Thursday, September 29, 2011

திறந்த மடல் எழுத உதவும் இணையம்


அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கோ அல்லது கிரிக்கட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கருக்கோ திறந்த மடலை எழுத விரும்புகிறீர்களா?
ஆம் என்றால் மை ஓபன் லெட்டர் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தளத்தின் வாயிலாக நீங்கள் உலகில் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் திறந்த மடல் எழுதலாம். அண்ணா போன்ற தலைவர்கள் தம்பிக்கு என்று மடல்களை எழுதியுள்ளனர்.
நாளிதழ்களில் அவ்வப்போது பிரபலங்கள் முக்கிய பிரச்னை குறித்து திறந்த மடல்களை எழுதுவதுண்டு. சில நேரங்களில் பத்திரிகைகளில் தொண்டர்களின் கடிதங்களும் திறந்த மடல்களாக வெளியாவதுண்டு.
திறந்த மடல்கள் மூலம் முக்கிய விஷயங்கள் குறித்து வலுவான கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆனால் மின்னஞ்சல் யுகத்தில் கடிதங்கள் எழுதும் பழக்கமே அரிதாகி வருகிறது. இந்நிலையில் மின்னஞ்சல் வடிவில் திறந்த மடல்களை எழுதும் வசதியை ஏற்படுத்தி தரும் தளமாக மை ஓபன் லெட்டர் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
எதற்காக வேண்டுமானாலும் யாருக்காக வேண்டுமானாலும் இந்த தளத்தில் இருந்து திறந்த மடலை எழுதலாம். யாருக்கு கடிதத்தை எழுதுகிறீர்கள் என குறிப்பிட்டு உங்கள் பெயரையும் குறிப்பிட்டு கடிதத்தை எழுத துவங்கலாம்.
கடிதம் எழுதுவதற்கான பகுதியில் வலைப்பதிவுகளில் காணப்படக்கூடிய அனைத்து வசதியும் இருக்கின்றன. கடித வரிகளை தேவையான இடங்களில் அடிக்குறிப்பு இடுவது, எழுத்துருக்களை மாற்றுவது, வண்ண எழுத்துக்களை சேர்ப்பது, புகைப்படங்களை இணைப்பது என பல்வேறு வசதிகள் இருக்கின்றன. தேவை ஏற்பட்டால் செய்திகளை மேற்கோளாகவும் இணைக்கலாம்.
ஆக வெறும் வரிகளாக இல்லாமல் தேவைக்கேற்ப அழுத்தங்களை கொடுத்து அழகான கடிதத்தை உருவாக்கலாம். இந்த கடிதத்தை இணைய வெளியில் பதிப்பிப்பதன் மூலம் திறந்த மடலை உலகின் பார்வைக்கு சமர்பிக்கலாம்.
கடிதத்தின் கீழ் மற்றவர்கள் அது குறித்து கருத்து தெரிவிப்பதற்கான வசதியும் இருக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் இந்த தளம் மூலமாக திறந்த மடல்களை எழுதலாம். மற்றவர்கள் எழுதியுள்ள கடிதங்களை படித்து பார்த்து கருத்து தெரிவிக்கலாம்.
இன்னும் மகத்தான கடிதங்கள் எதுவும் இந்த தளத்தில் சமர்பிக்கப்படவில்லை என்றாலும் இந்த தளம் மகத்தான உரையாடலுக்கு வழி வகுக்கும் சாத்தியம் கொண்டிருக்கிறது.
இணையத்தில் கருத்து தெரிவிக்கவும் விவாதத்தில் ஈடுபடவும் எண்ணற்ற வழிகள் இருந்தாலும் கடிதம் மூலம் கருத்துக்களை தெரிவிக்கும் போது அதன் வீச்சும் பரப்பும் தனித்துவம் மிக்கதாக அமையலாம்.
ஒரு வலைப்பதிவிலோ, டிவிட்டர் குறும்பதிவிலோ அல்லது பேஸ்புக் அப்டேட்டிலோ சொல்ல முடியாததை கடிதம் மூலம் சொல்லலாம். உலகின் கவனத்தை ஈர்க்கலாம்.
ஏற்கனவே குறிப்பிட்ட பிரச்னை தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்க்க இணையவாசிகளின் ஆதரவை திரட்ட பெட்டிஷன்ஸ் ஓன்லைன் போன்ற இணையம் வழி மனு போடும் தளங்கள் இருக்கின்றன. அந்த வகை தளங்களின் நீட்சியாக இந்த தளத்தை கருதலாம்.

பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள வேண்டாம்: ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில்


ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு கமிட்டிக் கூட்டம்
இந்தியா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அக்கூட்டத்தில் எந்தச் சூழலிலும் பயங்கரவாதத்தை சகித்துக்
கொள்ள வேண்டாம்
என உறுப்பு நாடுகளை பாதுகாப்பு கவுன்சில் கேட்டுக் கொள்ளும் என அறிக்கை வெளியிடப்பட்டது.

தங்கள் நாட்டில் தங்க பயங்கரவாதிகளை அனுமதிக்காமல் நீதியின் முன் அவர்களை நிறுத்துங்கள் என்று அந்த அறிக்கை கேட்டுக்கொண்டது. பயங்கரவாதத்தைத் தடுக்கவும் அதை எதிர்த்துப் போராடவும் உறுப்பு நாடுகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிக்கை கேட்டுக்கொண்டது.

பயங்கரவாத எதிர்ப்புக் கமிட்டி தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியொன்றில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

மேலும் செப்டம்பர் 11ம் திகதி நடந்த அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் மீதான தாக்குதலுக்கு எதிராக பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றி 10 ஆண்டுகள் ஆவதையும் இந்நிகழ்ச்சி குறித்தது.

எல்லைப் பகுதிகளை தகுந்த கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் பயங்கரவாதிகளின் ஆயுத நடமாட்டத்தை தடுப்பதில் உறுப்பு நாடுகள் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் அந்த அறிக்கை கேட்டுக்கொண்டது.

சில அறக்கட்டளை நிறுவனங்களுக்குச் சென்று சேரும் நிதி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படாமல் இருப்பதை உறுப்பு நாடுகள் உறுதி செய்ய வேண்டும்.

பயங்கரவாத நடவடிக்கையின் நோக்கம் எதுவாக இருந்தாலும்,“பயங்கரவாதம் ஒரு குற்றமே, அதை நியாயப்படுத்த முடியாது” என்பதை உறுப்பு நாடுகள் உறுதி செய்யவேண்டும் என்று அறிக்கை கேட்டுக்கொண்டது.

போதைப் பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் மற்றும் ஹவாலா தொழிலில் ஈடுபடுதல் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டுவரும் சர்வதேசக் கும்பல்களுக்கும் பயங்கரவாதக் குழுக்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து அறிக்கை கவலை தெரிவித்தது.

பயங்கரவாத எதிர்ப்புக் கமிட்டி உருவாகி 10 ஆண்டுகள் ஆன பின்னரும் தேசிய, சர்வதேச, பிராந்திய அளவில் செய்யவேண்டியவை நிறைய உள்ளன என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், அமெரிக்கா மீதான தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் ஆன பின்னரும் பயங்கரவாதம் முக்கிய ஆபத்தாக இன்னமும் உள்ளது. இந்த ஆபத்தால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரை இழக்கின்றனர். பிராந்திய இணக்கம் குலைகிறது என்று கவலை தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹர்தீப் சிங் புரி, பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் உறுப்பு நாடுகளிடையே ஓர் ஒற்றுமையை உருவாக்கியிருக்கிறது. சர்வதேச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தையை சாத்தியமாக்கியிருக்கிறது என்றார்.

பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ளாமல் இருப்பது என்பது பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தல், தங்கள் மண்ணைப் பயன்படுத்த பயங்கரவாதிகளை அனுமதித்தல் ஆகியவற்றுக்கு எதிரானது என்றார் ஹர்தீப் சிங்.


யாழில் மின்சாரம் தாக்கியதில் மின்சாரசபை ஊழியர் ஒருவர் பலி! மேலும் ஒருவர் படுகாயம்


வீதி அகலிப்புப் பணிகளின்போது மின் கம்பங்களுக்கான இணைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த மின்சார சபை ஊழியர்கள் இருவரை மின்சாரம் தாக்கியதில் ஒருவர்
உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று காலை 9.30 மணியளவில் பருத்தித்துறை வீதி அகலிப்புப் பணிகளுக்காக மின் கம்பங்களை இடம் மாற்றும் பணிகளில் ஈடுப்பட்டடிருந்த போது மின்சாரம் தாக்கியதில் மின்சார சபையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் கரவெட்டி கிழக்கைச் சோந்த எஸ்.விமலநாதன் (வயது24) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை முகமாலைப் பகுதியில் வீதி அகலிப்புப் பணிகளிற்கென மின் கம்பங்களை இடமாற்றிக் கொண்டிருந்தபோது காலை 10.00 மணியளில் மின்சாரம் தக்கியதில் மட்டுவில் தெற்கைச் சேர்ந்த நவரட்ணம் அஜந்தன் (வயது22) என்பவர் உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் நேற்று மாலை வரை சாவகச்சேரி பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.

மன்னாரில் கொடிகட்டிப் பறக்கும் சட்டவிரோத மணல் அகழ்வு

மன்னாரில் அரச அதிகாரிகளின் ஆசியுடன் சட்டவிரோத மணல் அகழ்வு கொடிகட்டிப் பறப்பதாக அறியக் கிடைத்துள்ளது.
தலைமன்னார் கிராமத்தில் தற்போது பொலிஸாரின் ஒத்துழைப்போடு மணல் அகழ்வு மற்றும் பனை மரம் வெட்டுதல் போன்ற வேலைத் திட்டங்கள் இரகசியமான முறையில் இடம்பெற்று வருவதாக அக்கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு மற்றும் பனை மரம் வெட்டுதல் போன்ற வேலைத் திட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் தமது கட்டுமானப்பணிகளுக்காக மன்னார் தீவுக்கு வெளியில் இருந்தே மணலைப் பெற்று வருகின்றனர். அதிகம் பணசெலவுகளுக்கு மத்தியிலேயே பெரு நிலப்பரப்பில் இருந்து மணலை பெற்றுக் கொள்ளுகின்றனர்.
இந்த நிலையில் தலை மன்னாரில் பொலிஸாரின் ஆதரவுடன் அக்கிராமத்தினைச் சேர்ந்த சிலரும் வேறு இடங்களைச் சேர்ந்தவர்களும் உழவு இயந்திரம் மற்றும் டிப்பர் ரக வாகனங்கள் மூலம் மணலை ஏற்றிக்கொண்டு செல்லுகின்றனர் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை> தலைமன்னாரில் அதிகளவான பனை வாடிகளும் காணப்படுவதினால் பனை மரங்களையும் வெட்டிக் கொண்டு செல்லுகின்றார்கள். யுத்தம் காரணமாக வடக்கில் பனை மரங்கள் அழிக்கப்பட்டமையால் பனை மரங்கள் வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளதுடன் பிரதேச செயலக அனுமதி பெற்றே வெட்டப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறி இங்கு பனை மரங்கள் பகிரங்கமாக வெட்டப்படுகின்றன. இது குறித்து பனை அபிருத்தி சபையிடம் புகார் செய்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் தலைமன்னார் பொலிஸாருக்கு பல தடவை கிராம மக்களினால் தெரியப்படுத்தியுள்ள போதும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கண்டும் காணாதவாறு நடந்து கொள்வதாகவும் அக்கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் புலனாய்வு பொலிஸாரிடம் ஒப்படைப்பு

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 50 இலங்கையர்களும் இன்று காலை 10.26ற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

LC6286 என்னும் விமானத்தில் 100 பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பாதுகாப்புடன் மேற்படி 50 பேரும் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த மேற்படி நபர்களை தற்சமயம் தேசிய குற்றப் புலனாய்வு பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர்.
இவ்வாறு இலங்கை வந்தவர்களில் 42 ஆண்களும் 8 பெண்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் குற்றப்புலனாய்வு பிரிப் பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பிரிட்டனில் உள்ள தமிழர்கள் சிலரை மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவைக்கும் பட்சத்தில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்படும் சாத்தியம் உள்ளதால் பிரித்தானிய அரசாங்கம் இத்திட்டத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என பிரித்தானிய மருத்துவ அறக்கட்டளையகம் இன்று தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், புகலிட கோரிக்கை மறுக்கப்பட்ட 50 பேரை வாடகை விமானம் மூலம் பிரித்தானிய எல்லை முகவரகம் பலவந்தமாக திருப்பி அனுப்பியுள்ளது.
இலங்கையில் 2009 மே மாதம் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட சிலர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டமைக்கு மருத்துவ சான்றுகள் உள்ளன என அறக்கட்டளையகம் குறிப்பிட்டது.
இதேவேளை, தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மோசமாக நடத்தப்படும் ஆபத்து உள்ளது என பல தொண்டர் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்புடையவர்கள் என தடுத்து வைக்கப்பட்டவர்கள் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என மனித உரிமை கண்கானிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் பிராட் அடம்ஸ் கூறினார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டவர்கள் இலங்கைக்கு மீண்ட போது சித்தரவதைக்கு உட்பட்டதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்தது.
இரண்டாம் இணைப்பு
இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்களில் 27 தமிழர்,11 சிங்களவர் 12 முஸ்லிம்கள் உள்ளனர்
மனித உரிமை அமைப்புகளின்; எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 50 பேரும் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்படுவர் என்று இலங்கை குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த அகதிகளை நாடு கடத்தும் நடவடிக்கைகள் பிரித்தானிய நீதிமன்ற உத்தரவால் ஒத்தி வைக்கப்பட்டதாக ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்தது.
எனினும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 50 இலங்கையர்களும்; இன்று முற்பகல் கட்டுநாயக்க வானூர்தி தளத்திற்கு அழைத்து வரப்பட்டு இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு பாதுகாப்புக்காக 100 பிரித்தானிய அதிகாரிகள் வந்திருந்தனர்.
அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடு கடத்தப்பட்ட இவர்களில் 42 ஆண்களும் 8 பெண்களும் உள்ளடங்கியிருந்தனர்.
இவர்களில் 27 தமிழர்களும் 11 சிங்களவர்களும் 12 முஸ்லி;ம்களும் உள்ளடங்கியுள்ளனர்.
இவர்கள் திருகோணமலை, வவுனியா மற்றும் இரத்தினபுரி ஆகிய இடங்களை சேர்ந்தவர்களாவர் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம்; 17 ஆம் திகதியும் பிரித்தானியாவில் இருந்து 44 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.
இந்தநிலையில் இன்று வந்தவர்களிடம் இலங்கையின் குற்றப்புலனாய்வு பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டனர்.
lankaxpress.Com

