Friday, August 8, 2014

தலிபான் வீரரின் அதிரடித் தாக்குதலில் அமெரிக்க இராணுவத் தளபதி பலி...

 ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்கள் உள்பட மற்ற வெளிநாடுகளைச் சேர்ந்த நேட்டோ படைவீரர்கள் முகாமிட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வாபஸ் ஆகிறார்கள்.
நேட்டோ படை மீது தலீபான்கள் தாக்குதல் நடத்துவதும், அதற்கு நேட்டோ வீரர்கள் பதிலடி கொடுப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
தலைநகர் காபூலில் மார்ஷ் பாஹிம் தேசிய ராணுவ பல்கலைக்கழகத்தில் ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இங்கு இன்று ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களுக்கான உடையில் வந்த வீரர் ஒருவர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்.
இந்த அதிரடி தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தின் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் தளபதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மேலும், ஜெர்மனியைச் சேர்ந்த தளபதி ஒருவர் உள்பட 14 பேர் தாக்குதலில் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து அமெரிக்காவில் ராணுவ தலைமையகமான பெண்டன் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,

இந்த தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய எதிர் கொல்லப்பட்டு விட்டார். தாக்குதல் நடத்தியவர் சிறியரக எந்திர துப்பாக்கியை பயன்படுத்தினார் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே அமெரிக்க தளபதியை சுட்டுக்கொன்றவர் ராணுவ வீரர் இல்லை, அவர் ராணுவ உடையில் வந்த தீவிரவாதி என்று ஆப்கான் ராணுவம் தெரிவித்துள்ளது.

செக்ஸ் உறவுக்கு சங்கேத வார்த்தைகள் பயன்படுத்தினாரா மைக்கேல் ஜாக்சன்? நண்பரின் அதிர்ச்சி புகார்...

மைக்கேல் ஜாக்சன் தன்னை செக்ஸ் உறவுக்காக அழைக்க சில சங்கேத வார்த்தை மற்றும் சைகைகளை பயன்படுத்தி வந்ததாக அவருடன் நெருங்கிய பழகியவரும் அவருடன் பெப்சி விளம்பரத்தில் நடித்தவருமான James Safechuck என்பவர் திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை தற்போது தெரிவித்துள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு பிரபல பாப் பாடகர் மைக்கேல்ஜாக்சன் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டதால் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. அவர் மரணம் அடைந்தாலும், அவரை பற்றிய சர்ச்சைகள் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
 
மைக்கேல் ஜாக்சனின் நெருங்கிய நண்பராக கருதப்பட்ட James Safechuck தற்போது அமெரிக்க நீதிமன்றத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அதில் மைகேல் ஜாக்சன் தன்னை 100 முறைகளுக்கு மேல் பலாத்காரமாக பாலியல் உறவு கொண்டுள்ளார் என்றும், ஒவ்வொரு முறையும் தன்னை செக்ஸ் உறவுக்காக அழைக்கும்போது சங்கேத வார்த்தைகள் அல்லது சைகைகளை பயன்படுத்தி தன்னை அழைப்பார் என்றும் கூறியுள்ளர்.
தனது இரண்டு விரல்களை உள்ளங்கையில் வைத்து தேய்த்தால் உடனே அவருடன் செக்ஸ் உறவுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அர்த்தம். அதுபோல பத்துக்கும் மேற்பட்ட சங்கேத வார்த்தைகளை அவர் செக்ஸ் உறவுக்காக பயன்படுத்தி வந்ததாகவும் கூறினார். இவரது புகார் மனு வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

அதிக விலையில் அரிசி விற்பனை: யாழில் மக்கள் விசனம்...

யாழில் உள்ள வர்த்தக நிலையங்களில் அதிக விலையில் அரிசி விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அரிசிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ். பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினர் நேற்று தெரிவித்தனர்.
மேற்படி முறைப்பாடு தொடர்பாக யாழ்.மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகத்தின் ஆலோசனைக்கு அமைவாக வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சபையினர் தெரிவித்தனர்.
யாழ். மாவட்ட அரச அதிபரின் உத்தரவின் படி சம்பா அரிசி 77 ரூபாய் சிவப்பு நாடு 66 ரூபாய் வெள்ளைநாடு 68 ரூபாய் சிவப்பு பச்சை 60 ரூபாய் வெள்ளை பச்சை 66 ரூபாய் என்ற விலை அடிப்படையில் விற்பனை செய்யப்படவேண்டும்.
பல வகை சிவப்பு நாடு அரிசி இருப்பதனால் அவற்றிற்கு கட்டுப்பாடு விதிப்பதில் தாமதம் இருக்கின்றது. அது தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வரும் வரையில் பல வகையான சிவப்பு நாடு அரிசிகளினை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் கட்டாயமாக 66 ரூபாய் சிவப்பு நாடு அரிசியினையும் விற்பனை செய்ய வேண்டும் என அதிகார சபையினர் மேலும் தெரிவித்தனர்.

பஸ்ஸின் சில்லில் சிக்கிய மோட்டார் சைக்கிள்.யாழ். வின்சர் சந்தியில் சம்பவம் ....

யாழ். வின்சர் சந்தியில் பஸ்ஸொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சிறுகாயங்களுடன் தப்பியுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.
வியாழக்கிழமை (07) மதியம் இடம்பெற்ற இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்த நிலையில் பேருந்துக்கு அடியில் இருந்து எடுக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
 



 

Sunday, August 3, 2014

அநியாயமாக உயிரைப் பறித்த தொலைபேசிக் காதல்! யாழ் குருநகரைச் சேர்ந்த இளைஞர் மரணம்...

தொலைபேசி அழைப்பு மூலமாக அறிமுகமான முன்பின் அறியாத பெண்ணைக் காதலித்தார் எனக் கூறப்படும் இளைஞர் ஒருவர் அந்தக் காதல் முறிவடைந்ததால் அதிக மருந்து வில்லைகளை விழுங்கி மரணமானர்.
இவ்வாறு மரணமானவர் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த றொபின்சன் ரவிராஸ் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.
இந்த விடயம் குறித்து மேலும் அறியவருவதாவது:-
தவறான தொலைபேசி அழைப்பு ஒன்றினால் குறித்த இளைஞருக்கு பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொலைபேசி வாயிலாக அறிமுகம் ஆவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ இருவரும் சந்திக்காத நிலையில் அந்தப் பெண்ணை குறித்த இளைஞர் காதலித்தார் எனக் கூறப்படுகின்றது.
தொடர்ச்சியாக அந்த இளைஞர் தனது தொலைபேசி மூலமாகவே காதலை வளர்த்து வந்த நிலையில் குறித்த பெண் அந்த இளைஞருடனான உறவை திடீரெனத் துண்டித்தார் எனக் கூறப்படுகின்றது.
இதனால் மனமுடைந்து போன இளைஞர் தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதற்கு முன்னர் அவர் தற்கொலைக்கு முயன்றபோதும் உறவினர்கள் அவரைக் காப்பாற்றியதுடன் அவருக்கு அறிவுரைகளும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு குறித்த இளைஞர் அளவுக்கு அதிகமான மருந்து வில்லைகளை உட்கொண்டுள்ளார். அவரது நடவடிக்கையில் மாற்றத்தை அவதானித்த உறவினர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவரை சேர்ப்பித்தனர்.
எனினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அந்த இளைஞர் நேற்றுக் காலை வைத்தியசாலையிலேயே உயிரிழந்தார் எனக் கூறப்படுகின்றது.

ஜனவரி மாதம் பாப்பாண்டவர் இலங்கைக்கு விஜயம்.மன்னார் மடுவுக்கும் வருமாறு போப்புக்கு அழைப்பு...

மன்னார் மடு தேவாலயத்திற்கு விஜயம் செய்யமாறு பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் பாப்பாண்டவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

எவ்வாறெனினும் பாப்பாண்டவரின் இலங்கை விஜயம் குறித்த நிகழ்ச்சி நிரல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

எதிர்வரும் நாட்களில் பாப்பாண்டவரின் இலங்கை விஜயம் குறித்த நிகழ்ச்சி நிரல்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.