Thursday, September 29, 2011

செல்போன் கேம்ராவை ஆன் செய்து தூக்கில் தொங்கிய எம்பிஏ பட்டாதாரி பெண்!


தனது செல்போன் கேமராவை ஆன் செய்துவிட்டு தூக்கு போட்டு எம்பிஏ பட்டாதாரி பெண் ஒருத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்
மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அந்தேரி கிழக்கு பகுதியில் வசித்து வந்தவர் சம்தாஷி (25).இவர் மும்பையில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.இவரது மனைவி நிதிஜிங் (24).
எம்பிஏ பட்டாதாரியான இவர்,தனியார் நிறுவனத்தில் நிர்வாக பிரிவில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார்.நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவர்கள், கடந்த பிப்ரவரி மாதம்தான் திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில் இருவருக்கும் இடையே சமீப காலமாக சில கருத்துவேறுபாடுகள் நிலவி வந்ததாக தெரிகிறது. 
நேற்று காலை சம்தாஷி வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது நிதிஜிங்,தமது கணவரிடம்," உங்களிடம் சிறிது பேச வேண்டி உள்ளது. எனக்காக 10 நிமிடங்கள் ஒதுக்குங்கள்!" என்று கேட்டார்.இதற்கு ஒப்புக் கொண்ட சம்தாஷி 10 நிமிடங்கள் அவருடன் பேசினார். 
பின்னர் சம்தாஷி அலுவலகத்திற்கு கிளம்பிய போது மீண்டும் அவரை தடுத்து நிறுத்தினார் சம்தாஷி.ஆனால் அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டதால், சம்தாஷி கோபம் அடைந்து அவரை சத்தம் போட்டுவிட்டு புறப்பட்டு சென்று விட்டார். 
இந்நிலையில் சிறிது நேரம் கழித்து, தனது செல்போனில் கணவருக்கு “சாரி” என்று எஸ்எம்எஸ் அனுப்பினார். 
ஆனால் அந்த சம்தாஷி பொருட்படுத்தவில்லை.கணவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. 
இதனால் மனமுடைந்த அவர், தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்ததாக தெரிகிறது. 
தனது தற்கொலை காட்சியை கணவர் பார்க்க வேண்டும் என்பதற்காக அதை தனது செல்போனில் பதிவு செய்ய தீர்மானித்தார்.இதனையடுத்து தனது பெட்ரூமில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு செல்போனில் உள்ள கேமிராவை ஆன் செய்து அதை சரியான கோணத்தில் பொருத்தி வைத்தார். 
பின்னர் தூக்கில் தொங்கி உயிரை விட்டார்.மதியம் நிதிஜிங்கின் தந்தை போன் செய்தார். பதில் இல்லாததால் அருகில் குடியிருக்கும் உறவினரிடம் விபரத்தை சொல்லி, நேரில் போய் பார்த்து விட்டு வருமாறு கேட்டுக் கொண்டார்.அவர் போய் கதவை தட்டியபோது எந்த பதிலும் வராததால், நிதிஜிங்கின் கணவருக்கு தகவல் தெரிவித்தார். 
அவர் வீட்டிற்கு வந்ததும், மீண்டும் கதவை தட்டி பார்த்தும் பதில் வராததால், இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 
காவல்துறையினர் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோதுதான், நிதிஜிங் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது. 
போலீசார் நிதிஜிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நிதிஜிங்கின் செல்போனை கைப்பற்றி அதை பரிசோதித்து பார்த்தனர்.அதில் நிதிஜிங் தூக்கில் தொங்கும் காட்சி பதிவாகி இருந்தது. 
அத்துடன் அதில், " எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை.நான் மட்டுமே பொறுப்பு. சிறிய மனக்கசப்பு காரணமாகவே இந்த முடிவை நான் எடுத்தேன். யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவில்லை. அடுத்த பிறவியில் எனது குடும்பத்துக்கும், கணவரின் குடும்பத்துக்கும் பொதுவான நடுவராக பிறக்க விரும்புகிறேன்" என்று நிதிஜிங் பேசியிருப்பதும் பதிவாகி இருந்தது. 
இதைப் பார்த்து கணவர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அதே சமயம் காவல்துறையினர் இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

0 comments:

Post a Comment