Saturday, August 23, 2014

இலங்கையில் எபோலா வைரஸால் பெண்ணொருவர் மரணம்...???

கண்டியைச் சேர்ந்த பெண்ணொருவர் எபோலா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.  கண்டி, ரிக்கிலகஸ் கடையைச் சேர்ந்த பெண்ணொருவர் இந்தியாவுக்குச் சென்று திரும்பிய நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், உலகை பீதியடைய வைத்துக் கொண்டிருக்கும் எபோலா வைரஸ் இவருக்கு தொற்றியிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. 
 இதன் காரணமாக அப்பெண்ணின் சடலத்திலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இவருக்கு எபோலா வைரஸ் தொற்றியிருக்கின்றதா என்பது தொடர்பில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை, 
அவருடைய சடலம் தாங்கிய சவப்பெட்டி சீல் வைக்கப்பட்ட நிலையில் சுமார் எட்டு அடி குழித் தோண்டி புதைக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment