Saturday, July 21, 2012

மூன்று மார்புகளுடன் கலக்கும் காத்லீன் லீப்! (படங்கள் இணைப்பு )




ஹாலிவுட்டில் ஒரு படத்திற்காக ஒரு நடிகை மூன்று மார்புகளுடன் காட்சி அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த நடிகையின் பெயர் காத்லீன் லீப்.
சாண்டியாகோவில் நடந்த காமிகான் நிகழ்ச்சியின்போது மூன்று மார்புகள் தெரிய அவர் வந்தபோது அனைவரும் வியந்து போய் அங்கேயே பார்த்தனர்.
லென் வைஸ்மேனின் டோட்டல் ரீகால் படத்தின் ரீமேக்கில்தான் இப்படி மூன்று மார்புகளுடன் தோன்றுகிறார் காத்லீன்.
மூன்று மார்புகளும் வெளியில் தெரியும்படியாக அவர் கவர்ச்சிகரமான உடையுடன் வந்தபோது நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அத்தனை பேரின் பார்வையும் மூன்று மார்புகள் மீதுதான் விழுந்தது.
இந்த மார்பு நிஜமான மார்பு அல்ல, மாறாக செயற்கையாக உருவாக்கப்பட் மார்பு, டோட்டல் ரீகால் படத்தில் இப்படி மூன்று மார்புகளுடன் அவர் தோன்றுகிறார். பட புரமோஷனுக்காக செயற்கை மார்பகத்தைப் பொருத்தியபடி அவர் வந்திரு்நதார்.
நிஜமான மார்பு போலவே காத்லீனின் மூன்றாவது மார்பும் கம்பீரமாக காட்சி அளித்ததைப் பார்த்து பலரும் வியந்தனர்.
காத்லீன் டோட்டல் ரீகால் படத்தில் மூன்று மார்புகளுடன் நடிப்பது ஏற்கனவே ரசிகர்களிடையே கிளுகிளுப்பை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் நிஜமாகவே அதே கெட்டப்பில் அவரை நேரில் பார்த்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாகி விட்டது.
தன்னையே உற்றுப் பார்த்தவர்களைப் பார்த்து சிரித்தபடி காத்லீன் இப்படிச் சொன்னார்…உங்களுக்கு மூன்று கைகள் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் இல்லையா….!





பழைய புடவைகளை புதிதாக மாற்றி பயன்படுத்த ஐடியா!!!

அழகான பழைய துப்பட்டாக்களில் மூன்று இருந்தால், அழகான புடவை ஒன்றை புதிதாக உருவாக்கிவிடலாம். மூன்று தாவணிகள் இருந்தாலும் அதை புதிய புடவையாக டிசைன் செய்துவிடலாம். பழைய ஒன்றிரண்டு புடவைகளின் அழகான டிசைன்களை இணைத்துகூட, புதிய டிசைன் புடவை உருவாக்கலாம். அதனால் பணச்செலவு மிச்சமாகும்.
புதிய டிசைன் புடவைகளும் கிடைக்கும். இரண்டு `ஸ்டைல்’களை கலந்தும் புதிய ஸ்டைல் உருவாக்கலாம். அப்படி உருவானது `காக்ரா சாரி`. இதன் முன்பகுதி காக்ரா மாதிரி இருக்கும். பின் பகுதி புடவைபோல் தோன்றும். `தாவணி ஸ்டைல்’ புடவையில் ஒரு புடவை இரு கலராகத் தெரியும். தூரத்தில் இருந்து பார்த்தால் பாவாடை- தாவணி அணிந்திருப்பதுபோல் தோன்றும்.
பெரும்பாலும் மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்), கிளாமரஸ் பிரிவு (பளிச்சென்ற ஜிகினா ஸ்டைல் உடைகளில் ஆர்வம் கொள்பவர்களுக்கான வகை), டிரமாட்டிக் ஸ்டைல் (இந்த வகை உடைகளில் ஒரு நாடகம் அரங்கேறியதுபோல் காட்சிகள் இருக்கும். இந்த வகை உடைகள் எல்லோரது பார்வையையும் சுண்டி இழுக்கும்), கிரியேட்டிவ் ஸ்டைல் (இவர்கள் தங்கள் கற்பனைக்கு தக்கபடி புதிதாக ஆடைகளை வடிவமைத்து கேட்பவர்கள்).
ஒரு பெண் இந்த 6 வகை உடைகளில் எதில் கவனம் செலுத்துகிறாரோ அதை வைத்து அவர் டேஸ்ட், குணங்களை கணித்துவிடலாம். தமிழ் நாட்டில் கிளாசிக்கல் அண்ட் டிரடீஷனல் உடைகளை தேர்ந்தெடுப்பவர்களே அதிகம். அடுத்த இடத்தில் எலிகண்ட் ஸ்டைல் இருக்கிறது என்று வகை வகையாய் உடைகளை வைத்தே பெண்களின் குணங்களை கணித்து சொல்கிறார்கள்..