டகுபதியுடனான பிபாஷா பாசு திருமணம் விரைவில் அறிவிக்கப்படும்

ஜான் ஆபிரஹாம் உடனான காதலை முறித்து கொண்ட பிபாஷா பாசு, இப்போது ராணா டகுபதியோடு மிக நெருக்கமாக பழகி வருகிறார்.
இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. பாலிவுட்டில் நீண்ட நாள் காதலர்களாக இருந்து வந்தவர்கள் ஜான் ஆபிரஹாமும், பிபாஷா பாசும்.
இவர்கள் காதல் மீது யார் கண்பட்டதோ என்னவோ, சமீபத்தில் இவர்களது காதல் முறிந்தது.
இந்நிலையில் சமீபகாலமாக நடிகை பிபாஷா பாசு, நடிகர் ராணா டகுபதியுடன் மிகவும் நெருங்கி பழகி வருவதாகவும், இருவரும் ஒன்றாக சுற்றுவதாகவும் பாலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வந்தது.
இதை நிரூபிக்கும் விதமாக சிலதினங்களுக்கு முன்னர் இந்தியா வந்த ஹாலிவுட் நடிகை, பாரிஸ் ஹில்டன் விருந்து நிகழ்ச்சியில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் பங்கேற்றனர்.
அதில் ராணா டகுபதியும், பிபாஷா பாசுவும் பங்கேற்றனர். இருவரும் இரவு விருந்து முழுக்க ஒரே ஆட்டம், பாட்டம் என்று அமர்களப்படுத்தினர்.
இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்ய போவதாகவும் நம்புபடியான தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 

சாம்பியன்ஸ் லீக் : முதல் வெற்றியை தனதாக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்


சாம்பியன்ஸ் லீக் போட்டியில் கேப் கோப்ராஸிக்கு எதிரான ஆட்டத்தில்
4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இதன்மூலம் இந்தத் தொடரில் முதல் வெற்றியை தனதாக்கியது சூப்பர் கிங்ஸ். முதலில் ஆடிய கேப் கோப்ராஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய சென்னை 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
சென்னையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பூவா தலையா வென்று துடுப்பெடுத்தாடிய கேப் கோப்ராஸ் அணியில் ரிச்சர்டு லெவி 6 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 14 பந்துகளைச் சந்தித்த கிப்ஸ் 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்தார்.
பின்னர் வந்த டி.ஜே.விலாஸ் 19 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த ஓவைஸ்ஷாவும், டுமினியும் சற்று அதிரடியாக விளையாட அந்த அணியின் ஸ்கோர் உயர்ந்தது. 24 பந்துகளைச் சந்தித்த டுமினி 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஓவைஸ்ஷா 38 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்து வெளியேறினார். அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் குவித்தது. சென்னை தரப்பில் மோர்கல், பொலிங்கர், பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை அணியில் விஜய் 14, ஹசி 29, பத்ரிநாத் 2, சாஹா 6, ரெய்னா 20 ரன்களுக்கு வெளியேற 5 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது சூப்பர் கிங்ஸ். கேப்டன் டோனி 17 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். மறுமுனையில் பிராவோ அதிரடியில் இறங்கினார்.
சென்னை அணி வெற்றிபெற கடைசி 2 ஓவர்களில் 23 ரன்கள் தேவைப்பட்டபோது, ஸ்டெயின் வீசிய 19-வது ஓவரை எதிர்கொண்ட பிராவோ அந்த ஓவரில் ஒரு சிக்ஸரையும், 2 பவுண்டரிகளையும் விளாசினார். இதனால் சென்னையின் வெற்றி எளிதானது.
19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது சென்னை சூப்பர் கிங்ஸ். பிராவோ 25 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 46 ரன்களும், மோர்கல் 6 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். கேப் கோப்ராஸ் தரப்பில் டுமினி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிராவோ ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

செல்போன் கேம்ராவை ஆன் செய்து தூக்கில் தொங்கிய எம்பிஏ பட்டாதாரி பெண்!


தனது செல்போன் கேமராவை ஆன் செய்துவிட்டு தூக்கு போட்டு எம்பிஏ பட்டாதாரி பெண் ஒருத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்
மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அந்தேரி கிழக்கு பகுதியில் வசித்து வந்தவர் சம்தாஷி (25).இவர் மும்பையில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.இவரது மனைவி நிதிஜிங் (24).
எம்பிஏ பட்டாதாரியான இவர்,தனியார் நிறுவனத்தில் நிர்வாக பிரிவில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார்.நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவர்கள், கடந்த பிப்ரவரி மாதம்தான் திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில் இருவருக்கும் இடையே சமீப காலமாக சில கருத்துவேறுபாடுகள் நிலவி வந்ததாக தெரிகிறது. 
நேற்று காலை சம்தாஷி வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது நிதிஜிங்,தமது கணவரிடம்," உங்களிடம் சிறிது பேச வேண்டி உள்ளது. எனக்காக 10 நிமிடங்கள் ஒதுக்குங்கள்!" என்று கேட்டார்.இதற்கு ஒப்புக் கொண்ட சம்தாஷி 10 நிமிடங்கள் அவருடன் பேசினார். 
பின்னர் சம்தாஷி அலுவலகத்திற்கு கிளம்பிய போது மீண்டும் அவரை தடுத்து நிறுத்தினார் சம்தாஷி.ஆனால் அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டதால், சம்தாஷி கோபம் அடைந்து அவரை சத்தம் போட்டுவிட்டு புறப்பட்டு சென்று விட்டார். 
இந்நிலையில் சிறிது நேரம் கழித்து, தனது செல்போனில் கணவருக்கு “சாரி” என்று எஸ்எம்எஸ் அனுப்பினார். 
ஆனால் அந்த சம்தாஷி பொருட்படுத்தவில்லை.கணவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. 
இதனால் மனமுடைந்த அவர், தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்ததாக தெரிகிறது. 
தனது தற்கொலை காட்சியை கணவர் பார்க்க வேண்டும் என்பதற்காக அதை தனது செல்போனில் பதிவு செய்ய தீர்மானித்தார்.இதனையடுத்து தனது பெட்ரூமில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு செல்போனில் உள்ள கேமிராவை ஆன் செய்து அதை சரியான கோணத்தில் பொருத்தி வைத்தார். 
பின்னர் தூக்கில் தொங்கி உயிரை விட்டார்.மதியம் நிதிஜிங்கின் தந்தை போன் செய்தார். பதில் இல்லாததால் அருகில் குடியிருக்கும் உறவினரிடம் விபரத்தை சொல்லி, நேரில் போய் பார்த்து விட்டு வருமாறு கேட்டுக் கொண்டார்.அவர் போய் கதவை தட்டியபோது எந்த பதிலும் வராததால், நிதிஜிங்கின் கணவருக்கு தகவல் தெரிவித்தார். 
அவர் வீட்டிற்கு வந்ததும், மீண்டும் கதவை தட்டி பார்த்தும் பதில் வராததால், இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 
காவல்துறையினர் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோதுதான், நிதிஜிங் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது. 
போலீசார் நிதிஜிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நிதிஜிங்கின் செல்போனை கைப்பற்றி அதை பரிசோதித்து பார்த்தனர்.அதில் நிதிஜிங் தூக்கில் தொங்கும் காட்சி பதிவாகி இருந்தது. 
அத்துடன் அதில், " எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை.நான் மட்டுமே பொறுப்பு. சிறிய மனக்கசப்பு காரணமாகவே இந்த முடிவை நான் எடுத்தேன். யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவில்லை. அடுத்த பிறவியில் எனது குடும்பத்துக்கும், கணவரின் குடும்பத்துக்கும் பொதுவான நடுவராக பிறக்க விரும்புகிறேன்" என்று நிதிஜிங் பேசியிருப்பதும் பதிவாகி இருந்தது. 
இதைப் பார்த்து கணவர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அதே சமயம் காவல்துறையினர் இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

Wednesday, September 28, 2011

Samsung வெளியிடும் வளையக்கூடிய திரையுள்ள தொலைபேசிகள்



Galaxy Skin கைத்தொலைபேசியினை நீங்கள் சுற்றி உங்கள் கைகளுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
வளையக்கூடிய AMOLED திரைகள் 4.5 அங்குலம் அகலமாகவும் 0.3மி.மீ. தடிப்பாகவும் இருக்குமென இவ்வருடம் ஜனவரியில் அறிமுகக் கருத்துவெளியிட்டபோது Samsung கூறியிருந்தது.இதனைச் சுத்தியல் கொண்டு அடித்தாலும் அதனைத் தாங்கக்கூடியவாறிருக்கும். ‘கிறபீன்’ எனும் அணுவைப் போன்ற தடிப்புள்ள படிகளைக் கொண்ட காபன் உறைகளால் இதன் திரை பாதுகாக்கப்படும்.கிறபீன் திரைகளை உடைக்கமுடியாது. இதன்மூலம் ஏனைய கையடக்கத் தொலைபேசிகளுக்கும் பயன்படுத்தக்கூடியவாறு உடனடி அனுகூலமாக உருவாகியுள்ளது.

பிரமாண்டமாக அரங்கேற தயாராகும் சேக்ஸ்பியரின் 37 நாடகங்கள்



ஆங்கிலேய நாடக ஆசிரியர் வில்லியம் சேக்ஸ்பியரின் 37 நாடகங்களும் 37 மொழிகளில் அரங்கேற்றப்படவுள்ளன.



இந்த நிகழ்வுகள் 2012 ஒலிம்பிக்கின் கலாச்சார விழாக்களாக அரங்கேற்றப்படுவதற்கான ஒத்திகைகளாக இடம்பெறுகின்றன.

இவை உருது, சுவாஹலி ஆகிய மொழிகளிலிருந்து பிரபல்யமான மொழிகள்வரை அரங்கேற்றப்படுகின்றன.

முக்கியமாக ஆங்கிலேய உலகிலிருந்து Henry V உம் சிக்காக்கோவின் நிறுவனத்தினால் Othello உம் அரங்கேற்றப்படவுள்ளன.

அதேவேளை லண்டன் நிறுவனத்தினால் பிரித்தானியாவின் சைகை மொழியினால் Love’s Labor’s Lost என்ற நாடகம் அரங்கேற்றப்படுவது இதுதான் முதல் முறையாகும்.

இவற்றை அந்தந்த நாடுகளின் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்துகின்றன. ஹிந்தியில் Twelfth Night உம் கிரேக்க மொழியில் Pericles உம் சுவாஹலியில் Merry Wives of Windsor இஸ்ரேலின் ஹபிமா நிறுவனம் The Merchant of Venice நாடகத்தினையும் அரங்கேற்றியது.


அநுராதபுரம் , யாழ் வீதியில் பேருந்தும் லொறியும் விபத்தில் சிக்கியதில் 25 போர்வரை காயமடைந்தனர்!

அநுராதபுரம் யாழ்ப்பாண வீதியிலுள்ள றாமகலே பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாரிய வாகன விபத்தில் 25 பேர்வரை
காயமடைந்துள்ளதாக அநுராதபுரம் தலைமயக பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி பாலித்த நிஸ்ஸங்க தெரிவித்தார்.

யகல்ல பகுதியிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து இயந்திர கோளாறு காரணமாக எதிரே கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியுள்ளது. இதன்போது பேரூந்தின் பின்னால் வந்த மோட்டார் சைக்கிளும் பேரூந்துடன் மோதி பெரும் சேதத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் பேருந்து மற்றும் லொறிகளின் சாரதிகள் உட்பட 25 பேர் காயங்களுக்குள்ளாகி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 12 பேர் பெண்களாவர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமயக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tuesday, September 27, 2011

G.C.E.A/L results will be release on November



The Examinations Department has made arrangements to release the results of the G.C.E.Advanced Level results by end of November.

Commissioner General of Examinations Anura Edirisinghe said that 147,761 candidates under the old syllabus and 147,100 candidates under the new syllabus sat for the Advanced Level examinations which was held from August 8th to September 3rd.


The examination covered 64 subjects under Science, Arts and Commerce streams

வல்லிபுர ஆழ்வார் ஆலய கொடியேற்றம் இன்று!!

வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயில் வருடாந்த பெருந்திருவிழா இன்று முற்பகல் 10 மணிக்கு கொடியேற்றத்துடன்


ஆரம்பமாகின்றது.17 தினங்கள் இடம்பெறும் பெருந் திருவிழாவில் கொடியேற்றம் தொடக் கம் ஆறாம் திருவிழா வரை சுவாமி உள் வீதி உலாவருவார். ஏழாம் திருவிழா தொடக்கம் 17ஆம் திருவிழா வரை சுவாமி வெளிவீதி உலா வந்து பக்தர் களுக்கு காட்சி வழங்குவார்.
3 ஆம் திகதி திங்கட்கிழமை குருக் கட்டு விநாயகர் தரிசனம்இ 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெண்ணெய்த் திருவிழாஇ 5 ஆம் திகதி புதன்கிழமை துகில் திருவிழாஇ 6 ஆம் திகதி வியாழக் கிழமை பாம்புத் திருவிழாஇ 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹம்சன் போர்த்திரு விழாஇ 8ஆம் திகதி சனிக்கிழமை வேட் டைத்திருவிழாஇ 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சப்பரத்திருவிழாஇ 10 ஆம் திகதி திங்கட்கிழமை தேர்த்திருவிழாஇ 11 ஆம் திகதி செவ்வாய்கிழமை சமுத் திரத் தீர்த்தத்திருவிழாஇ 12 ஆம் திகதி புதன்கிழமை கேணித் தீர்த்தத் திரு விழா ஆகிய திருவிழாக்கள் இடம் பெறும்.
தினமும் பகல் திருவிழா காலை 8 மணிக்கும் இர வுத் திருவிழா மாலை 4.30 மணிக் கும் ஆரம்பமாகும். வடக்கு வீதியில் சுவாமி வீதி உலா வரும் போது கற் கோவளம் அற நெறிப்பாடசாலை மாணவர்களின் நிகழ்வு அந்நாள் திருவிழாக் கருத் தினைச் சித் திரிக்கும் முறையில் நடைபெறும். திருவிழாக் காலங்களில் பெரியாழ் வார் ஆச்சிரமமடம்இ லக்சுமி நாரா யணாமடம்இ பரந்தாமன் மடம் ஆகிய வற்றில் அன்னதானத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருவிழாவை முன்னிட்டு விசேட பஸ்சேவைகள் ஒழுங்கு செய்யப் பட்டுள்ளன. எமது சமயக் கோட்பாடுகளுக்கும் கலாசாரத்துக்கும் அமைவாக உடை களை அணிந்து பெறுமதியான தங்க ஆபரணங்கள் அணிவதைத் தவிர்த்து பெருந்திருவிழாவில் கலந்து கொண்டு வல்லிபுர மாயவ னின் அருளைப் பெற்றுக் கொள்ளு மாறு அறங்காவலர் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

Sunday, September 25, 2011

Google You+ சமூக வலைத்தளம் இன்று முதல் அனைவருக்கும்!

இதுவரை காலமும் மட்டுப்படுத்தப்பட்ட பயனாளர்களிடையே பரிசோதிக்கப்பட்டு வந்த புத்தம் புதிய சமூக வலைத்தளமான கூகிள் பிளஸை இன்றுமுதல் அனைவரும் பயன்படுத்த அனுமதித்துள்ளது கூகுள்.
கூகிளின் முகப்பு பக்கத்தை லாகின் செய்து சென்றால் அங்கே புதிதாக You அல்லது நீங்கள் என அம்புக்குறி காட்டப்படும். அங்கே செல்வதன் மூலம் உங்களில் கூகுள் பிளஸ் கணக்கை ஆக்டிவேட் செய்து பயன்படுத்த முடியும்.

மீளாத் துயரத்தில் மீண்டும் பூமி அதிர்ச்சி-ஆயிரக்கணக்கானோர் அகதி முகாம்களில் ……


பாரிய நிலநடுக்கத்தால் பெரும் அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலை யிலுள்ள சிக்கிம் மாநிலத்தில் நேற்றிரவு மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால்
அப்பகுதி மக்கள் பீதிய டைந்த நிலையில் தங்க ளது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். நேற்றிரவு 3.9 ரிச்டர் அளவு பூமி அதிர்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிக்கிம் மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட 6.8 ரிச்டர் அளவிலான பெரும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் வட மாநிலங்கள், கிழக்கு மாநிலங்கள், நேபாளம், பூட்டான் உட்பட்ட பகுதிகளில் இதுவரை சுமார் 116 பேர் உயிரிழந் துள்ளனர். இதில் சிக்கிம் மாநிலத்தில் மாத்திரம் 78 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தப் பாரிய பூமி அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகள் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றபோதும் பெரிதும் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண உதவிகளுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். இதேவேளை தொடர் மழையும், நிலச்சரிவுகளும் நிவாரணப் பணிகளில் பெரும் தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பூமி அதிர்ச்சியினால் பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணியே இன்னும் முடிவடையாத நிலையில் நேற்று சீன எல்லையையொட்டிய லாசுங்கில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட மையும் குறிப்பிடத்தக்கது. இந்தவெள்ளப்பெருக்கில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிக்கிம் மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட 6.8 ரிச்டர் அளவிலான பெரும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் வட மாநிலங்கள், கிழக்கு மாநிலங்கள், நேபாளம், பூட்டான் உட்பட்ட பகுதிகளில் இதுவரை சுமார் 116 பேர் உயிரிழந் துள்ளனர். இதில் சிக்கிம் மாநிலத்தில் மாத்திரம் 78 பேர் உயிரிழந்துள்ளனர்.பாரிய நிலநடுக்கத்தால் பெரும் அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலை யிலுள்ள சிக்கிம் மாநிலத்தில் நேற்றிரவு மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பீதிய டைந்த நிலையில் தங்க ளது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். நேற்றிரவு 3.9 ரிச்டர் அளவு பூமி அதிர்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இந்தப் பாரிய பூமி அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகள் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றபோதும் பெரிதும் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண உதவிகளுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். இதேவேளை தொடர் மழையும், நிலச்சரிவுகளும் நிவாரணப் பணிகளில் பெரும் தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பூமி அதிர்ச்சியினால் பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணியே இன்னும் முடிவடையாத நிலையில் நேற்று சீன எல்லையையொட்டிய லாசுங்கில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட மையும் குறிப்பிடத்தக்கது. இந்தவெள்ளப்பெருக்கில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசாவின் செயற்கைகோள் இன்று பூமியில் விழும்



கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சூரியன் மற்றும் பூமியின் வளிமண்டலத்தை குறித்த தகவல்களை திரட்ட நாசா அனுப்பிய செயற்கைக்கோள் துண்டு, துண்டாகநேற்றி பூமியை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அதன் வீழ்ச்சி வேகம் குறைந்துவிட்டதால் இன்று விழவுள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கடந்த 1991ம் ஆண்டு உயர் வளிமண்டல ஆராயச்சி செயற்கைக்கோளை(யு.ஏ.ஆர்.எஸ்) விண்ணில் செலுத்தியது.



