
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆண்ட்ரு ஸ்ட்ராஸ் ஓட்டங்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அலியஸ்டர் குக் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் 115 ஓட்டங்களும், அடுத்து களமிறங்கிய ஜொனதன் ட்ராட் 71 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய கெவின் பீட்டர்சன் 42 ஓட்டங்களும், இயன் பெல் 13 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்பு களமிறங்கிய பிரெஸ்னன் 8 ஓட்டங்களும், ஸ்டுவர்ட் பிராட் 16 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து அணி இரண்டாம் நாளான இன்று 8 விக்கெட் இழப்பிற்கு 377 ஓட்டங்கள் எடுத்து துடுப்பெடுத்தாடி வருகிறது. மேட் பிரியர் 58 ஓட்டங்களும், கிரேம் ஸ்வான் 11 ஓட்டங்களும் எடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment