Friday, January 20, 2012

கர்மாவில் நடிக்க ரெடியா...? கமான்யா!

க்ரியேடிவ் கிரிமினல் என்னும் புதிய பட நிறுவனம் கர்மா என்ற பெயரில் ஒரு புதிய தமிழ் படத்தை தயாரிக்கிறது. இப்படத்தை தயாரிப்பதுடன்,
இயக்கவும் செய்கிறார் அர்விந்த் ராமலிங்கம். இவர் பல விருதுகள் பெற்ற விளம்பர படங்களை இயக்கிய விளம்பர பட உலக வல்லுநர் ஆவார்!

இவர் கர்மா படத்தின் கதையை சில முன்னணி நடிகர்கள் மற்றும் கதைக்கு ஏற்ற சில நடிகர்களிடமும் விவரித்தபோது, இப்படத்தின் கதைக்களமும், நாயகனின் பாத்திரமும் அவர்களை வெகுவாக கவர்ந்த போதிலும், அந்த பாத்திரத்தில் உள்ள நெகடிவ் தன்மை அவர்களை நடிக்க தயங்க வைத்துள்ளது. அதன் விளைவு இயக்குநர்-தயாரிப்பாளர் அர்விந்த் ராமலிங்கத்தை புதுமுகங்களை தேர்வு செய்ய தூண்டி விட்டிருக்கிறது.

அதன்படி புதுமுக தேர்வை சாதாரணமாக சம்பிரதாயமாக செய்யாமல் www.karma-movie.com என்னும் தனது படப்பெயரிலான இணையதளத்தில் அதற்கான வழிமுறைகளை பட்டியலிட்டு உள்ளார். கர்மா படத்தில் நடிக்க தைரியமுள்ள புதுமுக நடிகர்-நடிகைகள் தங்களின் புகைப்படத்தையும், வீடியோ சாம்பிள்களையும் karmamoviecasting@gmail.com என்னும் கர்மா பட இணையதள முகவரிக்கு வரும் ஜனவரி 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.

முதல்சுற்றில் தேர்வு பெறும் நட்சத்திரங்களை பேஸ்புக் இணையதளத்தில் அறிவிக்க உள்ளதுடன், அந்த பக்கத்திற்கு யார் வேண்டுமானாலும் சென்று தங்களது வாக்கை எந்த ஒரு நடிகர், நடிகைக்கும் அளிக்கும் வகையில் அந்த பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளதாம்! அதிக வாக்குள் பெற்ற நடிகர், நடிகைகள் நேரடியாக ஆடிடேஷனுக்கு அழைக்கப்படுவார்கள்.
அவர்களில் சிறந்த நடிகர், நடிகையை இயக்குநரே நேரடியாக தேர்வு செய்கிறார். அந்த புதுமுகங்களுடன் கர்மா படத்தின் படப்பிடிப்பை பிப்ரவரியில் தொடங்கி மே மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார் இப்படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான அர்விந்த ராமலிங்கம்!

ஒன்று கூடிய எதிரிகள்! அதிர்ந்த அமெரிக்கா....

எதிரிகள் பிரிந்து இருந்தால் பரவாயில்லை.. ஒன்று கூடினால் என்ன நடக்கும்? பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்...
ஆம், கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் முன்னாள் கியூப அதிபரான பிடல் காஸ்ட்ரோவும், அமெரிக்கர்களின் புதிய எதிரி என வர்ணிக்கப்படும் ஈரான் அதிபர் முகமட் அஹமது நிஜாதுக்கும் இடையிலான சந்திப்பே அது.

அமெரிக்காவின் இரண்டு பெரிய பகைவர்களின் சந்திப்பு அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இரண்டு சிங்கங்களின் சந்திப்பும் இந்த வாரம் கரிபியன் நாட்டில் தான் இடம்பெற்றுள்ளதுஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ஈரானில் அணு ஆயுத திட்டங்களை முன்னெடுத்து வரும் ஈரான் அதிபர் முகமட் அஹமது நிஜாத் கியூப முன்னாள் அதிபரான பிடல் காஸ்ரோ உடனான சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,

இரண்டு மணி நேரங்கள் இடம்பெற்ற சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.ஈரான் மற்றும் கியூபா உடனான நட்புறவு ஆரம்பத்திலிருந்து சிறப்பாக உள்ளன.உண்மையில் நாங்கள் ஒரே நோக்கத்துக்காக தொடர்ந்தும் போராடுவோம். நாங்கள் ஏராளமான விடயங்கள் பற்றி கலந்துரையாடினோம். சந்திப்பு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். எப்போதும் அதே நட்புணர்வுடன் இருப்போம்.கியூபாவின் தற்போதைய அதிபரான பிடல் கஸ்ரோவின் சகோதரரான ராகுல் காஸ்ரோவையும் ஈரான் அதிபர் சந்தித்து கலந்துரையாடினார்.இவர்களின் சந்திப்பு அமெரிக்காவை கவலை கொள்ள வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 





அப்பாவின் செல்வாக்கை நாங்கள் தவறாக பயன்படுத்தவில்லை - வதந்திகளுக்கு ஐஸ்வர்யா மறுப்பு!

ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷை வைத்து 3 என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கொலவெறி... பாடல் உலகப் புகழ் பெற்றுவிட்டது. அதே நேரம், இந்தப்
படத்தில் ரஜினி நடிப்பதாகவும், இசை வெளியீட்டுக்கு வருவார்
என்றெல்லாம் யூகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியாகின.
ஆனால் ரஜினி நடிக்கவுமில்லை, அந்தப் படம் தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவுமில்லை. இந்தப் படம் குறித்து அவர் வெளிப்படையாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு பக்கம் இளையமகள் சௌந்தர்யா, அப்பா ரஜினியை வைத்து படங்கள் தயாரிப்பதில் முனைப்பு காட்டி வருகிறார். ஆரம்பத்தில் ரஜினியை வைத்து சுல்தான் என்ற படத்தை ஆரம்பித்தார். அந்தப் படம் இப்போது கைவிடப்பட்டு, கோச்சடையான் படத்துக்கான ஆயத்த வேலைகள் நடந்து வருகின்றன.
இடையில் தொடங்கப்பட்ட ராணா படம், ரஜினி உடல்நிலை காரணமாக தள்ளிப் போடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு இணை தயாரிப்பாளர், தொழில்நுட்ப இயக்குநர் சௌந்தர்யாதான்.
இரண்டு மகள்களும் அப்பாவின் சூப்பர் ஸ்டார் இமேஜ் மற்றும் புகழை வைத்து முடிந்தவரை விளம்பரம் தேடிக் கொள்வதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. மேலும் இருவருக்கும் இடையே இந்த விஷயத்தில் பெரும் போட்டியே நடப்பதாகவும், அதில் ஐஸ்வர்யாவின் கை ஓங்கியிருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
இதற்கு ஐஸ்வர்யா மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "ரஜினி பெயரை நானும், என் தங்கை சௌந்தர்யாவும் விளம்பரத்துக்கு பயன்படுத்துவதாகவும், எங்கள் இருவர் இடையே போட்டி நிலவுவதாகவும் வெளியான செய்தி வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
தங்கைக்கும் எனக்கும் மோதல் வர அவசியம் இல்லை. அவர் அனிமேஷன் படத்தை இயக்குகிறார். நான் சினிமா படமொன்றை இயக்கி வருகிறேன். எங்களுக்குள் எப்படி போட்டி வரும். சூர்யாவும் கார்த்தியும் ஒரே துறையில் உள்ளனர். அவர்களுக்குள் போட்டியா இருக்கிறது. என் கணவர் தனுஷ் கூட சூப்பர் ஸ்டார் ரஜினி பெயரை விளம்பரத்துக்காக பயன்படுத்தியது இல்லை. எங்களுக்கு திருமணமாகி 8 வருடம் ஆகிறது. இந்த எட்டு ஆண்டுகளில் எப்போதாவது அப்பா பெயரை எங்கள் சுய விளம்பரத்துக்காக பயன்படுத்தினோம் என்று சொல்ல முடியுமா...
தனுஷின் எந்த பட விழாவிலும் அப்பா பங்கேற்றது இல்லை. அப்பா உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது மட்டும் ஒரு பொறுப்புள்ள மருமகனாக இருந்து அவரது உடல்நிலை பற்றிய விவரங்களை ரசிகர்களுக்கு தெரிவித்தார். இதில் எங்களுக்கு என்ன விளம்பரம்? செய்திகளை தார்மீக பொறுப்போடு வெளியிட வேண்டும்.
எங்களைப் பற்றிய செய்தியை என்னிடமோ தனுஷிடமோ தொடர்பு கொண்டு விளக்கம் பெற்று வெளியிடலாமே... நாங்கள் தொடர்பு கொள்ள முடியாத தூரத்தில் இல்லையே. யார் கேட்டாலும் விளக்கம் சொல்கிறோமே. ஆனால் எதையுமே கேட்காமல் இஷ்டப்படி எழுதுவது சரியா?," என்று கேட்டுள்ளார்.

வன்னிப் போரை செய்மதியில் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்கா, இந்தியா