Sunday, April 1, 2012

விதவிதமான உணவுகளை சமைக்கும் தல அஜித்



கொலிவுட் நாயகன் அஜீத் குமார், சமையல் செய்வதை தன்னுடைய பொழுதுபோக்காக வைத்துள்ளார்.
அஜித்குமார் பிரியாணி செய்து படக்குழுவினரை அசத்துவதில் மிகவும் திறமையானவர்.



படப்பிடிப்பிற்கு வரும் போது பிரியாணி செய்து கொண்டு வந்து அங்குள்ள இதர நடிகர், நடிகைகளுக்கு பரிமாறி அவர்களை மகிழ்விப்பார்.


மேலும் தன் குடும்பத்தினரோடு உணவு நிலையங்களுக்கு சென்றால் அங்கு தயாரிக்கப்படும் சுவை மிகுந்த உணவை வீட்டில் வந்து செய்து பார்ப்பார். உணவு தயாரிக்கும் போது ஏதேனும் சந்தேகம் வந்தால் உடனே அந்த உணவு நிலையத்திற்கு போன் செய்து சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வார்.


படப்பிடிப்பு முடிந்து வீட்டில் ஓய்வெடுக்கும் சமயங்களில் பல வகையான உணவுகளை சமைத்துப் பார்ப்பதை தல அஜித் தனது பொழுதுபோக்காக வைத்துள்ளார்.


அவருடைய மனைவி ஷாலினி மகள் அனோஷ்காவை விதவிதமாக படமெடுத்து ஆல்பம் உருவாக்குவதை பொழுதுபோக்காக வைத்துள்ளார்.


தற்போது அஜித்குமாரின் “பில்லா 2” திரைப்படம் மே இரண்டாம் வாரத்தில் ரசிகர்களுக்கு விருந்தாக வரவுள்ளது.


தெலுங்கில் நடிக்க தயாராகும் அமலாபால்

தமிழில் தனது நடிப்பாலும் திறகையாலும் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட வந்த அமலாபால் தற்போது தெலுங்கு படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகின்றார்.
இந்த அருமையான வாய்ப்பை 'காதலில் சொதப்புவது எப்படி' என்கின்ற படத்தின் மூலம் அமலா பாலிற்கு கிடைத்துள்ளது.கடைசியில் சொதப்புவது எப்படி என்பதை தியேட்டரில் லைட் போடும் போதுதான் காண்பித்தனர் நம்ம ஊரு ரசிகர்களுக்கு.ஆனால் ஆந்திராவில் இந்த படம் நல்ல வசூலை பெற்றுள்ளது. சமீபத்தில் ஆந்திராவுக்கு போயிருந்த அமலா பாலை பார்வதி.. பார்வதி.. என்று துரத்த ஆரம்பித்துவிட்டார்களாம் ரசிகர்கள்.இந்த படத்தின் வெற்றி எனக்கு தெலுங்குலேயும் பெரிய இடத்தை பிடித்து தரும் என்று நம்புவதாக அமலா பால் தெரிவித்துள்ளார்.அந்த வகையில் ராம்சரண் தேஜாவுடன் ஒரு படத்தில் அமலா பால் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளன.






Daya Master would be the next Northern Chief Minister?

Former LTTE media spokesman Daya Master currently preparing to contest in the upcoming Northern provincial council election, informed sources said.Daya Master currently work
has a journalist and director of the media organization which operates in the Northern Province.Media friends met Daya Master recently had requested him to contest for the post of Northern Chief Minister in the upcoming Northern Provincial council election. During the time of conversation Daya Master also agreed to contest in the upcoming election.Daya Master also went on to say it was unclear that in which party he would contest in the election and also added at present he has earned the love of all party members due to this he will work according to the opinions and wishes of the people in the Northern province. Master further said while serving in the LTTE organization he always tried to render services for people in the Province.When a media fried questioned him about his stance on contesting in the Tamil National Alliance Daya Master fail to reply and maintain silence this regard.

Implement LLRC proposals in the country: Ban Ki-moon

United Nations General Secretary, Ban Ki-moon, has expressed his desire to see the implementation of the recommendations of the Lessons Learnt
and Reconciliation Commission Speaking to media an official at the office of the spokesperson for the UN Secretary General explained that Ban Ki-moon has welcomed the US Resolution as it called for the implementation of the LLRC report.The official, who did not wish to be named, stated that the Secretary General believed that Sri Lanka could only achieve reconciliation and lasting peace through good governance, a point highlighted in the LLRC report.“Ban Ki-moon believes that the LLRC report is full of recommendations which are vital to Sri Lanka moving past the conflict. He hopes that the government will set about implementing it”, the official said.The Secretary General’s office defended its move by claiming it was done “as a matter of transparency”.Sri Lanka rejected the report claiming that it was fundamentally flawed and based on biased material which could not beverified

மின்சார சபையின் பொறுப்பற்ற செயற்பாட்டால் பாதிப்புறும் மக்கள்


வலிகாமம் பகுதியில் உள்ள சுன்னாகம், மல்லாகம், தெல்லிப்பளை, அளவெட்டி, மருதனார்மடம், உடுவில் பகுதிகளில் அடிக்கடி நிகழும் மின் அதிகரிப்பினால் தொடர்ச்சியாக மின்சார உபகணங்கள் எரிவதுடன் பழுதடைந்தும் வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்களின் பெருமளவான இலத்திரனியல் மின் உபகரணங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து மின்சார சபையிடம் முறையிட்டும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மருதனார்மடம் சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் இரண்டு பம்பிகள் எரிந்துள்ளதுடன் அயலில் உள்ள வீடுகள், கடைகளில் இருந்த மின் உபகரணங்களும் பழுதடைந்துள்ளன.
இதேபோன்று, கடந்த வாரம், தெல்லிப்பளை, அளவெட்டி, மல்லாகம் பகுதிகளிலும் இத்தகைய சம்பவம் இடம்பெற்றதுடன் பல லட்சம் ரூபா பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் சேதமடைந்துள்ளன.
இது தொடர்பில், மின்சார சபையின் அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மக்களுக்கு அந்த அதிகாரிகள் பொறுப்பற்ற பதில்களையே வழங்கியுள்ளனர்.
அண்மையில் காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வீதி அகலிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மின்கம்பங்களை இருந்த இடத்தில் இருந்து மாற்றி புதிய இடங்களில் பொருத்தத் தொடர்ந்ததைத் தொடர்ந்தே இந்த அவலம் பொது மக்களுக்கு ஏற்படத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக மின்சாரக் கம்பிகள் உரிய முறையில் இனைக்கப்படாமையாலும் கம்பிகள் இறுக்கமான நிலையில் பூட்டப்படாமையாலும் ஒரு கம்பியுடன் மற்றைய கம்பி படுவதினாலும் மற்றும் உரிய முறையில் மின் கம்பிகள் உரிய மின்மர்றறிகளுக்கு பொருத்தப்படாமையாலும் மின்சாரம் கூடிக்குறையும் நிலைமை ஏற்பட்டு பொது மக்களினதும் வியாபாரிகளினதும் இலத்திரனியல் உடைகள் பாதிக்கப்படும் நிலமை காணப்படுகின்றமையும் சுட்டிக் காட்டக் கூடியதாகும்.


பனிக்கட்டி மழையுடன் வவுனியாவில் சூறாவளி செட்டிகுளம் முகாமில் 2000 இற்கும் மேற்பட்டோர் நிர்கதியில் கூரைகள் பறந்தன; குடிசைகள் வெள்ளத்தில் அள்ளுண்டன

வவுனியாவில் நேற்று மாலை ஏற்பட்ட திடீர் மினி சூறாவளியால் செட்டிகுளம், கதிர்காமர் மற்றும் ஆனந்தக்குமாரசுவாமி முகாம்கள் கிட்டத்தட்ட அழிந்து போயின. அங்கு தங்கியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள்  நிர்க்கதி ஆகினர்.
கடும் காற்றுடன் கூடிய பனிக்கட்டி மழை கொட்டித் தீர்த்ததால் முகாம்களில் இருந்த குடிசைகள் வெள்ளத்தில் அள்ளுண்டன. காற்றினால் குடிசைகள் சாய்ந்தன. இவற்றில் சிக்குண்டு 14 பேர் காயமடைந்தனர். 

நேற்று மாலை 5.30 மணியிலிருந்து 6.30 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் பனிக்கட்டி மழை கொட்டியது. கடும் காற்றும் வீசியது. காற்றினால் குடிசைகள் அனைத்தும் தரைமட்டமாகின. ஆனந்தக்குமாரசுவாமி முகாமில் 950 குடிசைகளும் கதிர்காமர் முகாமில் 272 குடிசைகளும் தரைமட்டமாகின. குடிசைகள் சாய்ந்து வீழ்ந்ததில் அவற்றுக்குள் மக்கள் சிக்கிக்கொண்டனர். இவர்களில் 14 பேரே காயமடைந்தனர்.காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடும் மழை காற்றினால் முகாமில் இருந்த மக்கள் பெரும் அல்லோல கல்லோலப் பட்டனர். மின்சார இணைப்புகள், தொலைபேசி இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன. மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். அனைத்து இடங்களிலும் வெள்ளம் தேங்கி நின்றது. இதனால் எங்குமே செல்ல முடியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவிகள் எவையும் கிடைக்கவில்லை. மக்களின் பொருள்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்தன. 

மரங்கள் வீழ்ந்தும் கூரைத் தகரங்கள் வெட்டியுமே மக்கள் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் கைக்குழந்தையுடன் இருந்த தாய்மார்கள், கர்ப்பிணிகள் உடனடியாக செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிதண்ணீர் எவையும் உடன் அங்கு இருக்கவில்லை. 

இதேவேளை பாதிப்புற்ற மக்களுக்கான உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி பி.எம். சாள்ஸ் தெரிவித்தார்.