தென் ஆப்ரிக்காவுக்கெதிரான டெஸ்ட்டில் சதம் கடந்தார் அலியஸ்டர் குக்...




தென் ஆப்ரிக்காவுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆண்ட்ரு ஸ்ட்ராஸ் ஓட்டங்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அலியஸ்டர் குக் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் 115 ஓட்டங்களும், அடுத்து களமிறங்கிய ஜொனதன் ட்ராட் 71 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய கெவின் பீட்டர்சன் 42 ஓட்டங்களும், இயன் பெல் 13 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்பு களமிறங்கிய பிரெஸ்னன் 8 ஓட்டங்களும், ஸ்டுவர்ட் பிராட் 16 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து அணி இரண்டாம் நாளான இன்று 8 விக்கெட் இழப்பிற்கு 377 ஓட்டங்கள் எடுத்து துடுப்பெடுத்தாடி வருகிறது. மேட் பிரியர் 58 ஓட்டங்களும், கிரேம் ஸ்வான் 11 ஓட்டங்களும் எடுத்துள்ளனர்.








கேரள அரசு விருது: சிறந்த நடிகர் திலீப், சிறந்த நடிகை ஸ்வேதாமேனன்




கேரள அரசு ஆண்டுதோறும் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.இந்த வகையில், 2011ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் கலைஞர்களை தெரிவு செய்வதற்காக விருது கமிட்டி தலைவராக பாக்யராஜ் நியமிக்கப்பட்டார்.
விருது பெறும் கலைஞர்களின் விவரங்களை கேரள மந்திரி கணேஷ்குமார் திருவனந்தபுரத்தில் நேற்று அறிவித்தார். சிறந்த நடிகராக வெள்ளரிப்பிரா வின்டே சங்காதி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் திலீப் தெரிவு செய்யப்பட்டார்.
சால்ட் அன்ட் பெப்பர் படத்தில் நடித்த ஸ்வேதாமேனன் சிறந்த நடிகையாக தெரிவு செய்யப்பட்டார். சிறந்த படமாக இந்தியன் ருப்பி தெரிவு செய்யப்பட்டது.
சிறந்த இயக்குனருக்கான விருதை பிளஸ்சியும் (பிரணயம்), சிறந்த இசையமைப்பாளராக சரத் (இவன் மேகரூபன்), பாடகராக சுதீப்குமார் (ரதி நிர்வேதம்), பாடகியாக ஸ்ரேயா கோஸல், பாடல் ஆசிரியராக ஸ்ரீகுமாரன்தம்பி, நகைச்சுவை நடிகராக ஜெகதி ஸ்ரீகுமார், புதுமுக இயக்குனராக ஷெர்ரி (ஆதிமத்யாந்தம்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான விருது அடுத்த மாதம் திருவனந்தபுரத்தில் நடக்கும் விழாவில் வழங்கப்படுகிறது.

