திருந்த தங்க பிஸ்கட்டுக்களை கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். |
மேற்படி சந்தேக நபர் புத்தளம், நாகவில்லு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். தங்க பிஸ்கட்டுக்களுடன் சந்தேக நபரை சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸார், சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். |
0 comments:
Post a Comment