Wednesday, August 27, 2014

மேலாடையின்றி செல்வதற்கான ஆரப்பாட்டம்-கனடா - மொன்றியலில்...

கனடா - மோன்றியலில் மேலாடை அற்ற வருடாந்த ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. மொன்றியல் மவுன்ட்-றோயல் பார்க்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர். இந்நிகழ்வு அமெரிக்காவில் தோற்றுவிக்கப்பட்ட ஒரு பாரிய சர்வதேச இயக்கத்தின் அம்சமாகும். இந்த இயக்கம் ஆண் பெண் இருபாலாருக்கும் சமஉரிமை கோரி வாதாடுகின்றது. இந்த வாதாட்டத்தில் பொது இடங்களில் மேலாடை இன்றி செல்வதும் அடங்குகின்றது. சர்வதேசரீதியில் இந்த வருடம் 7-வது ஆண்டாக இடம்பெறுகின்றதுபெண்களிற்கு சகல இடங்களிலும் ஆண்களிற்கு சமமான அரசியலமைப்பு உரிமைகள் கிடைக்கவேண்டும் என்றும் அவர்கள் தங்கள் மார்புகளை மறைக்காத காரணத்திற்காக கைது செய்யப்படுவதோ அல்லது அவமானப்படுத்தப்படுவதோ தவிர்க்கப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்ட அமைப்பாளர்கள் கூறுகின்றனர். கனடா ஒரு சுதந்திரமான நாடாக இருக்க வேண்டும். சகல சுதந்திரங்களும் சட்டத்தால் பாதுகாக்கப்பட வேண்டும்.இந்த நிகழ்வு சம உரிமைகள் சம்பந்தப்பட்டது மட்டுமன்றி நிர்வாணம் மற்றும் பாலியல் இரண்டிற்கும் இடையிலான வேறு பாட்டை கற்றறிதலும் ஆகும். எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கதிர்காமத்திலிருந்து இந்தியாவிற்கு புகையிரதம்...

கதிர்காமத்தில் புகையிரத டிக்கெட் வாங்கி இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களுக்கு செல்லும் காலம் மிகவிரைவில் உதயமாகும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா புதன்கிழமை (27) தெரிவித்தார்.


அச்சுவேலி கைத்தொழில் பேட்டை அங்குரார்ப்பண நிகழ்வு புதன்கிழமை (27) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு இந்திய அரசாங்கம் பல உதவிகளைச் செய்துள்ளது. இந்தக் கைத்தொழில்பேட்டை புனரமைப்பு செய்யப்பட்டதால், உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இங்கு முதலீடுகளைச் செய்வார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இக்கைத்தொழில்பேட்டை உதவும். இந்த கைத்தொழிற்பேட்டையால் உள்ளூர் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கின்றோம். 

இந்தக் கைத்தொழிற்பேட்டை முழுமையாக பூர்த்தி அடைந்ததும், 2 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்புக்களும் மறைமுகமாக 10 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும்.

வடமாகாணத்திற்கான புகையிரத சேவைக்கான புனரமைப்பு வேலைகளையும் இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அப்பணிகள் முடிவடைந்து அடுத்த மாதமளவில் புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதனூடாகவும் இக்கைத்தொழில் பேட்டை விருத்தி அடையும். 

இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்புடன் மிகப்பாரிய செயற்றிட்டங்களை இலங்கையில் மேற்கொண்டு வருகின்றது.

துரையப்பா விளையாட்டரங்கு புனரமைப்புக்கான அடிக்கல் புதன்கிழமை (27) நாட்டப்பட்டுள்ளது. இதற்காக இந்திய அரசாங்கம் 145 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது. இந்தப்புனரமைப்புப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையும். 

யாழ்ப்பாணத்தில் மிகச்சிறந்த முறையிலே மிகப்பெரிய கலாச்சார மண்டபம் ஒன்று இந்திய உதவித்திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்படவுள்ளது. 

இதற்கு 1.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அதன் பணிகள் பூர்த்தி அடையும்.

நாங்கள் ஒரு காலத்தை எதிர்பார்க்கின்றோம். அதாவது, கதிர்காமத்தில் ஒரு புகையிரத டிக்கெட் ஒன்றை வாங்கிக்கொண்டு இந்த நாட்டுக்குள் உள்ள அனைத்து இடங்களுக்கு மட்டுமல்ல இந்தியாவின் சில முக்கிய நகரங்களுக்கு பயணிப்பதற்கான காலம் உதயம் ஆகும் என்பதாகும்.


இந்தியாவின் புதிய அரசாங்கமான பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அரசாங்கமும் தொடர்ந்து இலங்கைக்கு உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது என்பதையும் மகிழ்வுடன் இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் எனத் தெரிவித்தார்.