அன்னாசியின் மருத்துவ குணங்கள்!

இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமான பழங்களில் ஒன்று அன்னாச்சி பழம்.அன்னாசியில் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைய உள்ளன. சமீபத்திய ஆய்வுகளில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.அன்னாசி பெரும்பாலும் வெப்பமான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. தையாமின் மற்றும் வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது.அன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும்.இது இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாப்பளிக்கிறது. இப்பழத்தில் உள்ள இதர பிற வைட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.இது சோர்வின்றி செயல்பட ஏதுவாகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்னாசி நிறைய சாப்பிடலாம் என்கின்றனர் டாக்டர்கள்.அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்தாகும்.நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து விதமான உடல் உபாதைகளும் தீரும். இதை தொடர்ந்து ஜூஸ்சாகவும் குடித்து வர ஆண்களின் முக அழகு பொலிவு பெருகும்.ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் சாப்பிட்டால் போதும். பழம் புதிய பழமாக இருக்க வேண்டும். பொட்டாசியம், கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது.அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது. இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.

வாய் துர் நாற்றத்தை சரிசெய்வது எவ்வாறு ?

வாய் துர் நாற்றம் , வாயில் குடியிருக்கும் (Anaerobic gram negative bacteria) நுண் கிருமிகள் பிராணவாயு இல்லாத சூழ் நிலையிலும் பெருகும். நுண்கிருமிகள் வெளியேற்றும் கழிவுகளால் துர் நாற்றம் உண்டாகிறது. சாதாரணமாக வாயிலுள்ள நுண்கிருமிகளால் வெளியேறும் கழிவுகளில் ஆவியாகக் கூடிய கந்தக (Sulfur) கூட்டுப் பொருட்கள் உள்ளன. அழுகிய முட்டையிலிருந்து வெளியேறும் Hydrogen sulfide, குப்பைக் கிடன்கிலிருந்து வரும் Methyl mercaptan, கடல் புறங்களிலிருந்து வெளியாகும் Dimethyl sulfide ஆகிய கழிவுகள் வாயிலுள்ள நுண் கிருமிகளிலிருந்து வெளியேறுகின்றன. இவைகள் Volatile Sulfur Compound (VSC) என்றழைக்கபடுகின்றன.

வாயிலிருக்கும் நுண்கிருமிகளால் வெளியேறும் இன்னும் வேறு பல கழிவுகளும் துர் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

Cadaverine – இறந்த உடலிலிருந்து வெளியேறும் நாற்றம்,
Putrescine – அழுகும் இறைச்சியிலிருந்து ஏற்படும் நாற்றம்.
Skatole – மனிதக் கழிவிலிருந்து ஏற்படும் நாற்றம்.
Isovaleric acid – வியர்க்கும் பாதத்திலிருந்து ஏற்படும் நாற்றம்.


கிருமிகள் பெருகுவதற்கு தேவையான உணவு நாம் உண்ணும் மீன், இறைச்சி, முட்டை, பால் போன்ற புரத உணவிலிருந்தும், உமிழ் நீர், வாயின் உட்புறத்தில் கழியும் திசுக்களிலிருந்தும் கிடைக்கிறது. வாயை, சாப்பிட்ட ஒவ்வொரு முறையும் நன்றாக கொப்பளிக்காததால் உணவுப் பொருட்கள் வெண்மையான காரையாக பற்களின் இடுக்குகளில், பற்களின் மேல், ஈறுகளுக்கு உட்புறம் மற்றும் நாக்கின் பிற்பகுதியில் மாவு போன்ற வெண் படலமாக படிந்து விடுகிறது. வெண்படிமம் 0.1 – 0.2 மி.மீ அளவில் இருந்தாலும் கிருமிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் பெருகி கழிவுகளை வெளியேற்றுகின்றன.
பற்கள் கட்டியிருந்தால், அதற்கும், வாய்க்கு இடையிலும் உணவுப் பொருட்கள் தங்கி கிருமிகள் வளர ஏதுவாகிறது. வாயிலும், நாக்கிலும், பற்களின் இடுக்குகளிலும் உள்ள இடத்தில் குடியேறி கழிவுகளை வெளியேற்றும் கிருமிகளுக்கும், பிற கிருமிகளுக்கும் நிரந்தர போட்டி நடந்து கொண்டேயிருக்கிறது. இக்கிருமிகளும், அதன் கழிவுகளும் எல்லோரின் வாயிலும் இருக்கின்றன. வாயையும், பற்களையும் சுத்தமாக வைத்திருப்பவர்கள் பலருக்கு நாற்றம் இல்லாமல் இருக்கிறது. வாயையும், பற்களையும் சரியாக பராமரிக்காதவர்களுக்கு நாற்றம் மிகுந்து இருக்கிறது.

