Sunday, April 1, 2012

பல்துலக்குவதன் மூலம் இதய நோயை தடுக்கலாம்


பற்களை நாள்தோறும் சரியான முறையில் துலக்குவதன் மூலம் இதயத்தில் ஏற்படும் பக்ரீரியா தொற்றை தடுக்கமுடியும் என அயர்லாந்தின் றோயல் கல்லூரியும், பிரித்தானியாவின் பிறிஸ்டல் பல்கலைக்கழகமும்
இணைந்து நடாத்திய ஆய்விலிருந்து தெரியவந்திருக்கின்றது.
அதாவது உணவுகளை உட்கொண்ட பின்னர் சரியான முறையில் வாய், பற்களை சுத்தம் செய்யத்தவறுகின்றமையால் நோய்த்தாக்கத்தை ஏற்படுத்தும் Streptococcus gordonii பக்ரீரியாக்களின் வளர்ச்சி உண்டாகின்றது.
பின் இப் பக்ரீரியாக்கள் குருதியில் கலந்து இதயத்தை அடைவதன் மூலம் இதயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதனால் இதயம் பாதிக்கப்படுகின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இப் பக்ரீரியாக்கள் மனிதனின் நிர்ப்பீடனத் தொகுதியை தாக்குவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கின்றது என தெரியவந்துள்ளது

வேப்பம் பூவின் மருத்துவ குணங்கள்

வாயுத்தொல்லை,​ ஏப்பம் அதிகமாக வருதல்,பசியின்மை போன்றவைகளுக்கு வேப்ப மரத்தின் பூக்களை மென்று தின்பார்கள்.
5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும்.
கல்லீரலை நன்கு இயக்குவிக்கும். 3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், நரம்பு இசிவு, குடல் புழுக்கள் போன்ற தொந்தரவு நீங்கும்.
வேப்பம் பூவில் துவையல், ரசம் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த குன்மம் தீரும். காயை உலர்த்திய பொடி வெந்நீரில் கொடுக்க மலேரியாக் காச்சல், மண்டையிடி குணமாகும்.
வேப்பம்பழ சர்பத் கொடுத்து வர சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும். வேப்பம் கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து அரைத்துப் புரையோடிய புண்கள் மீது பூசி வரக் குணம் கிடைக்கும். குஷ்ட நோயாளிகளின் புண்களையும் குணப்படுத்தும்.
நரம்புகளாலுண்டாகும் இழப்பு, சீதளம் இவைகளைப் போக்க உந்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுத்து வேப்பெண்ணெயை வலி மற்றும் ரணங்களுக்குத் தடவி வரக் குணம் கிடைக்கும்.
வேப்பம்பட்டை நாவல்மரப்பட்டை வகைக்கு 150 கிராம் எடுத்து இதனுடன் 50 கிராம் மிளகு 50 கிராம் சீமைக்காசிக்கட்டி இவற்றை நன்றாக உலர்த்தி இடித்து வைத்துக் கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தூளைப்போட்டுக் காய்ச்சி எடுத்த கசாயத்தைத் தினம் இரு வேளை கொடுத்து வந்தால் நாட்பட்ட பேதி, கிராணி, சீதபேதி குணமாகும்.

புளுடூத் என பெயர் வரக் காரணம் என்ன?

புளுடூத் தொழில்நுட்பம் செயல்படும் விதத்திற்கும், இந்த பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நார்டிக் நாடுகள் என அழைக்கப்படும் டென்மார்க், ஸ்வீடன், நோர்வே மற்றும் பின்லாந்து
நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கினார்கள்.
இவர்களுக்கு சரித்திரத்தில் புகழ் பெற்ற டென்மார்க் அரசர் மீது அசாத்திய மரியாதையும் பிரியமும் இருந்தது.
அந்த மன்னர் பெயர் ஹெரால்ட் புளுடூத். அவரின் நினைவாகவே இந்த தொழில் நுட்பத்திற்கு புளுடூத் எனப் பெயரிட்டனர்.
இவர் 900 ஆண்டில் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும், நோர்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்தார்.
பின்னர் கிறித்தவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார்.
986ல் தன் மகனுடன் ஏற்பட்ட போரில் மரணமடைந்தார். நாடுகளை இணைத்தது, கிறித்தவ மதத்தினை அறிமுகப்படுத்தியது, நினைவுச் சின்னம் அமைத்தது போன்ற செயல்களால் புகழடைந்தார்.

பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன?

மூக்குத்தி குத்திக் கொள்வதால் பெண்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதிகம். இதனால் பண்டைய காலத்திலேயே மூக்கு குத்திக் கொள்ளும் வழக்கம் உருவானது. மூக்கு குத்துவதினாலும் காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன.
உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால் அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும்.
அதுமட்டுமல்லாமல் மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப்படுகிறது.
மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் மனத்தடுமாற்றம் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.

Windows 8ன் மீடியா பிளேயருக்கு உரிய Codec பொதிகளை தரவிறக்கம் செய்வதற்கு

விண்டோஸ் மீடியா பிளேயரானது விண்டோஸ் இயங்குதளத்துடன் கூடிய ஒரு பிளேயர் ஆகும். இதில் mkv, flv போன்ற கோப்பு வகைகள் இயங்குவதில்லை.
எனவே இவ்வகையான கோப்புக்களை இயங்கச் செய்வதற்கு பிரத்தியேகமான Codec பொதிகளை தரவிறக்கம் செய்து நிறுவ வேண்டியிருக்கும் அல்லது எல்லா வகையான Codec பொதிகளும் இயங்கக்கூடிய VLC, Real Player போன்றவற்றை நிறுவ வேண்டி ஏற்படும்.
தற்போது இப்பிரச்சினையானது விண்டோஸ் 8 இயங்குதளத்திலும் காணப்படுகின்றது. Codec பொதிகளை உருவாக்குவதில் செய்வதில் சிறந்து விளங்கும் நிறுவனமான Shark007 புதிய Codec பொதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

உங்களது புகைப்படங்களுக்கு விதவிதமான எபெக்ட்ஸ்களை கொடுக்க

பிரபல போட்டோ எடிட்டிங் இணையத்தளமான பிக்னிக் இணையத்தளம் வருகிற 19ம் திகதியுடன் மூடப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கூகுள் பிளசில் உள்ள உங்களது புகைப்படங்களுக்கு விதவிதமான எபெக்ட்ஸ்களை கொடுக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்:
1. புகைப்படங்களில் தேவையான பகுதியை மட்டும் வெட்டி எடுக்க CROP வசதி.
2. தலைகீழாக உள்ள புகைப்படங்களை சரியாக திருப்பி கொள்ள Rotate வசதி.
3. படத்தின் நிறம் மற்றும் தோற்றத்தை மாற்ற Exposure வசதி.
4. புகைப்படங்களின் அளவை குறைக்க Resize வசதி.
5. 20 க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான எபெக்ட்ஸ்களை கொடுத்து கொள்ளலாம்.
6. உங்கள் புகைப்படங்களுக்கு Speech Bubbles, Masks, Sports மட்டும் பல்வேறு வசதிகளை சேர்க்க கூடிய Decorate வசதி.
7. புகைப்படங்களில் உங்களுக்கு விருப்பமான எழுத்துக்களை சேர்க்க Text வசதி என்று எல்லாமே நிறைந்து காணப்படுகிறது.
வழிமுறை:
1. முதலில் உங்கள் கூகுள் பிளஸ் கணக்கில் நுழைந்து Photos பகுதியை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
2. போட்டோ பக்கம் திறந்ததும் Effects சேர்க்க விரும்பும் போட்டோவை க்ளிக் செய்து ஓபன் செய்யுங்கள்.
3. Lightbox Mode-ல் உங்கள் போட்டோ திறக்கும் அதில் உள்ள Creative Kit என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.
4. அடுத்து பிக்னிக் போட்டோ எடிட்டர் ஓபன் ஆகும், அடுத்து போட்டோ எடிட்டர் ஓபன் ஆகும். அதில் உங்கள் புகைப்படங்களுக்கு விதவிதமான எபெக்ட் கொடுத்து கொள்ளலாம்.
5. அழகுபடுத்திய புகைப்படங்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் அல்லது உங்கள் கணணியில் சேமித்து கொள்ளலாம்.