பொதுவாக பெண்கள் என்றால் தம்மை அலங்காரம் செய்வதிலே முக்கால்வாசி காலத்தை கழிப்பர். என்றும் தாம் எடுப்பாக இருக்க வேண்டும் என்றே எண்ணுவர். ஆனால் இங்கு ஒரு விசித்திர பெண்மணி தன்னை எவ்வாறு அழகு படுத்துகின்றார் என்பதை வாசகர்களாகிய உங்களுக்கு நிகழ்வு இணையத்தளம் காட்டப் போகின்றது.
பிரேசில் நாட்டில் பிறந்து தற்போது பிரிதானியாவில் வாழும் எலைன் டேவிட்சன் (Elaine Davidson) என்னும் பெண்மணி தனது உடல் முழுவதும் பச்சை குத்தி, பல ஆபரணங்களை பூட்டி தன்னை அழகுபடுத்திக் கொள்ள உடல் முழுவதும் மொத்தமாக 4225 துளைகளை ஏற்படுத்தியுள்ளார். இதில் பெரும்பான்மையானவை தனது முகத்திலே குத்தியுள்ளார்.பார்ப்பதற்கே பயங்கரமாக தெரிந்தாலும் இது ஓர் உலக கின்னஸ் சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது












0 comments:
Post a Comment