Wednesday, September 28, 2011

பிரமாண்டமாக அரங்கேற தயாராகும் சேக்ஸ்பியரின் 37 நாடகங்கள்



ஆங்கிலேய நாடக ஆசிரியர் வில்லியம் சேக்ஸ்பியரின் 37 நாடகங்களும் 37 மொழிகளில் அரங்கேற்றப்படவுள்ளன.



இந்த நிகழ்வுகள் 2012 ஒலிம்பிக்கின் கலாச்சார விழாக்களாக அரங்கேற்றப்படுவதற்கான ஒத்திகைகளாக இடம்பெறுகின்றன.

இவை உருது, சுவாஹலி ஆகிய மொழிகளிலிருந்து பிரபல்யமான மொழிகள்வரை அரங்கேற்றப்படுகின்றன.

முக்கியமாக ஆங்கிலேய உலகிலிருந்து Henry V உம் சிக்காக்கோவின் நிறுவனத்தினால் Othello உம் அரங்கேற்றப்படவுள்ளன.

அதேவேளை லண்டன் நிறுவனத்தினால் பிரித்தானியாவின் சைகை மொழியினால் Love’s Labor’s Lost என்ற நாடகம் அரங்கேற்றப்படுவது இதுதான் முதல் முறையாகும்.

இவற்றை அந்தந்த நாடுகளின் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்துகின்றன. ஹிந்தியில் Twelfth Night உம் கிரேக்க மொழியில் Pericles உம் சுவாஹலியில் Merry Wives of Windsor இஸ்ரேலின் ஹபிமா நிறுவனம் The Merchant of Venice நாடகத்தினையும் அரங்கேற்றியது.


0 comments:

Post a Comment