அது பூமியின் வளி மண்டலம் குறித்த பல தகவல்களை அனுப்பி வந்தது. கடந்த 2005ம் ஆண்டோடு அந்த செயற்கைக்கோள் செயலிழந்தது. அதன்பின் பூமியை வெறுமனே சுற்றி வரும் பல செயற்கைக்கோள்களை போல யு.ஏ.ஆர்.எஸ் செயற்கைக்கோளும் பூமியை சுற்றி வந்தது.
இந்நிலையில் எதிர்பாராவிதமாக அது பூமியின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
இது குறித்து விஞ்ஞானிகள் சிலர் கூறியதாவது, யு.ஏ.ஆர்.எஸ் செயற்கைக்கோள் மொத்தம் 6.5 டன் எடை கொண்டது. இது நூற்றிற்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைந்து வளிமண்டலத்தில் எரிந்து கொண்டே பூமியை அடையும்.
இதில் ஏறக்குறைய பல துண்டுகள் வளிமண்டலத்திலேயே எரிந்துவிட்டாலும், சில பெரிய துண்டுகள் பூமியை அடைந்து விபத்துகளை ஏற்படுத்தலாம். அந்த பெரிய துண்டுகள் அதிகபட்சமாக 136 கிலோ வரை இருக்கலாம் என தெரிகிறது.
பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் செயற்கைக்கோளின் பாகங்கள் நேற்று பிற்பகல் முதல் இன்று வரை வந்து விழும் வாய்ப்புள்ளது. முன்னதாக அமெரிக்கா மற்றும் கனடாவின் சில பகுதிகளில் செயற்கைக்கோளின் பகுதிகள் வந்து விழலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் நேற்றைய நிலவரப்படி செயற்கைக்கோளின் 26 பாகங்கள் அதிகளவில் அண்டார்டிக்கா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் விழும் என கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை கடலில் தான் விழும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
ஏற்கனவே தெரிவித்தபடி செயற்கைகோளில் இருந்த எரி பொருள் தீர்ந்துவிட்டதால் அதை தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வருவதும் இயலாத காரியம்.
இதுவரை செயற்கைக்கோள் தாக்கி யாரும் இறந்ததாக தகவல் இல்லை. ஆனால் கடந்த 1997ல் ஒக்லாவைச் சேர்ந்த வில்லியமஸ் என்பவர் மட்டும் காயமடைந்துள்ளாக தெரிகிறது. செயற்கைக்கோள் ஒன்றின் சிறிய துண்டு அவரது தோளில் விழுந்ததால் காயமடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பூமியை நோக்கி வரும் செயற்கைக்கோளின் துண்டுகள் 3,200 பேரில் 1 நபர் மீது விழ வாய்ப்புள்ளது. அப்படி விழும் துண்டுகள் மின்னலை விட வேகமாக மேலே வந்து விழும் என தெரிகிறது. பூமியில் வந்து விழும் செயற்கைக்கோளின் துண்டுகளையும் யாரும் தொட வேண்டாம்.
செயற்கைக்கோள்களின் துண்டுகள், ராக்கெட்கள், மற்ற பொருட்கள் என இதுவரை 22,000க்கும் மேலான வஸ்துக்களை பூமி தன்னிடம் ஈர்த்துள்ளது. கடந்த 32 ஆண்டுகளில் விழும் மிகப்பெரிய செயற்கைக்கோள் இதுதான்.
தற்போது விண்வெளியில் ஏவப்படும் செயற்கைக்கோள்கள் பூமிக்கு திரும்பினால் அவற்றை கட்டுப்படுத்த எரிப்பொருள் மீதம் வைக்கப்படுகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
பூமிக்குத் திரும்பும் செயற்கைக்கோள்களின் அசைவுகளை பொழுதுபோக்காக பார்த்து ரசிக்கும் பழக்கம் கொண்ட கனடா நாட்டை சேர்ந்த டிடு மொல்சன் என்பவர் கூறுகையில்,”கடந்த 2004ல் பூமிக்கு திரும்பிய ரஷ்ய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை பெரியளவில் பார்த்திருக்கிறேன். அது மிகப் பெரிய வால்நட்சத்திரம் போல இருந்தது” என்றார்.


  

அடுத்த 9 நாட்களில் 9 புதுப்படங்கள்!!

 செப்டம்பர் மாத இறுதியை நெருங்கிவிட்டோம். என்ன அவசரமோ தெரியவில்லை, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியிட ஆரம்பித்துள்ளனர். தீபாவளிக்கு முன் படங்களை வெளியிட்டு வசூல் பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கை போலிருக்கிறது.அடுத்த ஒன்பது நாட்களில் 9 படங்களை வெளியிடவிருக்கிறார்கள்.நாளை மறுநாள் செப்டம்பர் 23-ம் தேதி சத்யராஜ்-சாந்தனு நடித்த ஆயிரம் விளக்கு, புதியவர்கள் படைப்பான ‘அடுத்தது’ மற்றும் இரு சின்ன பட்ஜெட் படங்கள் திரையைத் தொட உள்ளன. இந்த நான்கில் இரு படங்களுக்கு சென்னையில் தியேட்டர் கிடைப்பதே குதிரைக்கொம்பாகிவிட்டதாம்.நவராத்திரி வாரமான செப்டம்பர் 29-30 தேதிகளில் மட்டும் 5 புதிய படங்கள் வரவிருக்கின்றன.




இந்த இரு தினங்களிலும் சன் பிக்சர்ஸ் வெளியிடும் விஷாலின் வெடி, சற்குணத்தின் வாகை சூடவா, பிரசன்னா நடித்துள்ள சேரன் தயாரிப்பான முரண், ராரா, வர்ணம் என படங்கள் காத்திருக்கின்றன.