அடுத்து,  வாயின் உட்பகுதியில் ஈறு நோய் (Gum disease – Chronic Periodontitis) பாதிப்புள்ளவர்களுக்கும் வாயில் துர் நாற்றம் ஏற்படலாம். குறிப்பாக நாக்கின் பின் புறத்திற்கு அருகிலுள்ள பற்கள் மற்றும் ஈற்றின் இடைவெளிகளில் உணவுப் பொருட்களின் படிமம் தேங்குகிறது. இந்த இடங்களிலும் நுண் கிருமிகள் தங்கி பற்களைச் சுற்றியுள்ள எலும்புப் பகுதியை அரித்து, பற்களில் குழியை (Periodontal pockets) ஏற்படுத்துகிறது. இந்த குழிகளிலும் மேலும் உணவுப் பொருட்களும், கிருமிகளும் தங்கி, கழிவுப் பொருட்களை உற்பத்தி செய்து வாய் துர் நாற்றத்தை அதிகரிக்கிறது.

வாய் துர் நாற்றத்திற்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது?

1. நாக்கை சுத்தம் செய்வது மிகவும் முதன்மையானதும் அவசியமானதுமாகும். நாக்கின் முன் பாதி சாப்பிடும் போதும், பேசும் போதும் அடிக்கடி வாயின் மேல்புறத்தில் (Hard palate) உராய்வதால் இயற்கையாகவே சுத்தமாகிறது. ஆனால் நாக்கின் பின் பகுதி மிருதுவான Soft palate ல் உராய்வதால் போதுமான அளவில் சுத்தமாவதில்லை.  வாயில் உற்பத்தியாகும் கிருமிகளையும், கந்தக காம்பௌன்ட் கழிவுகளையும் நீக்கக் கூடிய குளோரின் டை ஆக்ஸைடு அல்லது Cetylpyridinium குளோரைடு கலந்த பற்பசையைப் பயன்படுத்த வேண்டும். Tooth brush மற்றும் பிளாஸ்டிக் ஸ்பூன் அல்லது Tooth scaraper உபயோகித்து நாக்கின் பின்பகுதியையும், பற்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

2. முறையான இடைவெளியில் பல் மருத்துவரிடம் ஈறு பரிசோதனையும், பற்களை சுத்தம் செய்வதும் மிக அவசியம். பற்களின் நிலைமையும், ஈறு நன்றாக வீக்கமின்றி இருக்கிறதா என்பதையும் பல் மருத்துவரிடம் முறையாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும். பற்களில் காரை படிந்தும், எலும்பு தேய்ந்து பற்குழிகள் ஏற்பட்டிருந்தாலும் தகுந்த சிகிட்சை அளித்து பற்களைக் காப்பாற்றி, துர் நாற்றத்தையும் தவிர்க்க உதவுவார்.

