அநுராதபுரம் யாழ்ப்பாண வீதியிலுள்ள றாமகலே பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாரிய வாகன விபத்தில் 25 பேர்வரை
காயமடைந்துள்ளதாக அநுராதபுரம் தலைமயக பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி பாலித்த நிஸ்ஸங்க தெரிவித்தார்.யகல்ல பகுதியிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து இயந்திர கோளாறு காரணமாக எதிரே கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியுள்ளது. இதன்போது பேரூந்தின் பின்னால் வந்த மோட்டார் சைக்கிளும் பேரூந்துடன் மோதி பெரும் சேதத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால் பேருந்து மற்றும் லொறிகளின் சாரதிகள் உட்பட 25 பேர் காயங்களுக்குள்ளாகி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 12 பேர் பெண்களாவர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமயக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment