மைக்கேல் ஜாக்சன் தன்னை செக்ஸ் உறவுக்காக அழைக்க சில சங்கேத வார்த்தை மற்றும் சைகைகளை பயன்படுத்தி வந்ததாக அவருடன் நெருங்கிய பழகியவரும் அவருடன் பெப்சி விளம்பரத்தில் நடித்தவருமான James Safechuck என்பவர் திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை தற்போது தெரிவித்துள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு பிரபல பாப் பாடகர் மைக்கேல்ஜாக்சன் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டதால் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. அவர் மரணம் அடைந்தாலும், அவரை பற்றிய சர்ச்சைகள் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
மைக்கேல் ஜாக்சனின் நெருங்கிய நண்பராக கருதப்பட்ட James Safechuck தற்போது அமெரிக்க நீதிமன்றத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அதில் மைகேல் ஜாக்சன் தன்னை 100 முறைகளுக்கு மேல் பலாத்காரமாக பாலியல் உறவு கொண்டுள்ளார் என்றும், ஒவ்வொரு முறையும் தன்னை செக்ஸ் உறவுக்காக அழைக்கும்போது சங்கேத வார்த்தைகள் அல்லது சைகைகளை பயன்படுத்தி தன்னை அழைப்பார் என்றும் கூறியுள்ளர்.
தனது இரண்டு விரல்களை உள்ளங்கையில் வைத்து தேய்த்தால் உடனே அவருடன் செக்ஸ் உறவுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அர்த்தம். அதுபோல பத்துக்கும் மேற்பட்ட சங்கேத வார்த்தைகளை அவர் செக்ஸ் உறவுக்காக பயன்படுத்தி வந்ததாகவும் கூறினார். இவரது புகார் மனு வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
0 comments:
Post a Comment