Sunday, September 25, 2011

மீளாத் துயரத்தில் மீண்டும் பூமி அதிர்ச்சி-ஆயிரக்கணக்கானோர் அகதி முகாம்களில் ……


பாரிய நிலநடுக்கத்தால் பெரும் அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலை யிலுள்ள சிக்கிம் மாநிலத்தில் நேற்றிரவு மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால்
அப்பகுதி மக்கள் பீதிய டைந்த நிலையில் தங்க ளது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். நேற்றிரவு 3.9 ரிச்டர் அளவு பூமி அதிர்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிக்கிம் மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட 6.8 ரிச்டர் அளவிலான பெரும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் வட மாநிலங்கள், கிழக்கு மாநிலங்கள், நேபாளம், பூட்டான் உட்பட்ட பகுதிகளில் இதுவரை சுமார் 116 பேர் உயிரிழந் துள்ளனர். இதில் சிக்கிம் மாநிலத்தில் மாத்திரம் 78 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தப் பாரிய பூமி அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகள் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றபோதும் பெரிதும் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண உதவிகளுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். இதேவேளை தொடர் மழையும், நிலச்சரிவுகளும் நிவாரணப் பணிகளில் பெரும் தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பூமி அதிர்ச்சியினால் பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணியே இன்னும் முடிவடையாத நிலையில் நேற்று சீன எல்லையையொட்டிய லாசுங்கில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட மையும் குறிப்பிடத்தக்கது. இந்தவெள்ளப்பெருக்கில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிக்கிம் மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட 6.8 ரிச்டர் அளவிலான பெரும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் வட மாநிலங்கள், கிழக்கு மாநிலங்கள், நேபாளம், பூட்டான் உட்பட்ட பகுதிகளில் இதுவரை சுமார் 116 பேர் உயிரிழந் துள்ளனர். இதில் சிக்கிம் மாநிலத்தில் மாத்திரம் 78 பேர் உயிரிழந்துள்ளனர்.பாரிய நிலநடுக்கத்தால் பெரும் அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலை யிலுள்ள சிக்கிம் மாநிலத்தில் நேற்றிரவு மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பீதிய டைந்த நிலையில் தங்க ளது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். நேற்றிரவு 3.9 ரிச்டர் அளவு பூமி அதிர்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இந்தப் பாரிய பூமி அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகள் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றபோதும் பெரிதும் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண உதவிகளுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். இதேவேளை தொடர் மழையும், நிலச்சரிவுகளும் நிவாரணப் பணிகளில் பெரும் தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பூமி அதிர்ச்சியினால் பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணியே இன்னும் முடிவடையாத நிலையில் நேற்று சீன எல்லையையொட்டிய லாசுங்கில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட மையும் குறிப்பிடத்தக்கது. இந்தவெள்ளப்பெருக்கில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment