
நேற்று காலை 9.30 மணியளவில் பருத்தித்துறை வீதி அகலிப்புப் பணிகளுக்காக மின் கம்பங்களை இடம் மாற்றும் பணிகளில் ஈடுப்பட்டடிருந்த போது மின்சாரம் தாக்கியதில் மின்சார சபையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் கரவெட்டி கிழக்கைச் சோந்த எஸ்.விமலநாதன் (வயது24) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை முகமாலைப் பகுதியில் வீதி அகலிப்புப் பணிகளிற்கென மின் கம்பங்களை இடமாற்றிக் கொண்டிருந்தபோது காலை 10.00 மணியளில் மின்சாரம் தக்கியதில் மட்டுவில் தெற்கைச் சேர்ந்த நவரட்ணம் அஜந்தன் (வயது22) என்பவர் உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் நேற்று மாலை வரை சாவகச்சேரி பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.
0 comments:
Post a Comment