Thursday, August 21, 2014

14 வயதுச் சிறுமியை 17 வயதுச் சிறுவன் பெற்றோரின் ஆதரவுடன் கா்ப்பமாக்கினான்...

யாழ்.துன்னாலை தங்குச்சம்பாட்டிப் பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் அதேயிடத்தைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவனை சந்தேகத்தின் பேரில் இன்று வியாழக்கிழமை (21) கைது செய்ததாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பொலிஸார் மேலும் கூறுகையில், 


சிறுமியினுடைய பெற்றோர்களின் அனுமதியுடன், மேற்படி சிறுவன், சிறுமியுடன் வாழ்ந்து வந்துள்ளான். இதனால், சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். 

இந்நிலையில், சிறுமி கர்ப்பவதிகள் சிகிச்சையகத்திற்குச் சென்று சிகிச்சை பெறும் போது, சிறுமி 14 வயதுடையவர் என்று அடையாளம் கண்டுகொண்ட குடும்பலநல உத்தியோகத்தர், கரவெட்டி சுகாதார வைத்தியதிகாரிக்கு இது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து, சுகாதார வைத்தியதிகாரி, கரவெட்டிப் பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரியின் கவனத்திற்குக் இச்சம்வம் குறித்து தெரியப்படுத்தியுள்ளார்.

விபரங்களை சிறுவர் நன்னடத்தை அதிகாரி புதன்கிழமை (20) நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த சிறுமி புதன்கிழமை (20) கைது செய்யப்பட்டதுடன், சிறுவன் வியாழக்கிழமை (21) காலை கைது செய்யப்பட்டார்.

இருவரையும் யாழ். சிறுவர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment