Tuesday, September 27, 2011

வல்லிபுர ஆழ்வார் ஆலய கொடியேற்றம் இன்று!!

வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயில் வருடாந்த பெருந்திருவிழா இன்று முற்பகல் 10 மணிக்கு கொடியேற்றத்துடன்


ஆரம்பமாகின்றது.17 தினங்கள் இடம்பெறும் பெருந் திருவிழாவில் கொடியேற்றம் தொடக் கம் ஆறாம் திருவிழா வரை சுவாமி உள் வீதி உலாவருவார். ஏழாம் திருவிழா தொடக்கம் 17ஆம் திருவிழா வரை சுவாமி வெளிவீதி உலா வந்து பக்தர் களுக்கு காட்சி வழங்குவார்.
3 ஆம் திகதி திங்கட்கிழமை குருக் கட்டு விநாயகர் தரிசனம்இ 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெண்ணெய்த் திருவிழாஇ 5 ஆம் திகதி புதன்கிழமை துகில் திருவிழாஇ 6 ஆம் திகதி வியாழக் கிழமை பாம்புத் திருவிழாஇ 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹம்சன் போர்த்திரு விழாஇ 8ஆம் திகதி சனிக்கிழமை வேட் டைத்திருவிழாஇ 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சப்பரத்திருவிழாஇ 10 ஆம் திகதி திங்கட்கிழமை தேர்த்திருவிழாஇ 11 ஆம் திகதி செவ்வாய்கிழமை சமுத் திரத் தீர்த்தத்திருவிழாஇ 12 ஆம் திகதி புதன்கிழமை கேணித் தீர்த்தத் திரு விழா ஆகிய திருவிழாக்கள் இடம் பெறும்.
தினமும் பகல் திருவிழா காலை 8 மணிக்கும் இர வுத் திருவிழா மாலை 4.30 மணிக் கும் ஆரம்பமாகும். வடக்கு வீதியில் சுவாமி வீதி உலா வரும் போது கற் கோவளம் அற நெறிப்பாடசாலை மாணவர்களின் நிகழ்வு அந்நாள் திருவிழாக் கருத் தினைச் சித் திரிக்கும் முறையில் நடைபெறும். திருவிழாக் காலங்களில் பெரியாழ் வார் ஆச்சிரமமடம்இ லக்சுமி நாரா யணாமடம்இ பரந்தாமன் மடம் ஆகிய வற்றில் அன்னதானத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருவிழாவை முன்னிட்டு விசேட பஸ்சேவைகள் ஒழுங்கு செய்யப் பட்டுள்ளன. எமது சமயக் கோட்பாடுகளுக்கும் கலாசாரத்துக்கும் அமைவாக உடை களை அணிந்து பெறுமதியான தங்க ஆபரணங்கள் அணிவதைத் தவிர்த்து பெருந்திருவிழாவில் கலந்து கொண்டு வல்லிபுர மாயவ னின் அருளைப் பெற்றுக் கொள்ளு மாறு அறங்காவலர் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

0 comments:

Post a Comment