Friday, August 8, 2014

அதிக விலையில் அரிசி விற்பனை: யாழில் மக்கள் விசனம்...

யாழில் உள்ள வர்த்தக நிலையங்களில் அதிக விலையில் அரிசி விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அரிசிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ். பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினர் நேற்று தெரிவித்தனர்.
மேற்படி முறைப்பாடு தொடர்பாக யாழ்.மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகத்தின் ஆலோசனைக்கு அமைவாக வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சபையினர் தெரிவித்தனர்.
யாழ். மாவட்ட அரச அதிபரின் உத்தரவின் படி சம்பா அரிசி 77 ரூபாய் சிவப்பு நாடு 66 ரூபாய் வெள்ளைநாடு 68 ரூபாய் சிவப்பு பச்சை 60 ரூபாய் வெள்ளை பச்சை 66 ரூபாய் என்ற விலை அடிப்படையில் விற்பனை செய்யப்படவேண்டும்.
பல வகை சிவப்பு நாடு அரிசி இருப்பதனால் அவற்றிற்கு கட்டுப்பாடு விதிப்பதில் தாமதம் இருக்கின்றது. அது தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வரும் வரையில் பல வகையான சிவப்பு நாடு அரிசிகளினை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் கட்டாயமாக 66 ரூபாய் சிவப்பு நாடு அரிசியினையும் விற்பனை செய்ய வேண்டும் என அதிகார சபையினர் மேலும் தெரிவித்தனர்.

பஸ்ஸின் சில்லில் சிக்கிய மோட்டார் சைக்கிள்.யாழ். வின்சர் சந்தியில் சம்பவம் ....

யாழ். வின்சர் சந்தியில் பஸ்ஸொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சிறுகாயங்களுடன் தப்பியுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.
வியாழக்கிழமை (07) மதியம் இடம்பெற்ற இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்த நிலையில் பேருந்துக்கு அடியில் இருந்து எடுக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
 



 

Sunday, August 3, 2014

அநியாயமாக உயிரைப் பறித்த தொலைபேசிக் காதல்! யாழ் குருநகரைச் சேர்ந்த இளைஞர் மரணம்...

தொலைபேசி அழைப்பு மூலமாக அறிமுகமான முன்பின் அறியாத பெண்ணைக் காதலித்தார் எனக் கூறப்படும் இளைஞர் ஒருவர் அந்தக் காதல் முறிவடைந்ததால் அதிக மருந்து வில்லைகளை விழுங்கி மரணமானர்.
இவ்வாறு மரணமானவர் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த றொபின்சன் ரவிராஸ் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.
இந்த விடயம் குறித்து மேலும் அறியவருவதாவது:-
தவறான தொலைபேசி அழைப்பு ஒன்றினால் குறித்த இளைஞருக்கு பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொலைபேசி வாயிலாக அறிமுகம் ஆவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ இருவரும் சந்திக்காத நிலையில் அந்தப் பெண்ணை குறித்த இளைஞர் காதலித்தார் எனக் கூறப்படுகின்றது.
தொடர்ச்சியாக அந்த இளைஞர் தனது தொலைபேசி மூலமாகவே காதலை வளர்த்து வந்த நிலையில் குறித்த பெண் அந்த இளைஞருடனான உறவை திடீரெனத் துண்டித்தார் எனக் கூறப்படுகின்றது.
இதனால் மனமுடைந்து போன இளைஞர் தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதற்கு முன்னர் அவர் தற்கொலைக்கு முயன்றபோதும் உறவினர்கள் அவரைக் காப்பாற்றியதுடன் அவருக்கு அறிவுரைகளும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு குறித்த இளைஞர் அளவுக்கு அதிகமான மருந்து வில்லைகளை உட்கொண்டுள்ளார். அவரது நடவடிக்கையில் மாற்றத்தை அவதானித்த உறவினர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவரை சேர்ப்பித்தனர்.
எனினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அந்த இளைஞர் நேற்றுக் காலை வைத்தியசாலையிலேயே உயிரிழந்தார் எனக் கூறப்படுகின்றது.

ஜனவரி மாதம் பாப்பாண்டவர் இலங்கைக்கு விஜயம்.மன்னார் மடுவுக்கும் வருமாறு போப்புக்கு அழைப்பு...

மன்னார் மடு தேவாலயத்திற்கு விஜயம் செய்யமாறு பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் பாப்பாண்டவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

எவ்வாறெனினும் பாப்பாண்டவரின் இலங்கை விஜயம் குறித்த நிகழ்ச்சி நிரல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

எதிர்வரும் நாட்களில் பாப்பாண்டவரின் இலங்கை விஜயம் குறித்த நிகழ்ச்சி நிரல்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, May 11, 2014

இன்று மே 11 அன்னையர் தினம்: இன்று அன்னையர்களுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துகள்...

இன்று அன்னையர்களை போற்றும் வகையில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்று வின் ஜப்னா[winjaffna] வாசக அன்னையர்களுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.
அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாளாக அன்னா ஜார்விஸ் அவர்களால் மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் உருவாக்கப்பட்டது; இது குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குடும்பங்களின் உறவுச் சூழல்களை மையமாகக் கொண்டது.
இது, இப்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகின்றது. அவற்றில் பல, நவீன விடுமுறை தினத்தை விட மிகவும் பழமையானது (எ.கா. ஐக்கிய இராச்சியத்தில் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்படுகின்றது). தந்தையர் தினம் தந்தைகளைப் போற்றுகின்ற விடுமுறை தினமாகும்.
விடுமுறை தினமானது இறுதியில் மிகவும் வணிக மயமாக்கப்பட்டுள்ளது. அதன் நிறுவனர் அன்னா ஜார்விஸ் உள்ளிட்ட பலரும் அதை “ஹால்மார்க் விடுமுறை தினம்” என்று கருதினர்.
அது மிகப்பேரளவிலான வணிகப் பயன்பாட்டினைக் கொண்ட ஒன்று. அன்னா தான் விடுமுறையை உருவாக்குவதற்கு உதவியதிலிருந்து மாறி, இறுதியில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த நாளானது பண்டைய கிரேக்கத்தில் அன்னை வழிபாட்டின் மரபிலிருந்து வழங்கப்பட்டதாகக் கருதினார். இது கிரேக்க கடவுளர்களின் தாயான சைபெலேக்கு நடத்தப்படும் விழாவாகும். இந்த திருவிழாவானது ஆசியா மைனரில் சமஇரவு நாள் அன்றும், ரோமில் மார்ச் ஐடஸில் இருந்து (மார்ச் 15) மார்ச் 18 வரைக்குள் கொண்டாடப்படுகின்றது.
பண்டைய ரோமன் வேறொரு விடுமுறை தினமான மேட்ரோனலியாவையும் கொண்டுள்ளது. அது ஜூனோவுக்கு அரிப்பணிக்கப்பட்டது. இருப்பினும் அன்னையர்கள் இந்த நாளில் பரிசுப்பொருட்களை வழங்கினர்.
ஐரோப்பா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றில் பல நீண்டகாலத்திய மரபுகள் இருந்தன. அங்கு குறிப்பிட்ட ஒரு ஞாயிற்றுக் கிழமையை தாய்மை மற்றும் அன்னையர்களைக் கௌரவப்படுத்த ஒதுக்கி வைத்திருந்தனர். அதுவே தாய் ஞாயிறு எனப்பட்டது.
தாய் ஞாயிறு கொண்டாட்டங்கள் ஆங்கிலிக்கர்கள் உட்பட கிறிஸ்துவப் பெரும்பான்மையுள்ள பல பகுதிகளில் கிறிஸ்துவ நாட்காட்டியின் பகுதியாகவே உள்ளன. மேலும் கத்தோலிக்க நாட்காட்டியானது அதனை லயேட்டர் ஞாயிறு என்று குறிப்பிடுகின்றது.
கன்னி மேரியையும் “மாதா தேவாலய”த்தையும் கௌரவிக்க லெண்ட்டில் நான்காவது ஞாயிறு கொண்டாடப்படுகின்றது. மரபு ரீதியாக இந்த நாளானது, அன்னைக்கு பரிசுகளை அளித்து சமைத்தல் மற்றும் சுத்தம் செய்தல் போன்ற பெண்களின் குறிப்பிட்ட மரபு ரீதியான வீட்டுவேலைகளை குடும்பத்தின் பிற உறுப்பினர்களிடம் ஒப்படைத்து விட்ட சைகையைக் கொண்டு பாராட்டுதலைக் குறிக்கின்றது.

அன்னையர் தினத்தில் இன்னமும் சிறப்பாக, பல நாடுகளில் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகின்றது.
ஜூலியா வார்டு ஹோவே அவர்களால் வழங்கப்பட்ட “அன்னையர் தின அறிவிப்பானது” அமெரிக்காவில் அன்னையர் தினத்தைக் கொண்டாட முந்தைய அழைப்புகளில் ஒன்று.
1870 ஆம் ஆண்டில் எழுத்திலான ஹோவேயின் அன்னையர் தின அறிவிப்பானது, அமெரிக்க குடியுரிமைப் போர் மற்றும் பிராங்கோ-புரூஸ்சியன் போர் ஆகியவற்றின் படுகொலைக்கான எதிர் விளைவானது.
அந்த அறிவிப்பானது, பெண்கள் அவர்கள் சார்ந்த சமுதாயங்களை அரசியல் அளவில் வடிவமைக்கும் பொறுப்பைக் கொண்டிருந்தனர் என்ற ஹோவேயின் பெண்ணிய நம்பிக்கையுடன் பின்னப்பட்டது.

வாட்ஸ்ஆப் மென்பொருளில் பேசும் வசதி அறிமுகம்; பேஸ்புக் அதிரடி அறிவிப்பு

மொபைல் தொழில்நுட்ப சேவையான வாட்ஸ்ஆப்பிற்கு 450 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். வாட்ஸ்ஆப்பின் அசுர வளர்ச்சியை கண்டு அதை பேஸ்புக் நிறுவனமே வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து ஏராளமான புதிய வசதிகளை வாட்ஸ்ஆப்பில், ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தி வருகின்றது . லைன், வைபர், டாங்கோ போன்ற மென்பொருள்களில் உள்ள பேசும் வசதி வாட்ஸ்ஆப்பில் இல்லை என்பது ஒரு குறையாகவே  வாடிக்கையாளர் மத்தியில் நிலவியது. எனவே அந்த குறையை போக்கும் விதமாக வரும் ஜூன் மாதம் முதல் வாட்ஸ்ஆப் மூலம் பேசும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. 

முதல் கட்டமாக ஆண்ட்ராய்ட், ஆப்பிள் ஐஓஎஸ் போன்களில் அறிமுகம் செய்யப்பட்டு, படிப்படியாக பிளாக்பெர்ரி, நோக்கியா, மைக்ரோசாப்ட் போன்களில் அறிமுகம் செய்யப்படும். தற்போது வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் வசதி உள்ளது. ஆனால், அந்த வசதி மூலம் ஒருவரின் தகவலைப் பெற்ற பின்னரே மற்றவர் தகவல் அனுப்ப முடியும். பேசிக்கொள்ள முடியாது.