பலாத்காரங்களைத் தடுக்கக் கூடிய ஜீன்ஸ் ஒன்றை தயாரித்து இந்தியப் பெண்கள் சாதனை...


இந்தியாவில் அடிக்கடி கற்பழிப்புகள் இடம்பெற்றுவவதை நாம் செய்திகள் ஊடாக அறிந்து வருகிறோம். இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு 22 நிமிடத்திற்கும் ஒரு கற்பழிப்பு நடைபெற்று வருகிறது என்று அதிரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பெண்களை கட்டாய பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முடியாத ஜீன்ஸ் ஒன்றை இந்தியப் பெண்கள், தயாரித்துள்ளார்கள்.
டீக்சா(21) மற்றும் அஞ்சலி (23) ஆகிய இரண்டு இளம் பெண்களே இந்த ஜீன்ஸை தயாரித்துள்ளார்கள். குறிப்பிட்ட ஜீன்ஸை தேவையற்ற விதத்தில் களற்ற முற்பட்டால், அதனை உடனடியாக களற்ற முடியாது. அத்தோடு அதில் உள்ள பட்டன் ஒன்றை அழுத்தினால், அது ஆபத்து சமிஞ்சைகளை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பும் வகையில் இந்த ஜீன்ஸ் அமைந்துள்ளது.

இந்த வடிவமைப்பை பலர் வரவேற்றுள்ளார்கள். பொலிசார் பாவிக்கும் வாக்கிடோக்கியின் சிக்னலை பாவித்தே இது ஆபத்து சமிஞ்சைகளை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு இது அனுப்புகிறது. இந்தவகையான ஜீன்ஸை தனியாகச் செல்லும், பெண்கள் பாவிப்பது நல்லது என்று கூறப்படுகிறது.
இரவுவேளைகளில் மற்றும் தூர இடங்களுக்கு செல்லும் பெண்கள் இந்த ஜீன்ஸை நிச்சயம் அணிவார்கள் என்று எதிர்வு கூறப்படுகிறது. சட்டம் ஒழுங்கு சீர் குலைந்தால் , எப்படி எல்லாம் பொருட்களை தயாரிக்கவேண்டி உள்ளது பார்த்தீர்களா ?

அஞ்சான் படத்தில் பிகினியில் மிரளவைத்த சமந்தா--விரட்டும் ரசிகர்கள்...

சூர்யா, சமந்தா நடிப்பில் வெளியான படம் அஞ்சான். இப்படம் பலர் தரப்பிலிருந்து படத்திற்கு எதிரான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. எல்லா விமர்சனத்திலும் சமந்தாவின் கவர்ச்சியை பற்றி தான் பேச்சு.

தமிழில் இதுவரை நடித்த படங்களில் கவர்ச்சிக்கு கடிவாளம் போட்டிருந்த சமந்தா அஞ்சான் படத்திற்கு தாராளம் காட்டியிருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன் சமந்தா பிகினி உடையில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியது. கோபமான சமந்தா, "அதை யாரும் நம்ப வேண்டாம்,
நான் ஒரு போதும் அப்படி நடிக்கமாட்டேன்" என்று ட்விட் செய்தார். ஆனால் வெளியான அஞ்சான் படத்தில் பிகினியில் வருவது போல் ஒரு காட்சி வர ரசிகர்கள் தொடர்ந்து அவரிடம் ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.








100 வயது பாட்டிக்கு 120 பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள்...

 பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கொள்ளுப் பேரப்பிள்ளைகள் என 120 பேரை கண்ட பெண்மணி ஒருவர் பற்றிய செய்தி பொலன்நறுவை பிரதேசத்தில் இருந்து கிடைத்துள்ளது.
இந்த பெண்மணி ஹிங்குரக்கொட ஹத்தமுனகொட்டுவேல பிரதேசத்தில் வசித்து வருகிறார். 100 வயதாகும் இந்தபெண்மணிக்கு 11 பிள்ளைகள்.
இவரது மூத்த மகனுக்கு 81 வயது. டி.ஏ. கருணாவதி என்ற இந்த பெண்மணியின் கணவர் 41 வருடங்களுக்கு முன்னர் காலமானார்.
100 வயதாகும் கருணாவதி சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.







Saturday, August 23, 2014

நல்லூர் கந்தனுக்கு தேர் திருவிழா. (படங்கள்-வீடியோ இணைப்பு)

நல்லூர் கந்தன் ஆலயத்தில் இன்று(23-08-2014) தேர் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்லாயிரக் கணக்கான மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் நல்லூர் கந்தனை தரிசித்து நல்லூர் கந்தனின் அருளை வேண்டுவதற்காக இங்கு வந்திருந்தனர்.