3. புரதச்சத்துள்ள ஆகாரத்தை குறைத்தும், அதே நேரத்தில் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துள்ள உணவைச் சாப்பிட்டு வந்தால், வாயில் நுண் கிருமிகள் வளர வாய்ப்பிருக்காது. இத்துடன் புரதச் சத்துள்ள உணவைச் சாப்பிட்ட போது முறையாக நாக்கின் பின் பகுதியை சுரண்டி வழித்தும், பற்களுக்கு இடையில் சிக்கியுள்ள புரத உணவுத் துகள்களை Floss உபயோகித்து நீக்கியும், வாய் கொப்பளிக்கும் கிருமி நாசினி மருந்து (Chlorhexidine, Povidone 2% Gargle) திரவத்தால் வாய் கொப்பளித்தும் வாய் துர் நாற்றத்தைப் போக்கலாம்

4. வாயில் எப்பொழுதும் ஈரப்பதம் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரவில் தூங்கும் போது உமிழ் நீர் சுரப்பது குறைந்து, தூங்கி எழும் போது காலையிலும், நீண்ட நேரம் பேசினாலும், பேசிய பின்னும் ஈரப்பதமின்றி வாய் உலர்ந்து விடும். வாயில் ஈரப்பதம் இல்லையென்றால் துர் நாற்றம் வீசும். இதை தவிர்க்க தினமும் நிறைய நீர் குடிக்க வேண்டும். இது உமிழ் நீர் சுரக்க உதவி, வாய் ஈரப்பதத்துடன் இருக்கும். அடிக்கடி நல்ல நீர் கொண்டு வாய் கொப்பளிப்பதால் ஈரப்பதத்துடன், வாயிலுள்ள கிருமிகளையும் அதன் கழிவுகளையும் அகற்றலாம். சர்க்கரையில்லாத மிட்டாய்கள் சுவைப்பதாலும் வாயிலுள்ள ஈரப்பதத்தை அதிகமாக்கி துர் நாற்றத்தை போக்கலாம்.

5. கிருமி நாசினியாக வாய் கொப்பளிக்கும் மருந்தையும் (Mouth wash) பயன்படுத்த வேண்டும். வாய் கொப்பளிக்கும் மருந்து 1. நுண் கிருமிகளை அழிக்கும் தன்மையது, 2. வாய் நாற்றம் தரும் கந்தக கூட்டுப் பொருட்களை சமன் செய்வது என இரண்டு வகைப்படும்.  Listerine, Cetylpyridinium Chloride mouth wash ஆகிய இரண்டும் நுண் கிருமிகளை அழிக்கும் தன்மையுடையது. Zinc ions உள்ள Mouth wash வாயில் நுண் கிருமிகளால் உற்பத்தியாகும் கந்தகம் கலந்த கழிவுப் பொருட்களை சமன் படுத்தும் தன்மையுடையது. இரண்டு தன்மையும் உடைய Chlorine dioxide அல்லது Sodium chlorite கலந்த Mouth wash ம் உபயோகிக்கலாம்.

சில பற்கள் அல்லது முழுவதும் (Full denture) பல் கட்டியிருந்தால், சாப்பிட்ட பின் ஒவ்வொரு முறையும் அவைகளையும் கழற்றி நன்றாக கழுவிய பின் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இரவில் தூங்கும் போது பல் செட்டை கழற்றி, பற்பசை கொண்டு பிரஷ்சால் செட்டின் உட்புறமும் வெளியிலும் தேய்த்து தனியாக ஒரு கப்பில் வைத்து விட வேண்டும். பல் செட்டில் இயற்கையாகவே நுண் துளைகள் இருக்கும். எனவே துளைகளுக்குள் சென்று சுத்தம் செய்யக் கூடிய கிருமி நாசினி யை உபயோகித்து இரண்டு வேளையும் பல் செட்டை சுத்தம் செய்ய வேண்டும்.

மேற் கூறிய எல்லா முறைகளையும் பின் பற்றினால்தான் வாய் துர் நாற்றத்தை முழுமையாக நீக்கலாம்.