Friday, August 8, 2014

அதிக விலையில் அரிசி விற்பனை: யாழில் மக்கள் விசனம்...

யாழில் உள்ள வர்த்தக நிலையங்களில் அதிக விலையில் அரிசி விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அரிசிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ். பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினர் நேற்று தெரிவித்தனர்.
மேற்படி முறைப்பாடு தொடர்பாக யாழ்.மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகத்தின் ஆலோசனைக்கு அமைவாக வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சபையினர் தெரிவித்தனர்.
யாழ். மாவட்ட அரச அதிபரின் உத்தரவின் படி சம்பா அரிசி 77 ரூபாய் சிவப்பு நாடு 66 ரூபாய் வெள்ளைநாடு 68 ரூபாய் சிவப்பு பச்சை 60 ரூபாய் வெள்ளை பச்சை 66 ரூபாய் என்ற விலை அடிப்படையில் விற்பனை செய்யப்படவேண்டும்.
பல வகை சிவப்பு நாடு அரிசி இருப்பதனால் அவற்றிற்கு கட்டுப்பாடு விதிப்பதில் தாமதம் இருக்கின்றது. அது தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வரும் வரையில் பல வகையான சிவப்பு நாடு அரிசிகளினை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் கட்டாயமாக 66 ரூபாய் சிவப்பு நாடு அரிசியினையும் விற்பனை செய்ய வேண்டும் என அதிகார சபையினர் மேலும் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment