Wednesday, August 27, 2014

100 வயது பாட்டிக்கு 120 பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள்...

 பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கொள்ளுப் பேரப்பிள்ளைகள் என 120 பேரை கண்ட பெண்மணி ஒருவர் பற்றிய செய்தி பொலன்நறுவை பிரதேசத்தில் இருந்து கிடைத்துள்ளது.
இந்த பெண்மணி ஹிங்குரக்கொட ஹத்தமுனகொட்டுவேல பிரதேசத்தில் வசித்து வருகிறார். 100 வயதாகும் இந்தபெண்மணிக்கு 11 பிள்ளைகள்.
இவரது மூத்த மகனுக்கு 81 வயது. டி.ஏ. கருணாவதி என்ற இந்த பெண்மணியின் கணவர் 41 வருடங்களுக்கு முன்னர் காலமானார்.
100 வயதாகும் கருணாவதி சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.







Saturday, August 23, 2014

நல்லூர் கந்தனுக்கு தேர் திருவிழா. (படங்கள்-வீடியோ இணைப்பு)

நல்லூர் கந்தன் ஆலயத்தில் இன்று(23-08-2014) தேர் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்லாயிரக் கணக்கான மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் நல்லூர் கந்தனை தரிசித்து நல்லூர் கந்தனின் அருளை வேண்டுவதற்காக இங்கு வந்திருந்தனர்.

























மூன்று பிரசவங்களில், ஏழு ஆண் குழந்தைகள்!!! - கொழும்பில் விநோத சம்பவம்...

முதல் இரண்டு பிரசவங்களின் போதும் இரட்டை சிசுக்களை பெற்ற பெண்ணொருவர் தனது மூன்றாவது பிரசவத்தில் மூன்று சிசுக்களை பிரசவித்த விநோத சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. 

கொழும்பு, மருதானையை சேர்ந்த பாத்திமா நிரோஷா என்ற 31 வயதுடைய பெண்ணே இவ்வாறு தனது முன்றாவது பிரசவத்தின் போது 3 ஆண் சிசுக்களை பெற்றுள்ளார். இப்பெண் ஏற்கனவே முதலாவது பிரசவத்தில் இரட்டை சிசுக்களை பிரசவித்துள்ளதுடன் இரண்டாவது பிரசவத்திலும் இரட்டை சிசுக்களை பெற்றார். இந்நிலையிலே மூன்றாவது பிரசவத்திலும் அவர் மூன்று சிசுக்களை பிரசவித்துள்ளார்
டி சொய்சா பிரசவ வைத்தியசாலையிலே இவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. இவரது முதல் இரண்டு பிள்ளைகளுக்கும் தற்போது 15 வயதாகிறது.
சாஹிர் அப்துல் கரீம், பாத்திமா நிரோஷா தம்பதிக்கு தற்போது மொத்தமாக 7 ஆண் பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பாத்திமா நிரோஷா உலகிலேயே மூன்று பிரசவங்களின் போதும் அதிகமான எண்ணிக்கையில் சிசுக்களை பெற்றவர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்கக்கூடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தற்போது, தாயும் சிசுக்களும் நலமாக உள்ளதாக டி சொய்சா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இணையத்தில் வெளியான ஹன்ஷிகாவின் குளியல் வீடியோ...!

குளிப்பதை தானே வீடியோ  எடுத்து வெளியிட்ட ஹன்சிகா . திரையுலகினர் அதிர்ச்சி.




இலங்கையில் எபோலா வைரஸால் பெண்ணொருவர் மரணம்...???

கண்டியைச் சேர்ந்த பெண்ணொருவர் எபோலா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.  கண்டி, ரிக்கிலகஸ் கடையைச் சேர்ந்த பெண்ணொருவர் இந்தியாவுக்குச் சென்று திரும்பிய நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், உலகை பீதியடைய வைத்துக் கொண்டிருக்கும் எபோலா வைரஸ் இவருக்கு தொற்றியிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. 
 இதன் காரணமாக அப்பெண்ணின் சடலத்திலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இவருக்கு எபோலா வைரஸ் தொற்றியிருக்கின்றதா என்பது தொடர்பில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை, 
அவருடைய சடலம் தாங்கிய சவப்பெட்டி சீல் வைக்கப்பட்ட நிலையில் சுமார் எட்டு அடி குழித் தோண்டி புதைக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும் எண்ணெய்...

தேங்காய் எண்ணெய் - 1 கப்   
மலர்ந்த மகிழம் பூ, செண்பகப் பூ - 1 கப் 

இவற்றை தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சவும். அதுவே திரவத் தைலமாக மாறியவுடன் அதை ஆற வைத்து வடிகட்டவும். பின்பு, லேசாக சுடவைத்து உள்ளங்கால், பாதம், நகங்கள், கைகள், கழுத்துப் பகுதி… என உடல் முழுவதும் நன்கு தேய்த்துக் கொள்ளவும்.
சூடு குறைவாக இருந்தால் மீண்டும் சிறிது தைலத்தை சூடு செய்து முகத்தில் மூக்கு, கண்களில் பூசி, முகமெங்கும் சிறிது பேஷியல் ஸ்ட்ரோக் கொடுத்து பரவலாக எண்ணையை தடவவும். பின்னர், மீதமுள்ள எண்ணையை தலைமுடியில் நன்கு மாலிஷ் செய்து சீவி விடும் போது, நுனிப்பிளவு இல்லாமல், முடி செழுமையாக வளரும்.
தைலம் தேய்த்து 10 நிமிடம் ஆனபின், வெது வெதுப்பான நீரில் உச்சி முதல் உள்ளங்கால் வரை பயத்தம் மாவு அல்லது மூலிகை சோப் கொண்டு குளிக்கவும். இதை தினசரி பழக்கத்தில் கொண்டு வந்தால் சருமம் உஷ்ணத்தினாலும், குளிர்ச்சியாலும் பாதிக்காமல் இருக்கும். நல்ல பளபளப்புடன் கூடிய பொலிவும் பெறலாம்.
பாதாம் ஆயில் – 1 கப்
மரிக்கொழுந்து – 1 கப்
மரிக்கொழுந்து இலைகளை மட்டும் ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். அதில் பாதாம் ஆயிலைக் கலந்து காய்ச்சி வடிகட்டவும். இந்த எண்ணையை தினமும் முதலில் தலையில் நன்கு தேய்த்து தலைமுடியை ஐந்து நிமிடம் சீவி தலைமுடியை நன்கு கட்டவும். பிறகு, முகம், கழுத்துப் பகுதிகளில் தைலத்தை பூசவும். தினமும் காலையில் இது போன்று செய்வதை பழக்கப் படுத்திக் கொள்ளவும். பின்னர், மீதமுள்ள தைலத்தை உடலெங்கும் பூசிக் குளித்து வந்தால், தலை முடி மற்றும் சருமம் நன்கு புத்துணர்ச்சியுடனும் வாசனையுடனும் விளங்கும்